search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbabhisheka ceremony"

    • புனரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று கோவிலில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
    • இதைத்தொடர்ந்து பேச்சியம்மன், மாரியம்மன், மாடசாமி மற்றும் வலம்புரி விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், பால், திருநீறு என பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ராஜீவ் நகரில் அமைந்துள்ள பேச்சியம்மன், மாரியம்மன், மாடசாமி கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று கோவிலில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணியளவில் மங்கள இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேகமானது, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவா ஜனம், அம்பாள் ரக்சா பந்தனம், யாகசாலை பூஜை, ஸ்பரிசாகுதி, திரவியாகுதி, வஸ்த்ராகுதி, மஹா பூர்ணாகுதி, யாத்ரா தானம் என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 9.30 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரை விமான கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகமானது சிறப்பாக நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து பேச்சியம்மன், மாரியம்மன், மாடசாமி மற்றும் வலம்புரி விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், பால், திருநீறு என பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் விளாத்திகுளம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங் களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் அன்னதானம் நடந்தது.

    • கோவில்பட்டி அருகே காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
    • விழாவை முன்னிட்டு காலையில் கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி கிராமத்தில் செல்லியரம்மன், காளியம்மன், துர்க்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மேள, தளத்துடன் வேதமந்திரங்கள் முழங்க, புனித நீர் எடுத்துச்செல்லப்பட்டு செல்லியரம்மன், காளியம்மன், துர்க்கையம்மன் மூலவர் விமான கோபுரங்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து செல்லியரம்மன், காளியம்மன், துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • கயத்தாறு அருகே சன்னதுபுதுக்குடி கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
    • தொடர்ந்து அம்மாளுக்கு ஊர்வலமாக எடுத்து வந்த புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே சன்னதுபுதுக்குடி கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் 108 குடங்களில் புனித நீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கோவிலில் பல்வேறு யாகங்கள், ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மாளுக்கு ஊர்வலமாக எடுத்து வந்த புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் நெல்லை சுந்தரேசர் சர்மா தலைமையில் விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், அங்கு ராபாசனம், சேம கும்ப பூஜை உட்பட 21 பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. இதனை தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள்,அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வடக்கு சன்னதுபுதுக்குடி கிராம மக்கள் மற்றும் விழா கமிட்டியார் செய்திருந்தனர்.

    • உச்சினி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெற்றது
    • அய்யப்ப சிவாச்சாரியார் குழுவினர் மற்றும் ஆலய பூஜகர் மயில்வேல் முருகன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி கள்ளர் குல தொண்டைமான் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட உச்சினி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெற்றது.முதல் நாள் கணபதி பூஜை, பிரம்மச்சாரி பூஜை, மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், துர்கா ஹோமம், தன பூஜை, கோ பூஜை ஆகியவை நடந்தன.

    மாலையில் தீர்த்தங்கள் பவனி வருதல், கும்ப அலங்காரம் மற்றும் யாக பூஜை நடந்தது. 2-வது நாள் காலையில் வேதபாராயணம் மற்றும் திருமுறை பாராயணம், பூர்ணாகுதி தீபாராதனை ஆகியவை நடந்தன. நிறைவு நாளான நேற்று காலையில் பூர்ணாகுதி தீபாராதனையை தொடர்ந்து கோவிலின் விமான கோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதன்பின் உச்சினி மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. அய்யப்ப சிவாச்சாரியார் குழுவினர் மற்றும் ஆலய பூஜகர் மயில்வேல் முருகன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    மதியம் அன்னதானம் நடைபெற்றது. இதனை ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேசன், ஆறுமுக நயினார், சங்கர், கோவில் நிர்வாகிகள் முத்துராமன், சின்னத்துரை, இசக்கி, காளிதாஸ், பூல்ராஜ், கணேசன், மாரியப்பன், மகாராஜன், பட்டு ராஜா, பேச்சியப்பன், சுடர் மாரி, விஜய ரகு, பட்டு முத்து, சுப்பிரமணியன், இசக்கி, உச்சினிமாகாளி, மகாலிங்கராஜ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு திருவிளக்கு பூஜை, சிறப்பு தீபாராதனை ஆகியவை நடந்தன.

    • தனுஷ்கோடியாபுரம் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவில் முன்பு பந்தல்கால் நடப்பட்டு அதனை அடுத்து மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் முன்பு வானவேடிக்கைகள் முழங்க பந்தல்கால் நடப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கு முன்னதாக தனுஷ்கோடியாபுரம் தெருவில் வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்திய ப்பட்ட பூபதி ரத்தினம் மஹால் திறக்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

    அதனை முன்னிட்டு நேற்று காலை மகேஸ்வரர் சமேத ஸ்ரீ மாலையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தனுஷ்கோடியாபுரம் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவில் முன்பு பந்தல்கால் நடப்பட்டு அதனை அடுத்து மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் முன்பு வானவேடிக்கைகள் முழங்க பந்தல்கால் நடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு முன்னதாக தனுஷ்கோடியாபுரம் தெருவில் வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்திய ப்பட்ட பூபதி ரத்தினம் மஹால் திறக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன், சங்கத் துணைத் தலைவர் பரமசிவம்'என்ற பெருமாள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மாரிக்கண்ணன், பாலாஜி, சின்னத்துரை,

    மாதவராஜ், காளிதாஸ், முனிய செல்வம், சின்னதம்பி, கல்யாணசுந்தரம், மீனாட்சி சுந்தரம், நம்பிராஐன், சிவானந்தம், சங்கர், குமார், கார்த்திக், மதன், சுபாஷ்ஜெயந்த், செல்வம், சீனிவாசன், மாரிச்செல்வக்குமார், செல்லம், ராஜா, மாரிச் செல்வம், செல்வகுமார், ஸ்ரீமாலையம்மன் பஜனை குழு பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசித்தனர்.

    கும்பாபிஷேகத்திற்கு சில தினங்களே உள்ள சூழ்நிலையில் கோவில் முன்பு இருந்த பாலத்தை நீர்நிலை ஆக்கிரமிப்பு என வருவாய் துறையினர் இடித்தனர்.

    தற்போது கும்பாபிஷேகம் வரும் சூழ்நிலையில் கழிவு நீர் சாக்கடையில் இறங்கி கோவிலுக்கு செல்லும் நிலை உள்ளதால் பாலத்தை அரசு விரைவில் கட்டிதர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    ×