search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே  காட்சிப்பொருளாக மாறிய  குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் - விரைவில் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    காட்சிப்பொருளாக இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்.

    விளாத்திகுளம் அருகே காட்சிப்பொருளாக மாறிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் - விரைவில் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

    • இப்பகுதியானது கடற்கரை சார்ந்த பகுதி என்பதால், இங்குள்ள நிலத்தடிநீர் பெரும்பாலும் அதிகளவு உப்பாக இருக்கிறது.
    • இதன் காரணமாக தங்களது அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1 குடம் தண்ணீர் ரூ.10 முதல் ரூ.15 வரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே சூரங்குடி கிராமத்தில் சிலோன் காலனி என்ற பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    மக்கள் புகார்

    இப்பகுதியானது கடற்கரை சார்ந்த பகுதி என்பதால், இங்குள்ள நிலத்தடிநீர் பெரும்பாலும் அதிகளவு உப்பாக இருக்கிறது. எனவே இங்குள்ள மக்கள் தங்களின் குடிநீர் தேவைக்காக சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும் நீரையே நம்பியுள்ளனர்.

    ஆனால் அவ்வாறு வழங்கப்படும் சீவலப்பேரி குடிநீ2ரும் மாதத்திற்கு 2 முறை மட்டுமே விநியோகிக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இதன் காரணமாக தங்களது அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1 குடம் தண்ணீர் ரூ.10முதல் ரூ.15 வரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    சுத்திகரிப்பு நிலையம்

    இந்த சூழ்நிலையில் இம்மக்களின் நலன் கருதி கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் 14-வது நிதிக்குழு திட்டத்தின் மூலம் ரூ.8 லட்சம் மதிப்பில் சிலோன் காலனியில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

    இந்த சுத்திகரிப்பு நிலையம் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் மெத்தனப்போக்கினால் தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் வேலிச்செடிகள், குப்பைகள் என புதர்மண்டி வெறும் காட்சிப்பொருளாக காட்சியளித்துக் கொண்டி ருக்கிறது.

    எனவே சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருதோடு மட்டுமின்றி மாதத்திற்கு 2 முறை மட்டுமே விநியோகிக்கப்படும் சீவலப்பேரி கூட்டு குடிநீரையும் 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்க கலெக்டர் செந்தில்ராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×