search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு நிலத்தை ஆக்கிரமித்து வாடகைக்கு விடப்பட்ட கடைகளுக்கு சீல்- அதிகாரிகள் எச்சரிக்கை
    X

    அரசு நிலத்தை ஆக்கிரமித்து வாடகைக்கு விடப்பட்ட கடைகளுக்கு 'சீல்'- அதிகாரிகள் எச்சரிக்கை

    • கடைகளை காலி செய்யக் கோரி அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் வழங்கினர்.
    • முன்னதாக அனைத்து கடைகளுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    ஆலந்தூர், கத்திப்பாரா ஜி.எஸ்.டி. சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது.

    இது கடந்த 1967-ம் ஆண்டு தனியார் ஒருவருக்கு 40 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது. இங்கு மது பார், ஒட்டல், டீக்கடை என 17 கடைகள் கட்டப்பட்டு வணிக வளாகமாக செயல்பட்டது. குத்தகை முடிந்த பின்னரும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தொடர்ந்து ஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு செயல்பட்டு வந்தன.

    இதைத்தொடர்ந்து கடைகளை காலி செய்யக் கோரி அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் வழங்கினர். ஆனால் கடைகள் தொடர்ந்து செயல்பட்டன.

    இந்நிலையில் பல்லாவரம் தாசில்தார் முன்னிலையில் இன்று காலை வருவாய்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து செயல்பட்டு வந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.

    முன்னதாக அனைத்து கடைகளுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் கடைகளில் இருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் ரூ. 150 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இது தொடர்பான பெரிய பேனரையும் அங்கு வைத்தனர்.

    Next Story
    ×