search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே கோவில் விழாவில் மாட்டுவண்டி போட்டி - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    மாட்டு வண்டி போட்டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

    விளாத்திகுளம் அருகே கோவில் விழாவில் மாட்டுவண்டி போட்டி - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • துலுக்கன்குளம் - வேம்பாரில் நடந்த சின்ன மாட்டு வண்டி போட்டிக்கு 10 கிலோமீட்டர் வெற்றி இலக்காக நியமிக்கப்பட்டது.
    • பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முருகன் தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே துலுக்கன்குளம் கிராமத்தில் சந்தி மரிச்ச அம்மன், கருப்பசாமி கோவில் ஆடி கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடை பெற்றது. துலுக்கன்குளம் - வேம்பாரில் நடந்த சின்ன மாட்டு வண்டி போட்டிக்கு 10 கிலோமீட்டர் வெற்றி இலக்காக நியமிக்கப்பட்டது. போட்டியை மார்க்கண் டேயன் எம்.எல்.ஏ. கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    இதனையடுத்து பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. 6 கிலோ மீட்டர் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட போட்டியை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய லாளர் முருகன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மோ கன், இளைஞர் அணி தொ குதி அமைப்பாளர் சடை யாண்டி, தொண்ட ரணி அமைப்பாளர் ரெஸ்லி, கோவில்பட்டி ஒன்றிய செய லாளர் மாடசாமி, இளைஞர் அணி துணை செயலாளர் சண்முகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×