search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Utchini Makaliyamman Temple"

    • உச்சினி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெற்றது
    • அய்யப்ப சிவாச்சாரியார் குழுவினர் மற்றும் ஆலய பூஜகர் மயில்வேல் முருகன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி கள்ளர் குல தொண்டைமான் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட உச்சினி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெற்றது.முதல் நாள் கணபதி பூஜை, பிரம்மச்சாரி பூஜை, மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், துர்கா ஹோமம், தன பூஜை, கோ பூஜை ஆகியவை நடந்தன.

    மாலையில் தீர்த்தங்கள் பவனி வருதல், கும்ப அலங்காரம் மற்றும் யாக பூஜை நடந்தது. 2-வது நாள் காலையில் வேதபாராயணம் மற்றும் திருமுறை பாராயணம், பூர்ணாகுதி தீபாராதனை ஆகியவை நடந்தன. நிறைவு நாளான நேற்று காலையில் பூர்ணாகுதி தீபாராதனையை தொடர்ந்து கோவிலின் விமான கோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதன்பின் உச்சினி மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. அய்யப்ப சிவாச்சாரியார் குழுவினர் மற்றும் ஆலய பூஜகர் மயில்வேல் முருகன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    மதியம் அன்னதானம் நடைபெற்றது. இதனை ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேசன், ஆறுமுக நயினார், சங்கர், கோவில் நிர்வாகிகள் முத்துராமன், சின்னத்துரை, இசக்கி, காளிதாஸ், பூல்ராஜ், கணேசன், மாரியப்பன், மகாராஜன், பட்டு ராஜா, பேச்சியப்பன், சுடர் மாரி, விஜய ரகு, பட்டு முத்து, சுப்பிரமணியன், இசக்கி, உச்சினிமாகாளி, மகாலிங்கராஜ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு திருவிளக்கு பூஜை, சிறப்பு தீபாராதனை ஆகியவை நடந்தன.

    ×