விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்

கன்னிமார்கூட்டம் கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 31 ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்
Published on

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே உள்ள கன்னிமார்கூட்டம் கிராமத்தில் காளியம்மன், பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சின்ன மாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 31 ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

மாட்டு வண்டி பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com