search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Storage Warehouse"

    • முதல் -அமைச்சரால் காணொளி மூலம் திறக்கப்பட்டது
    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன வளாகத்தில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பில் புதியதாக 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டுள்ளது.

    இந்த கிடங்கினை நேற்று தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சேமிப்பு கிடங்கை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்த கிடங்கில் அரசு நிர்ணயித்துள்ள கட்ட ணத்தின் அடிப்படையில் தனியார் துறை நிறுவன ங்களும் தங்கள் உற்பத்தி பொருட்களை வாடகையின் அடிப்படையில் சேமித்துக் கொள்வதற்கான வழிவகைகள் செய்ய ப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில் ஆற்காடு ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி,சேமிப்பு கிடங்கு நிறுவன மண்டல மேலாளர் வசந்த். மாவட்ட கவுன்சிலர் செல்வம்,ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரி, நகரமன்ற உறுப்பினர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை விற்பனைக்குழு சார்பில் 1000 மெட்ரிக் டன் கொண்ட புதிய சேமிப்பு கிடங்கு கட்டிடம் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை, ெநல்லை விற்பனைக்குழு சார்பில் 1000 மெட்ரிக் டன் கொண்ட புதிய சேமிப்பு கிடங்கு கட்டிடம் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தி.மு.க. நெசவாளர் அணி மாநில துணைச் செயலாளர் ஜெயக்குமார், விளாத்திகுளம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, புதூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன் ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • புதிய சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கில் சிலிண்டர்களை இறக்குவதற்காக லாரியில் கொண்டு வந்துள்ளனர்.
    • கிராம மக்கள் சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கினை அகற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த எட்டிப்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரூர் பகுதியில் உள்ள கியாஸ் முகவர் ராஜேந்திரன் என்பவர் விவசாய நிலத்தை வாங்கி, பெரிய அளவில் கட்டிடம் கட்டியுள்ளார். அப்பொழுது கிராம மக்கள் எதற்காக கட்டிடம் என கேட்டுள்ளனர். தனது மகன் மருத்துவம் முடித்துள்ளதால், மருத்துவமனை கட்டுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பணி முடிந்த பிறகு சமையல் எரிவாயு சிலிண்டர் சேமிப்பு கிடங்கு என கட்டிடத்தில் எழுதப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் குடியிருப்புகளை ஒட்டி சமையல் எரிவாயு சிலிண்டரை சேமித்து வைத்தால், ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் பேரிழப்பு ஏற்படும். எனவே இங்கு சமையல் எரிவாயு சிலிண்டர் சேமிப்பு கிடங்கு வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

