search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vilathikulam"

    • விளாத்திகுளம் கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தை சேர்ந்த நாகரெட்டி என்பவரது மகன் நாகராஜன் என்ற வாலிபர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
    • டாக்டர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த வாலிபருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகில் திட்டங்குளம், கழுகாசலபுரம் சாலையில் கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விளாத்திகுளம் கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகரெட்டி என்பவரது மகன் நாகராஜன் என்ற வாலிபர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

    அப்போது அவ்வழியாக சென்ற மார்கண்டேயன் எம்.எல்.ஏ., உடனடியாக அந்த வாலிபரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் டாக்டர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த வாலிபருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

    • போட்டியில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • 15 வெள்ளிப் பதக்கத்தையும், 12 வெண்கல பதக்கத்தையும் ஸ்ரீஅம்பாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    விளாத்திகுளம்:

    பிரீமியர் லீக் அளவிலான கராத்தே போட்டி தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    கட்டா மட்டும் சண்டை பிரிவில் 14 தங்கப்பதக்கத்தையும், 15 வெள்ளிப் பதக்கத்தையும், 12 வெண்கல பதக்கத்தையும் ஸ்ரீஅம்பாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களை ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி நிர்வாகத்தினரும், பள்ளி முதல்வர் மாயாதேவி, பள்ளியின் கராத்தே பயிற்சியாளர் சென்சாய் முத்துராஜா மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பரிசுகள் வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயமீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள செங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 31 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளில் நடைபெற்ற கட்டுரை, ஓவியம், கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பரிசுகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயமீனா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வவடிவேல், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் சரஸ்வதி, புதூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சுமதி இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 174 மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • இதில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி மரக்கன்றுகள் வளர்ப்பதன் அவசியம் குறித்து பேசினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 174 மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி மரக்கன்றுகள் வளர்ப்பதன் அவசியம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை அன்னை ஷீபா பிளவர்லெட், புதூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ், மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, பேரூர் நகர செயலாளர் மருதுபாண்டியன், புதூர் பேரூராட்சி தலைவர் வனிதா அழகுராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. தகவல் தொழில் நுட்பஅணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • விளாத்திகுளம் அரசுப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • இதனைத்தொடர்ந்து பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கயிறு ஏறும் உபகரணத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அரசுப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 238 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா இலவச சைக்கிள்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கயிறு ஏறும் உபகரணத்தை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தவசிமுத்து, உடற்கல்வி இயக்குனர் பால்ச்சாமி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு செயலாளர் அன்புராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், நகர செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • இப்பகுதியானது கடற்கரை சார்ந்த பகுதி என்பதால், இங்குள்ள நிலத்தடிநீர் பெரும்பாலும் அதிகளவு உப்பாக இருக்கிறது.
    • இதன் காரணமாக தங்களது அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1 குடம் தண்ணீர் ரூ.10 முதல் ரூ.15 வரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே சூரங்குடி கிராமத்தில் சிலோன் காலனி என்ற பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    மக்கள் புகார்

    இப்பகுதியானது கடற்கரை சார்ந்த பகுதி என்பதால், இங்குள்ள நிலத்தடிநீர் பெரும்பாலும் அதிகளவு உப்பாக இருக்கிறது. எனவே இங்குள்ள மக்கள் தங்களின் குடிநீர் தேவைக்காக சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும் நீரையே நம்பியுள்ளனர்.

    ஆனால் அவ்வாறு வழங்கப்படும் சீவலப்பேரி குடிநீ2ரும் மாதத்திற்கு 2 முறை மட்டுமே விநியோகிக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இதன் காரணமாக தங்களது அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1 குடம் தண்ணீர் ரூ.10முதல் ரூ.15 வரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    சுத்திகரிப்பு நிலையம்

    இந்த சூழ்நிலையில் இம்மக்களின் நலன் கருதி கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் 14-வது நிதிக்குழு திட்டத்தின் மூலம் ரூ.8 லட்சம் மதிப்பில் சிலோன் காலனியில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

    இந்த சுத்திகரிப்பு நிலையம் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் மெத்தனப்போக்கினால் தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் வேலிச்செடிகள், குப்பைகள் என புதர்மண்டி வெறும் காட்சிப்பொருளாக காட்சியளித்துக் கொண்டி ருக்கிறது.

    எனவே சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருதோடு மட்டுமின்றி மாதத்திற்கு 2 முறை மட்டுமே விநியோகிக்கப்படும் சீவலப்பேரி கூட்டு குடிநீரையும் 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்க கலெக்டர் செந்தில்ராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புனரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று கோவிலில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
    • இதைத்தொடர்ந்து பேச்சியம்மன், மாரியம்மன், மாடசாமி மற்றும் வலம்புரி விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், பால், திருநீறு என பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ராஜீவ் நகரில் அமைந்துள்ள பேச்சியம்மன், மாரியம்மன், மாடசாமி கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று கோவிலில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணியளவில் மங்கள இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேகமானது, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவா ஜனம், அம்பாள் ரக்சா பந்தனம், யாகசாலை பூஜை, ஸ்பரிசாகுதி, திரவியாகுதி, வஸ்த்ராகுதி, மஹா பூர்ணாகுதி, யாத்ரா தானம் என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 9.30 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரை விமான கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகமானது சிறப்பாக நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து பேச்சியம்மன், மாரியம்மன், மாடசாமி மற்றும் வலம்புரி விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், பால், திருநீறு என பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் விளாத்திகுளம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங் களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் அன்னதானம் நடந்தது.

    • சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட திட்டங்களை எல்லாம் வழங்கி வருவது போல் மகளிர் உரிமைத்தொகையும் விரைவில் வழங்கப்பட உள்ளது என கனிமொழி எம்.பி. பேசினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் 77 பேர் மற்றும் 3-ம் பாலினத்தவர் 13 பேர் என 90 பயனாளிகளுக்கு ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்பு பெண்கள், மாற்றுத்திறனா ளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பஸ்சில் இலவச பயணம், கொரோனா காலத்தில் உதவித்தொகை, மக்களை தேடி மருத்துவம், மாற்றுத்தி றனாளிகளுக்கு உதவித்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட திட்டங்களை எல்லாம் வழங்கி வருவது போல் மகளிர் உரிமைத் தொகையும் விரைவில் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சிவசங்கர், வருவாய் கோட்டாட்சியர் ஜெயா, விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார்கள் பாலமுருகன், சுபா, சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சி யர் பாஸ்கரன், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, ஊராட்சி மன்ற தலைவர் போஸ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர், தி.மு.க. நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நேற்று வேடபட்டியில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக முனியசாமி விளாத்திகுளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேம்பார் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக முனியசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் பின் புறத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பேரிலோவன்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் முனியசாமி (வயது 63). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் 2 ஆண் குழந்தை கள் உள்ளனர். முனியசாமி பேரிலோவன்பட்டி பஞ்சாயத்து துணை தலை வராக இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று வேடபட்டியில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக முனியசாமி விளாத்திகுளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேம்பார் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முனியசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் பின் புறத்தில் அடை யாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் முனியசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் போலீசார் முனியசாமியின் உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போட்டியை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனிசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • சிறியமாடு, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 37 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சிறீப்பாய்ந்து சென்றன.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே கலைஞானபுரம் கிராமத்தில் உள்ள பாப்பாத்தி அம்மன், காந்தாரி அம்மன், முனியசாமி கோவில் ஆனிக்கொடை விழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சார்பாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. போட்டியை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனிசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தென்காசி. ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

    சிறியமாடு, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 37 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சிறீப்பாய்ந்து சென்றன. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாட்டுவண்டிகள் முதலிடங்களை பிடித்து வெற்றி பெற்றன.

    பின்னர் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை, குத்துவிளக்கு மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. மாட்டு வண்டி போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் கூடி கண்டு ரசித்தனர்.

    • வாராகி அம்மனை தரிசனம் செய்ய உகந்த தினமாக கருதப்படும் தேய்பிறை பஞ்சமி தினமும், வெள்ளிக்கிழமையும் ஒன்றாக கூடி வருவதையொட்டி கோவிலில் விசேஷ பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் வாழை இலையில் அரிசி, தேங்காய், பழம் வைத்து தேங்காய் விளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.

    விளாத்திகுளம்:

    ஆனி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு எட்டய புரம் அருகே உள்ள என். சுப்புலாபுரம் என்ற நரிப்பட்டி கிராமத்தில் உள்ள வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, விருதுநகர், ராம நாதபுரம் என பல்வேறு பகுதி களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.

    தேய்பிறை பஞ்சமி

    மேலும் வாராகி அம்மனை தரிசனம் செய்ய உகந்த தினமாக கருதப்படும் தேய்பிறை பஞ்சமி தினமும், வெள்ளிக்கிழமையும் ஒன்றாக கூடி வருவதையொட்டி கோவிலில் விசேஷ பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, வாராகி அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு எலுமிச்சை, செவ்வரளி, விரலி மஞ்சள், அதிரசம், தென்னங்குருத்து மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடத்தப்பட்டது.

    தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் வாழை இலையில் அரிசி, தேங்காய், பழம் வைத்து தேங்காய் விளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனை வருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    சிறப்பு பூஜைகள்

    இந்த நரிப்பட்டி வாராகி அம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி நாட்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பல்லா யிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சோலைமலையான்பட்டியில் புதிய சமுதாய நலக்கூடம் கட்ட பூமி பூஜை விழா நடைபெற்றது.
    • விழாவில் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள கீழவிளாத்திகுளம் ஊராட்சி சோலைமலையான்பட்டி கிராமத்தில் 15-வது நிதிக்குழு ஒன்றிய நிதியில் இருந்து ரூ. 9.92 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்ட பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதில் விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர் துரைராஜ், கீழ விளாத்திகுளம் ஊராட்சி தலைவர் நவநீத கண்ணன், துணைத்தலைவர் செண்பகராஜ், ஊராட்சி செயலர் செந்தில், ரவிச்சந்திரன், செண்பகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×