search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Waragi Amman"

    • வாராகி அம்மனை தரிசனம் செய்ய உகந்த தினமாக கருதப்படும் தேய்பிறை பஞ்சமி தினமும், வெள்ளிக்கிழமையும் ஒன்றாக கூடி வருவதையொட்டி கோவிலில் விசேஷ பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் வாழை இலையில் அரிசி, தேங்காய், பழம் வைத்து தேங்காய் விளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.

    விளாத்திகுளம்:

    ஆனி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு எட்டய புரம் அருகே உள்ள என். சுப்புலாபுரம் என்ற நரிப்பட்டி கிராமத்தில் உள்ள வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, விருதுநகர், ராம நாதபுரம் என பல்வேறு பகுதி களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.

    தேய்பிறை பஞ்சமி

    மேலும் வாராகி அம்மனை தரிசனம் செய்ய உகந்த தினமாக கருதப்படும் தேய்பிறை பஞ்சமி தினமும், வெள்ளிக்கிழமையும் ஒன்றாக கூடி வருவதையொட்டி கோவிலில் விசேஷ பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, வாராகி அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு எலுமிச்சை, செவ்வரளி, விரலி மஞ்சள், அதிரசம், தென்னங்குருத்து மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடத்தப்பட்டது.

    தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் வாழை இலையில் அரிசி, தேங்காய், பழம் வைத்து தேங்காய் விளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனை வருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    சிறப்பு பூஜைகள்

    இந்த நரிப்பட்டி வாராகி அம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி நாட்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பல்லா யிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×