search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vilathikulam"

    • கன்னிமார்கூட்டம் கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
    • போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 31 ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள கன்னிமார்கூட்டம் கிராமத்தில் காளியம்மன், பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சின்ன மாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 31 ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

    மாட்டு வண்டி பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    • பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை
    • கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான வார்டுகளில் கடந்த சில நாட்களாக பேரூராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் விளாத்திகுளத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பேரூராட்சி செயல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளாத்திகுளம் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் யூசுப் தலைமையில் பொதுமக்கள் செயல் அலுவலரிடம் மனு அளித்தனர்.

    மேலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், அண்மையில் கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாய்கள் முறையற்ற முறையில் கட்டப்பட்டதாகவும் அதிகாரியிடம் முறையிட்டு அதனை சரி செய்ய கேட்டுக் கொண்டனர். இதேபோல் விளாத்திகுளம் வைப்பாறு மற்றும் பொதுப்பணித்துறை கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல், உடனடியாக அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • மகாராஜா பர்மிங்காம் நகரில் உலக அளவில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
    • இதனயைடுத்து கிரிக்கெட் வீரர் மகாராஜாவை, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ,, நேரில் அழைத்து பாராட்டி அவருக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பசுவந்தனை அருகே உள்ள மீனாட்சிபுரம் ஊராட்சி, கே.துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மகாராஜா என்ற விளையாட்டு வீரர் கடந்த மாதம் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் உலக அளவில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார். இதனயைடுத்து கிரிக்கெட் வீரர் மகாராஜாவை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ,, நேரில் அழைத்து பாராட்டி அவருக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார். அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் விரைவில் ஊக்கத்தொகை பெற்று தரவும், கொரோனா காலகட்டத்தில் தந்தையை இழந்த மகாராஜாவிற்கு அரசு பணி விரைவில் கிடைத்திடவும் நடவடிக்கை எடுப்பதாக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

    • முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசன்குளம் முதல் வேடப்பட்டி வரையில் ரூ.52.42 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட உள்ளது.
    • புதிய சாலை பணிகளை பூமி பூஜை செய்து மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், புளியங்குளம் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசன்குளம் முதல் வேடப்பட்டி வரை யில் ரூ.52.42 லட்சம் மதிப்பீட்டிலும், புளிய ங்குளம் முதல் வேடபட்டி வரையில் ரூ.51.34 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய சாலை பணிகளை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், சீனிவாசன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி செந்தூர் பாண்டியன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராஜபாண்டி, புளியங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராம், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கனகராஜ், கிளைச் செயலாளர்கள் பொன்முருகன், பரமசிவம், முத்துகருப்பசாமி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின், கிழக்கு ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் மாரியப்பன், கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், தி.மு.க. சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார், மாணவர் அணி முனியசாமி, கிருஷ்ண குமார், கள உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, ஷேவக பெருமாள், கனகராஜா, முருகன், பாலகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை விற்பனைக்குழு சார்பில் 1000 மெட்ரிக் டன் கொண்ட புதிய சேமிப்பு கிடங்கு கட்டிடம் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை, ெநல்லை விற்பனைக்குழு சார்பில் 1000 மெட்ரிக் டன் கொண்ட புதிய சேமிப்பு கிடங்கு கட்டிடம் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தி.மு.க. நெசவாளர் அணி மாநில துணைச் செயலாளர் ஜெயக்குமார், விளாத்திகுளம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, புதூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன் ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • விருசம்பட்டி கிராமத்தில் 15-வது நிதி குழு 2022-23 திட்டத்தின் கீழ் ரூ. 38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • அப்போது பணிகளை துரிதமாக முடித்திட பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி கிராமத்தில் குழந்தைகள் நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நடுநிலைப் பள்ளியில் உள்ள 2 வகுப்பறை கட்டிடங்ககள், 15-வது நிதி குழு 2022-23 திட்டத்தின் கீழ் ரூ. 38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 5.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிறுத்த கட்டிடத்தை மார்கண்டேயன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை துரிதமாக முடித்திட பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன், பொறியாளர் அலெக்ஸ், விளாத்திகுளம் தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இமானுவேல், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் மாரியப்பன் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு தொழில்நுட்ப மையத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
    • நிகழ்ச்சியில் தாசில்தார் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் உமறுப்புலவர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு தொழில்நுட்ப மையத்தை கடந்த ஜூலை 13-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    இந்நிலையில் நேற்று அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். நிகழ்ச்சியில் தாசில்தார் ராமகிருஷ்ணன், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிக்குமார், புதூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, சின்னமாரிமுத்து, அன்புராஜன், ராமசுப்பன், புதூர் நகர செயலாளர் மருதுபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஞானகுருசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறையை கண்டித்து விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் மணிப்பூர் மாநில அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    விளாத்திகுளம்:

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறையை கண்டித்து விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் கதிரேசன் மற்றும் பெஞ்சமின், பிராங்கிளின், மோட்சம், பிரபாவளவன், சடையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொண்டரணி வில்லாளன் ரெஸ்லின் வரவேற்று பேசினார். இதில் மணிப்பூர் மாநில அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் கோவில்பட்டி நகர செயலாளர் கருப்பசாமி பாண்டியன், ஒன்றிய செயலாளர் மாடசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் மனுவேல், தொழிலாளர் அணி அமைப்பாளர் பரமசிவம், விளாத்திகுளம் நகர செயலாளர் அழகு முனியசாமி, கணேசன், மகளிர் அணி சிவனம்மாள், முடியப்பராஜ், சேகர், சங்கர், பெரியசாமி, கதிரேசன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் மோகன் நன்றி கூறினார்.

