search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vilathikulam"

    • குளத்தூர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் நினைவு கேடயம் வழங்கப்பட்டது.
    • இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஆவலுடன் விழாவில் கலந்து கொண்டு தாங்கள் படித்த பள்ளியை பார்வையிட்டு அனைவரிடமும் மன மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில், இயங்கி வரும் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி கடந்த 1923-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், 100 ஆண்டுகள் கடந்த தங்களது பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக திட்டமிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு நேரில் சென்றுள்ளனர்.

    ஆனால் அங்கு சென்ற முன்னாள் மாணவர்களுக்கு தாங்கள் படித்த பள்ளியின் கட்டிட மற்றும் அடிப்படை வசதிகளின் நிலையைக் கண்டு பள்ளியின் அடிப்படையை வசதிகளை கட்டமைத்தும், பள்ளிக்கும், அங்கு பயலும் மாணவர்களுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முடிவு செய்தனர்.

    இதுவரை இப்பள்ளியில் பயின்ற அனைத்து மாண வர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தங்களுக்குள்ளாக வாட்ஸ்அப் குழுவினை உருவாக்கி அனைவரும் ஒன்றினைந்து தாங்கள் படித்த பள்ளியை தத்தெடுத்து லட்சக்கணக்கில் நிதியை வழங்கி தற்போது இப்பள்ளியில் சேதமடைந்திருந்த கட்டி டங்கள் சீரமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக கலையின்றி காணப்பட்ட பள்ளி கட்டிடங்கள் முழுவதற்கும் பெயிண்ட் செய்து கலர்புல்லாக மாற்றியுள்ளனர்.

    அதுமட்டுமின்றி இப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை, குடிநீர் வசதி, மைதானம், சுற்றுச்சுவர் கட்டிடம், முகப்பு வாயில் என அனைத்தையும் பிரம்மா ண்டமாக உருவாக்கி நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாடி அனை வருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்றனர் இப்பள்ளி முன்னாள் மாணவர்கள்.

    பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக சென்ற நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கு கல்விச்சீர் கொண்டு வந்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினர்.

    நூற்றாண்டு விழாவில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வரவேற்று பேசினார். பின்னர் குளத்தூர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் நினைவு கேடயம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்பால் மாற்றப்பட்ட பள்ளி கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

    தொடர்ந்து பல ஆண்டு களுக்குப்பின் சந்தித்த தங்களது பள்ளிப்பருவ நண்பர்களிடம் மனமகிழ்ச்சியோடு தங்களது பழைய பள்ளி அனுபவங்களை பேசி, குடும்பத்தினரை அறிமுகப்படுத்தினர். இதில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலேசியா உட்பட பல நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வரும் இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஆவலுடன் விழாவில் கலந்து கொண்டு தாங்கள் படித்த பள்ளியை பார்வையிட்டு அனைவரிடமும் மன மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    விழாவின் தொடர்ச்சி யாக பள்ளியில் பரத நாட்டியம், கர காட்டம், மயிலாட்டம், பொம்மலாட்டம், காவடி யாட்டம் என பல்வேறு நாட்டுப்புற நடனங்கள் தொடங்கி ட்ரெண்ட்டிங் டான்ஸ் வரை அனைத்தையும் ஆடி அங்கிருந்த ஒட்டுமொத்த முன்னாள் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களையும் கண்ணிமைக்காமல் கண்டு ரசிக்க வைத்தனர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். விழாவில் 1970-ம் ஆண்டு முதல் தற்போது பயின்று வரும் மாணவர்கள் வரை என வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

    • சோபுகாய் கோஜுரியு கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.
    • முகாமில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் மற்றும் பட்டய தேர்வு நடைபெற்றது. பள்ளி முதல்வர் மாயாதேவி தலைமை தாங்கினார்.

    இம்முகாமில் சோபுகாய் கோஜுரியு கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். முகாமில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்ட சோபுகாய் கோஜூரியு கராத்தே பள்ளியின் தலைவர் சென்சாய் செந்தில் மற்றும் பல்வேறு மாவட்ட செயலாளர்களான கார்த்தி அங்குவேல், கார்த்திகேயன், அம்பாள் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா செய்திருந்தார்.

