விளாத்திகுளம் அரசு பள்ளியில் 238 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்

விளாத்திகுளம் அரசுப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கயிறு ஏறும் உபகரணத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
மாணவ-மாணவிகளுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., இலவச சைக்கிள்கள் வழங்கிய போது எடுத்த படம்.
மாணவ-மாணவிகளுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., இலவச சைக்கிள்கள் வழங்கிய போது எடுத்த படம்.
Published on

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அரசுப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 238 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா இலவச சைக்கிள்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கயிறு ஏறும் உபகரணத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தவசிமுத்து, உடற்கல்வி இயக்குனர் பால்ச்சாமி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு செயலாளர் அன்புராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், நகர செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com