    • துலுக்கன்குளம் - வேம்பாரில் நடந்த சின்ன மாட்டு வண்டி போட்டிக்கு 10 கிலோமீட்டர் வெற்றி இலக்காக நியமிக்கப்பட்டது.
    • பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முருகன் தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே துலுக்கன்குளம் கிராமத்தில் சந்தி மரிச்ச அம்மன், கருப்பசாமி கோவில் ஆடி கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடை பெற்றது. துலுக்கன்குளம் - வேம்பாரில் நடந்த சின்ன மாட்டு வண்டி போட்டிக்கு 10 கிலோமீட்டர் வெற்றி இலக்காக நியமிக்கப்பட்டது. போட்டியை மார்க்கண் டேயன் எம்.எல்.ஏ. கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    இதனையடுத்து பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. 6 கிலோ மீட்டர் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட போட்டியை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய லாளர் முருகன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மோ கன், இளைஞர் அணி தொ குதி அமைப்பாளர் சடை யாண்டி, தொண்ட ரணி அமைப்பாளர் ரெஸ்லி, கோவில்பட்டி ஒன்றிய செய லாளர் மாடசாமி, இளைஞர் அணி துணை செயலாளர் சண்முகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் சுயமாக சம்பாதித்து தங்களது சொந்தக்காலில் நிற்கக் கூடிய அளவிற்கு ஒரு தொழில் வளாச்சி பெறக் கூடிய நிலையை தந்திருக்கக் கூடிய திட்டமாக இன்று பணிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
    • வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பான திட்டமான மக்களைத்தேடி மருத்துவ திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள கீழஈரால் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 9.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்ப ட்டுள்ள பணிக்கூட த்தினை கனிமொழி எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    கனிமொழி எம்.பி.

    நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மார்கண்டேயன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கனிமொழி எம்பி பேசியதாவது:-

    பெண்கள் சுயமாக சம்பாதித்து தங்களது சொந்தக்காலில் நிற்கக் கூடிய அளவிற்கு ஒரு தொழில் வளாச்சி பெறக் கூடிய நிலையை தந்திருக்கக் கூடிய திட்டமாக இன்று பணிக்கூடம் அமைக்கப் பட்டுள்ளது. கலைஞர் தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி தந்தவர். மகளிர்கள் இந்த கட்டிடத்தை பயன்படுத்தி கடலை மிட்டாய் உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பு செய்து தரப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15-ந்தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். மேலும் நகர பஸ்களில் மகளிருக்கு இலவச பயணத் திட்டம், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு படித்த மாணவிகளுக்கு கல்லூரி படிப்பிற்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு சிறப்பான திட்ட ங்களை செயல்படுத்தி கொண்டி ருக்கிறார்.

    மக்களுக்கு தேவையான திட்டங்களை தந்து கொண்டி ருக்கின்ற ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பான திட்டமான மக்களைத்தேடி மருத்துவ திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பெண்களை பாதுகாக்கும் ஆட்சி

    மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் கலைஞர் எப்படி நிறை வேற்றி தந்தாரோ அதே போல் அவரது வழியில் செயல்படும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தந்து கொண்டிருக்கிறார்கள்.

    முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு எல்லோருக்குமான ஆட்சியாகவும், முக்கியமாக பெண்களை பாதுகாக்கிற ஆட்சியாகவும் விளங்கி வருகிறது. மேலக்கரந்தை பகுதியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க ரூ. 1.90 கோடி மதிப்பில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வாய்க்கால்கள் போன்ற மக்களின் அடிப்படை வசதிக்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அரசின் திட்டங்களை பெற்று உங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதாக கிராம மக்கள் புகார் அளித்தனர்.
    • விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் அங்கு சென்று மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே குளத்தூர் ஊராட்சி ராமச்சந்திராபுரம் கிராமத்தில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதாக கிராம மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து உடனடியாக விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் அங்கு சென்று மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், குளத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் மாலதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரியசாமிபுரம் கிராமத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே பெரியசாமிபுரம் கிராமத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய 15-வது நிதிக்குழுவில் இருந்து ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணியினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பெரியசாமிபுரம் ஊராட்சிமன்ற தலைவர் மரிய ஆரோக்கிய சூசை, துணை தலைவர் உள்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×