    • வருசாபிஷேகத்தை தொடர்ந்து யாக சாலையில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட புனித நீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
    • வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், உபகார பூஜைகள், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் வேம்பார் சாலையில் வராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவில் கும்பாபிஷேக விழா நிறைவடைந்து 2-ம் ஆண்டு வருசாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

    இதனை த்தொடர்ந்து யாக சாலையில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட புனித நீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்ப ட்டது. பின்னர் அன்னை வராகிக்கு பல்வேறு வகையான பழங்கள், பால், மஞ்சள், பன்னீர், சந்தனம், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அன்னை வராகிக்கு, அருள் வாக்கு சித்தர் சக்தி சுவாமிகள் தலைமையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பக்தர்கள் வழிபாடு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், உபகார பூஜைகள், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நாபார்டு வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை பொது மேலாளர் சங்கர் நாராயணன் சூரிய கூடார உலர்த்தியை திறந்து வைத்தார்.
    • முன்னதாக சுய உதவி குழு பெண்களுக்கு நாட்டுக்கோழிகள், மரக்கன்று, பழக்கன்றுகள் மற்றும் உரங்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள சின்னூரில் விடியல் டிரஸ்டின் 25-வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு சூரிய கூடார உலர்த்தி அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் சின்னூர் நீர் வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மிளகாய் வத்தல் மற்றும் வேளாண் விலை பொருள்களை நவீன தொழில்நுட்ப முறையில் உலர்த்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதலுக்காக சுமார் 400 சதுர அடி பரப்பளவில் ரூ.3.5 லட்சம் மதிப்பிலான சூரிய கூடார வளர்ச்சி நீர்வடிப் பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டமைக்க ப்பட்டிருந்தது. நாபார்டு வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை பொது மேலாளர் சங்கர் நாராயணன் சூரிய கூடார உலர்த்தியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    முன்னதாக சுய உதவி குழு பெண்களுக்கு நாட்டுக்கோழிகள், மரக்கன்று, பழக்கன்றுகள் மற்றும் உரங்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சூரிய கூடார உலர்த்தி திறந்து வைத்ததன் நினைவாக அதன் அருகில் மரக்கன்று ஒன்றை நடவு செய்தார். பின்னர் நீர்வடிப் பகுதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பண்ணை குட்டைகள் மற்றும் சீரமைப்பு பணிகளை கள ஆய்வு செய்து பணிகள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது என கிராம நிர்வாக பகுதி கமிட்டி மற்றும் விடியல் டிரஸ்ட் நிறுவனத்தை பாராட்டினார்.

    நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், நாபார்டு வங்கியின் நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். விடியல் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் ஜோதிமணி வரவேற்று பேசினார். ஏற்பாடுகளை சின்னூர் கிராம நிர்வாக பகுதி குழு தலைவர் அருண், திட்ட மேலாளர் அசோக் குமார் மற்றும் விடியல் டிரஸ்ட் களப்பணியாளர்கள் செய்திருந்தனர். திட்ட மேலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    • பஸ் சேவையை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பொதுமக்கள், மாணவர்கள் பஸ்சுக்கு மாலை, வாழை மரங்கள் கட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் இருந்து குளத்தூர் வழியாக முத்துக்குமாரபுரம் வரை விளாத்திகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் குளத்தூர் பகுதியில் இருந்து அதிகளவிலான மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.

