விளாத்திகுளம் அருகே சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை

சோலைமலையான்பட்டியில் புதிய சமுதாய நலக்கூடம் கட்ட பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவில் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
விளாத்திகுளம் அருகே சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை
Published on

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே உள்ள கீழவிளாத்திகுளம் ஊராட்சி சோலைமலையான்பட்டி கிராமத்தில் 15-வது நிதிக்குழு ஒன்றிய நிதியில் இருந்து ரூ. 9.92 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்ட பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதில் விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர் துரைராஜ், கீழ விளாத்திகுளம் ஊராட்சி தலைவர் நவநீத கண்ணன், துணைத்தலைவர் செண்பகராஜ், ஊராட்சி செயலர் செந்தில், ரவிச்சந்திரன், செண்பகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com