search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாலையம்மன் கோவிலில்  பந்தல்கால் நாட்டு நிகழ்ச்சி
    X

    மாலையம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பந்தல்கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாலையம்மன் கோவிலில் பந்தல்கால் நாட்டு நிகழ்ச்சி

    • தனுஷ்கோடியாபுரம் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவில் முன்பு பந்தல்கால் நடப்பட்டு அதனை அடுத்து மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் முன்பு வானவேடிக்கைகள் முழங்க பந்தல்கால் நடப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கு முன்னதாக தனுஷ்கோடியாபுரம் தெருவில் வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்திய ப்பட்ட பூபதி ரத்தினம் மஹால் திறக்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

    அதனை முன்னிட்டு நேற்று காலை மகேஸ்வரர் சமேத ஸ்ரீ மாலையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தனுஷ்கோடியாபுரம் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவில் முன்பு பந்தல்கால் நடப்பட்டு அதனை அடுத்து மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் முன்பு வானவேடிக்கைகள் முழங்க பந்தல்கால் நடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு முன்னதாக தனுஷ்கோடியாபுரம் தெருவில் வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்திய ப்பட்ட பூபதி ரத்தினம் மஹால் திறக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன், சங்கத் துணைத் தலைவர் பரமசிவம்'என்ற பெருமாள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மாரிக்கண்ணன், பாலாஜி, சின்னத்துரை,

    மாதவராஜ், காளிதாஸ், முனிய செல்வம், சின்னதம்பி, கல்யாணசுந்தரம், மீனாட்சி சுந்தரம், நம்பிராஐன், சிவானந்தம், சங்கர், குமார், கார்த்திக், மதன், சுபாஷ்ஜெயந்த், செல்வம், சீனிவாசன், மாரிச்செல்வக்குமார், செல்லம், ராஜா, மாரிச் செல்வம், செல்வகுமார், ஸ்ரீமாலையம்மன் பஜனை குழு பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசித்தனர்.

    கும்பாபிஷேகத்திற்கு சில தினங்களே உள்ள சூழ்நிலையில் கோவில் முன்பு இருந்த பாலத்தை நீர்நிலை ஆக்கிரமிப்பு என வருவாய் துறையினர் இடித்தனர்.

    தற்போது கும்பாபிஷேகம் வரும் சூழ்நிலையில் கழிவு நீர் சாக்கடையில் இறங்கி கோவிலுக்கு செல்லும் நிலை உள்ளதால் பாலத்தை அரசு விரைவில் கட்டிதர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    Next Story
    ×