    விளாத்திகுளம் - முத்துக்குமாரபுரம் வழித்தடத்தில் மட்டுமே சென்று வரும் இந்த பஸ்சை கூடுதலாக வீரபாண்டிய புரம், டி.சுப்பையாபுரம், முத்துராமலிங்கபுரம் வரை நீட்டிப்பு செய்தால் இக்கிரா மங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீண்டநாட்களாக மாணவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கையை ஏற்று விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், முத்துக்கு மாரபுரம் வரை மட்டுமே சென்று வந்த இப்பேருந்தை வீரபாண்டியபுரம், டி.சுப்பையாபுரம் வழியாக முத்துராமலிங்கபுரம் வரை நீட்டிப்பு செய்து பஸ்சை இயக்க உத்தரவிட்டு கூடுதல் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ் சேவையை மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேலும் கூடுதல் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ் சேவையை முன்னிட்டு பஸ்சுக்கு மாலை, வாழை மரங்கள் கட்டி பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் தாசில்தார் ராமகிருஷ்ணன், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஜெகநாதன், குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சற்குணராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மாவட்ட கவுன்சிலர் மிக்கல் நவமணி, நடராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், குருநாதன் செந்தூர்பாண்டி, குளத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் மாலதி செல்ல பாண்டி, வீரபாண்டியபுரம் ஊராட்சிமன்ற தலைவர் லெக்கமாள் தேவி, வேம்பார் தெற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஆரோக்கியராஜ், நெடுங்குளம் ஊராட்சிமன்ற தலைவர் ஜெயலட்சுமி, டி. சுப்பையாபுரம் ஊராட்சிமன்ற தலைவர் ராமசுப்பு, வைப்பார் ஊராட்சிமன்ற தலைவர் ராமர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பேச்சிமுத்து, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய சிறுபான்மையினர் அணி செல்வின் ஒன்றிய இலக்கிய அணி மாரியப்பன், மாணவரணி அமைப்பாளர் முனியசாமி, கிளைச் செய லாளர்கள் மந்திரமூர்த்தி, முனிய சாமி, பொன்னு ச்சாமி, ரவிச்சந்திரன், பொன் மாரியம்மன், பரம சிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வில்லமரத்துப்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவி தலைமையில் நடைபெற்றது.
    • இலவச வீட்டுமனை பட்டா, வேளாண் இடு பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    மகாத்மா காந்தியடிகளின் 155-வது பிறந்த நாளை யொட்டி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வில்லமரத்துப் பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண் டார்.

    அப்போது அவர் பேசுகையில்:-

    பெண்கள் சுயமாக முன்னேற கைத்தொழிலை கற்று கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்புகளை தி.மு.க. அரசு ஏற்படுத்தி தந்து உள்ளது. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பின்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. மகளிர் உரிமை தொகை நிராகரிப்பட்ட வர்கள் முறையீடு செய்து பரிசீலனை உள்ள பெண்களுக்கு கட்டயம் உரிமை தொகை கிடைக்கும். நிராகரிக்கப்பட்டவர்க ளுக்கு உரிய விளக்கமும் அளிக்கபட்டு உள்ளது.

    தகுதி உள்ள அனைவருக்கும் உரிமை தொகை கிடைக்கும். 18-ந்தேதிகுள் இ-சேவை மையம் மூலமாக மேல் முறையீடு செய்து விடவும். கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டசத்து உள்ள உணவை உன்ன வேண்டும். காய்ச்சல் தொடந்து இருந்தால் மருத்துவமனைக்கு உடனடியாக செல்லுங்கள். அலட்சியமாக இருந்து விடாதீர்கள். அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைத்தொடர்ந்து இலவச வீட்டுமனை பட்டா, வேளாண் இடு பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோட்டாட்சியர் ஜென் கிறிஸ்டிபாய், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன், திமுக ஒன்றிய செயலா ளர்கள் சின்ன மாரிமுத்து, அன்பு ராஜன், செல்வராஜ், மும்மூர்த்தி, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன்ராஜ், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பனை விதைகள் நடும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • விழாவில் ஊராட்சிமன்ற தலைவர் ஆரோக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை பகுதியில் பனை விதைகள் நடும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    விழாவில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னமாரிமுத்து, வேம்பார் தெற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஆரோக்கியராஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்வமணி, சுமதி இம்மானுவேல், செந்தூர்பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், துணை அமைப்பாளர் அந்தோணிராஜ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை தலைவர் பால்பாண்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித்குமார், வடக்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் எப்ரோமீனா மேரி, ஒன்றிய துணை செயலாளர் புனிதா, ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின், ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் மாரியப்பன், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் மாரியப்பன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரதிதாசன், மீனவர் அணி துணை அமைப்பாளர் மரியசிங்கம், தொண்டரணி துணை அமைப்பாளர் சிம்மராசி, கிளை செயலாளர்கள் ராஜபாக்கியம், நல்லமுத்து, சரவணன், கண்ணன், முனியசாமி, அழகர்சாமி, ஆதிநாராயணன், சேவியர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்பப்பணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அரியநாயகிபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடுதலாக 4 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
    • அதனை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 4 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயபிரகாஷ், ராஜன், துணை ஆய்வாளர் ரமேஷ், பள்ளி தலைமை ஆசிரியை கனி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, விளாத்தி குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ்,