    ஆனால் இது குறித்து கியாஸ் முகவர் ராஜேந்திரன் கண்டு கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து அரசுத்துறை அதிகாரிகளிடம் சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கினை அப்புறப்படுத்த வேண்டும் என மனு அளித்துள்ளனர். ஆனால் அதனை அப்புறப்படுத்துவதற்கு அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் புதிய சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கில் சிலிண்டர்களை இறக்குவதற்காக லாரியில் கொண்டு வந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் சிலிண்டர்களை சேமிப்பு கிடங்கில் இறக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் சிலிண்டர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரூர்-தருமபுரி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    இதனை தொடர்ந்து தகவல் அறிந்த அரூர் காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள் சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கினை அகற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை அடுத்து லாரியிலிருந்து இறக்கப்பட்ட சிலிண்டர்கள் மீண்டும் ஏற்றப்பட்டது. ஆனால் பாதி சிலிண்டர்கள் சேமிப்பு கிடங்கில் இருந்ததால், கிராம மக்கள் சேமிப்பு கிடங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது உள்ளே இருக்கின்ற சிலிண்டர்களை லாரியில் எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி இளைஞர் ஒருவர் சேமிப்பு கிடங்கின் பூட்டை கல்லால் உடைக்க முயற்சி செய்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை தடுத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு அரூர் வட்டாட்சியர் பெருமாள், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர சமாதான பேச்சு வார்த்தைக்கு பிறகு வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் சென்று முறையிடலாம். நமக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், அரசு ஆவணங்களை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து விடலாம் என கூறி, கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் தருமபுரி பிரதான சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • விதை சுத்திகரிப்பு நிலையத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.
    • வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடித்திட அலுல வர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடுமாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் கெட்டிச்செவியூர், சின்னாரி பாளையம் பகுதியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் ஏர்முனை கூட்டுப்ப ண்னைய உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் செயல்படும் சேமிப்பு கிடங்குடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நிருபர்களிடம் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண்மை - உழவர் நலத்துறை, தோட்ட க்கலை மற்றும் மலைப்ப யிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணி கத்துறை ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு திட்டப்ப ணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி, மாநில வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தரச்சான்று டன் கூடிய தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்கும் நோக்குடன் ஈரோடு மாவட்டத்தில் 6 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சேமிப்புக் கிடங்குடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்திட விதை மற்றும் விதைப்பொருட்கள் பெருக்க துணை திட்டத்தில் ரூ.3.60 கோடி ஒதுக்கீட்டில் 2021-22-ல் ஒரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும் மற்றும் 2022-23-ல் 5 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தி ற்கும் என சுமார் 6 உழவர் உற்பத்தியாளர் நிறுவன ங்களுக்கும் தலா ரூ.60 லட்சம் வீதம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்து றை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மேலும் 6 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்க ளுக்கும் தெரிவு செய்ய ப்பட்டு பணிகள் தொடங்க ப்பட்டு ரூ2.94 கோடி இது வரையில் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் 4 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களான ஈரோடு துல்லியபண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், ஏர்முனை கூட்டு ப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், நவரத்தினா கூட்டு ப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் பாசம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியவைகளில் எந்திரங்கள் நிறுவப்பட்டு விதை உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளது.

    மற்றும் 2 உழவர் உற்ப த்தியாளர் நிறுவனங்களான கழனி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் உழவன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய கட்டிடப்பணிகள் முடிவுற்று எந்திரங்கள் நிறுவிட தயார் நிலையில் உள்ளன.

    மேலும் அரசு மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவன ங்கள் மூலமாக தரமான விதைகள், விவசாயிகளுக்கு உரிய பருவத்தில் கிடைத்திட சீரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப ட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட நம்பியூர் வாரச்சந்தை வளாகத்தில் கலைஞர் நகர்ப்புறமேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.460.63 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டிடம் கட்டும் பணியினையும்,

    நம்பியூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட அஞ்சானூர் ஊராட்சி, ஓணான் குட்டை பகுதியில் 15-வது நிதிக்குழுமானிய திட்டத்தின் கீழ் ரூ.1.77 லட்சம் மதிப்பீட்டில் கசடுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதையும்,

    ஓணான்குட்டை ஊராட்சி ஒன்றிய தொட க்கப்பள்ளியில் ரூ.1.69 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும்,

    சுண்டக்கா ம்பாளையம் ஊராட்சி, சுண்டக்காம் பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தி னையும், சட்டைய ம்பாளை யம் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.39.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய நல கூடத்தினையும் மற்றும் கு.கலத்தூர் ஊராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதி திட்டத்தின் கீழ் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கப்ப ட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடித்திட அலுல வர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கரட்டுப்பா ளையம் ஊ ராட்சி, கரட்டு ப்பாளையம் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய வேளா ண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.40 ஆயிரம் மானிய உதவியுடன் நிரந்தரகல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதையும் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் ரூ.75 ஆயிரம் மானிய உதவியுடன் வழங்க ப்பட்டுள்ள மினி டிராக்ட ரையும் பார்வை யிட்டு, இவற்றின் பயன்பாடு கள் குறித்து விவசாயிடம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது உதவி இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை) ஜீவதயாளன், நிர்வாக அலுவலர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்து றை) அபிநயா, நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவல ர்கள் பெருமாள், சுபா, வட்டார மருத்துவ அலுவலர் மரு.குமார் உள்பட துறை சார்ந்த அலுலவர்கள் உடன் இருந்தனர்.

    • தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • ரெயிலில் 21 வேகன்களில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது.

    இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இது தவிர கோடைகால நெல் சாகுபடியும் நடைபெறும்.

    இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் அரிசியாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1, 250 டன் புழுங்கல் அரிசி ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன.

    பின்னர் சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ×