என் மலர்
உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்.
கோவில்பட்டி அருகே காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
- கோவில்பட்டி அருகே காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
- விழாவை முன்னிட்டு காலையில் கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி கிராமத்தில் செல்லியரம்மன், காளியம்மன், துர்க்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மேள, தளத்துடன் வேதமந்திரங்கள் முழங்க, புனித நீர் எடுத்துச்செல்லப்பட்டு செல்லியரம்மன், காளியம்மன், துர்க்கையம்மன் மூலவர் விமான கோபுரங்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து செல்லியரம்மன், காளியம்மன், துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story