    ஊராட்சிமன்ற தலைவர் மாரியம்மாள், விளாத்தி குளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், சமூகவலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட தி.மு.க. நிர்வாகிகள், ஆசிரிய-ஆசிரியைகள், கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • பால்ராஜ் தனக்கு சொந்தமான இடத்தில் வான்கோழி, நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்துள்ளார்.
    • கடந்த 22-ந் தேதி பால்ராஜ் பண்ணைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த நாட்டுக்கோழிகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். (வயது48). முதுகலை பட்டதாரியான இவர் தனக்கு சொந்தமான இடத்தில் கோழிப்பண்ணை அமைத்து அதில் வான்கோழி, வாத்து, நாட்டுக்கோழி மற்றும் சேவல்களை வளர்த்து வந்துள்ளார்.

    கோழிப்பண்ணையில் திருட்டு

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது கோழிப் பண்ணையில் இருந்த வான்கோழிகள் மற்றும் கோழிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து பால்ராஜ் சூரங்குடி போலீஸ் நிலையத்தில் தனக்கு சந்தேகமான நபர்கள் குறித்து புகார் கூறியுள்ளார். ஆனால் அவரின் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 22-ந் தேதி பால்ராஜ் பண்ணைக்குள் மீண்டும் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள வான் கோழிகள், வாத்துக்கள் மற்றும் நாட்டுக்கோழிகள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பால்ராஜ் இது குறித்து மீண்டும் சூரங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தபோது அதனை அங்கி ருந்த சப்-இன்ஸ் பெக்டர் ஒருவர் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து பால்ராஜ் தூத்துக்குடி மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று தனது மனுவை சப்-இன்ஸ்பெக்டர் பெற்றுக் கொள்ள மறுப்பதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் புகார் அளித்தார். மேலும் தன்னுடைய கோழிப் பண்ணையில் கோழிகளை திருடியவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தார்.

    இதற்கிடையே கோழிப்பண்ணை உரிமை யாளர் பால்ராஜ் புகார் மீது விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க விளாத்திகுளம் டி.எஸ்.பி. ஜெயச் சந்திரனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

    • புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 17 கிராம ஊராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான புதிய பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்து.
    • அதனை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 17 கிராம ஊராட்சிகளுக்கு ஸ்வச் பாரத் இயக்கத்தின் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான புதிய பேட்டரி வாக னங்கள் வழங்கப்பட்து. அதனை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் புதூர் தி.மு.க. ஒன்றிய செயலர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொது சுகாதார மைய கட்டிட பணிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் உமா செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    எட்டயபுரம் அருகே கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 56.40 லட்சம் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார மைய கட்டிட பணிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் உமா செல்வி, கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், கீழஈரால் ஊராட்சிமன்ற தலைவர் பச்சைப்பாண்டி, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல், எட்டயபுரம் பேரூராட்சிமன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயமுத்து, கிளைச் செயலாளர் சண்முகவேல், இளைஞர் அணி மகேந்திரன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இலவச மருத்துவ உபகரணங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் புதூர் ஒன்றியச் செயலர்கள் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவ அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இலவச மருத்துவ உபகரணங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    நிகழ்ச்சியில் புதூர் ஒன்றியச் செயலர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியச் செயலர் காசி விஸ்வநாதன், புதூர் நகர செயலர் மருதுபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஞானகுருசாமி, வட்டார மருத்துவ அலுவலர் ரவீந்திரன், புதூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×