search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளத்தில் பேச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
    X

    விளாத்திகுளத்தில் பேச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

    • புனரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று கோவிலில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
    • இதைத்தொடர்ந்து பேச்சியம்மன், மாரியம்மன், மாடசாமி மற்றும் வலம்புரி விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், பால், திருநீறு என பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ராஜீவ் நகரில் அமைந்துள்ள பேச்சியம்மன், மாரியம்மன், மாடசாமி கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று கோவிலில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணியளவில் மங்கள இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேகமானது, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவா ஜனம், அம்பாள் ரக்சா பந்தனம், யாகசாலை பூஜை, ஸ்பரிசாகுதி, திரவியாகுதி, வஸ்த்ராகுதி, மஹா பூர்ணாகுதி, யாத்ரா தானம் என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 9.30 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரை விமான கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகமானது சிறப்பாக நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து பேச்சியம்மன், மாரியம்மன், மாடசாமி மற்றும் வலம்புரி விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், பால், திருநீறு என பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் விளாத்திகுளம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங் களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் அன்னதானம் நடந்தது.

    Next Story
    ×