search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே மழைநீர் தேங்கும் பகுதியில்  மார்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் குறைகளை கேட்ட காட்சி.

    விளாத்திகுளம் அருகே மழைநீர் தேங்கும் பகுதியில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு

    • விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதாக கிராம மக்கள் புகார் அளித்தனர்.
    • விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் அங்கு சென்று மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே குளத்தூர் ஊராட்சி ராமச்சந்திராபுரம் கிராமத்தில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதாக கிராம மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து உடனடியாக விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் அங்கு சென்று மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், குளத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் மாலதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×