பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற விளாத்திகுளம் வீரருக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பாராட்டு

மகாராஜா பர்மிங்காம் நகரில் உலக அளவில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார். இதனயைடுத்து கிரிக்கெட் வீரர் மகாராஜாவை, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ,, நேரில் அழைத்து பாராட்டி அவருக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார்.
பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில்  வெள்ளி பதக்கம் வென்ற விளாத்திகுளம் வீரருக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பாராட்டு
Published on

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பசுவந்தனை அருகே உள்ள மீனாட்சிபுரம் ஊராட்சி, கே.துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மகாராஜா என்ற விளையாட்டு வீரர் கடந்த மாதம் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் உலக அளவில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார். இதனயைடுத்து கிரிக்கெட் வீரர் மகாராஜாவை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ,, நேரில் அழைத்து பாராட்டி அவருக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார். அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் விரைவில் ஊக்கத்தொகை பெற்று தரவும், கொரோனா காலகட்டத்தில் தந்தையை இழந்த மகாராஜாவிற்கு அரசு பணி விரைவில் கிடைத்திடவும் நடவடிக்கை எடுப்பதாக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com