search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vegetable"

    • மழைக்காலங்களில் உருளைக்கிழங்கு கேரட், பீன்ஸ் ஆகியவற்றில் நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • பேசிலோமைசீஸ் கலவையை ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 கிலோ தொழுவூரத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் பருவமழைக்காலம் நடக்கிறது. இதனால் பயிர்களில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அபாயம் அதிகம் உள்ளது. எனவே அங்கு உள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்களை ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் மேலாண்மை மூலம் தற்காத்து கொள்வது எப்படி என்பது தொடர்பாக கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர், திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேலாண்மை அறிவியல் நிலைய அதிகாரிகள் செயல்விளக்கம் செய்து காட்டினர்.

    அப்போது மழைக்காலங்களில் உருளைக்கிழங்கு கேரட், பீன்ஸ், முட்டைக்கோசு மற்றும் சைனீஸ் காய்கறி ஆகியவற்றில் நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே ட்ரைக்கோ டெர்மா உள்ளிட்ட நுண்ணுயிர் கலவைகளை ஒரு ஏக்கருக்கு 2 புள்ளி வீதம் 5 கிலோவை, 200 கிலோ தொழு உரத்துடன் கலந்து வயல் முழுவதும் தெளித்து வந்தால், நோய் வரும் முன்பாகவே தற்காத்து கொள்ளலாம்.

    அதேபோல நோய் எதிர்ப்பு திறன் மிகுந்த பயிர் வகைகளை பயிரிடுவது, பரிந்துரைக்கப்பட்ட அளவில் பூஞ்சன கொல்லிகளை சரியான கால இடைவெளியில் பயன்படுத்தி ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகளை மேற்கொள்வது ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது.

    அதிலும் குறிப்பாக கேரட், உருளைக்கிழங்கு பயிர்களில் மிகவும் சவாலாக உள்ள நூல் புழுக்களை பேசிலோமைசீஸ் கலவையை ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 கிலோ தொழுவூரத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.

    மேலும் வரப்பு ஓரங்களில் கடுகு, செண்டுமல்லி ஆகிய பூச்சிகளை கவரும் பொறிபயிர்கள் பயிரிட்டு, அங்கு ஏக்கருக்கு 2 எண்கள் சோலார் விளக்கு பொறி, லிட்டருக்கு 12 எண்கள் மஞ்சள் ஒட்டு பொறிகளை பயன்படுத்தி ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை களை செய்தால், விவசாயிகள் செலவினங்களை குறைத்து பயனடைய முடியும் என்று அதிகாரிகள் நேரடி செயல் விளக்கம் மூலம் பயிற்சி அளித்தனர்.

    • காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
    • தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    சென்னை:

    தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே காய்கறி சந்தைகளுக்கான சரக்கு லாரிகளின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதேபோல் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    இந்நிலையில் தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    • ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து உள்ளது.
    • தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி போன்றவற்றின் விலை உச்சத்தை தொட்டு வருகின்றன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைவு எதிரொலியாக தக்காளி விலை உயரத் தொடங்கியது. ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் ரூ.120 முதல் 130 வரை உயர்ந்து விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படும் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று ஈரோடு சம்பத் நகர் மற்றும் சத்தியமங்கலத்தில் உள்ள உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலிவு விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பத் நகரில் 250 கிலோ தக்காளி ஒரு மணி நேரத்தில் வீற்று தீர்ந்தன. இதேபோல் சத்தியமங்கலத்தில் 150 கிலோ தக்காளி ஒரு மணி நேரத்தில் வீற்று தீர்ந்தன.

    நேற்று ஓசூரில் இருந்து விவசாயிகளிடம் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் இன்று மற்ற பகுதியில் செயல்படும் உழவர் சந்தைகளில் தக்காளி மலிவு விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி தெரிவித்திருந்தார்.

    ஆனால் இன்று ஓசூரில் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய முடியாததால் தாளவாடியில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்கப்பட்டது. ஆனால் அதே நேரம் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.104-க்கு விற்கப்பட்டது.

    ஈரோடு சம்பத் நகரில் இன்று தோட்டக்கலைத்துறை சார்பாக 150 கிலோ தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. இவை சில மணி நேரத்தில் வீற்றுத் தீர்த்து விட்டன. இதேப்போல் சத்தியமங்கலத்திலும் 100 கிலோ தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    இன்று முதல் கோபி, பெருந்துறை உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பாக ஒரு கிலோ தக்காளி ரூ.85-க்கு விற்கப்பட்டது. நாளை ஓசூரில் இருந்து மீண்டும் விவசாயிகளிடமிருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டால் விலை குறையும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி தெரிவித்துள்ளார்.

    இதேப்போல் ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி போன்றவற்றின் விலை உச்சத்தை தொட்டு வருகின்றன.

    இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.110 -க்கு விற்பனை ஆனது. இதே போல் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று புதிய உச்சமாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 150 க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.10 அதிகரித்து ரூ.160-க்கு விற்பனை ஆனது.

    இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காய்கறிகள் விலை தொடர்ந்து வருவதால் மக்களின் கவனம் இப்போது கீரைகள் மீது திரும்பி உள்ளது. கீரை விலை மலிவாக இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். சிறுகீரை, மிளகு தக்காளி கீரை, அரைக்கீரை, பாலக்கீரை, செங்கீரை, முருங்கைக்கீரை ஆகிய கீரை ஒரு கிலோ ரூ.10 -க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் கரிசலாங்கண்ணி கீரை, தண்டுக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகிய கீரைகள் ஒரு கிலோ ரூ. 8-க்கு விற்கப்படுகிறது. கடந்த 3 நாட்களாக கீரை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் எலுமிச்சம் பழம் வியாபாரமும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. காய்கறியின் விலை உயர்வால் பொதுமக்கள் எலுமிச்சம் பழத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு எலுமிச்சம் பழம் ரூ.4 முதல் 7 வரை விற்கப்படுகிறது. தக்காளி, காய்கறி விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தற்போது எலுமிச்சை சாதம், புளி சாதத்திற்கு மாறி உள்ளனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டிய நிலை யில் இன்று கிலோ ரூ.130 ஆக உயர்ந்தது.
    • மிளகு ரூ.760 ஆகவும் அதிகரித்ததால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மார்க்கெட்களுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் காய்கறிகள் வருவது வழக்கம்.

    ஆனால் கடந்த சில நாட்களாக ஆந்திரா, கர்நாடகாவில் விளைச்சல் குறைந்ததால் காய்கறிகள் வரத்தும் குறைந்துள்ளது.

    காய்கறி விலை

    இதனால் கடந்த சில நாட்களாக டவுன் நயினார் குளம் மார்க்கெட், பாளை மார்க்கெட்களில் காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டிய நிலை யில் இன்று கிலோ ரூ.130 ஆக உயர்ந்தது. இதே போல சாம்பார் வெங்காயம் விலையும் ரூ.150 ஆக உயர்ந்தது. இஞ்சி விலை கடுமையாக உயர்ந்து கிலோ ரூ.300-க்கு விற்பனையாகிறது.

    குடை மிளகாய், பச்சை மிளகாய் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. கத்திரிக்காய் ரூ.50 முதல் 60 வரையிலும் விற்கப்படும் நிலையில் கேரட் விலை ரூ.95 ஆக உயர்ந்து உள்ளது. நாட்டு பூண்டு ரூ.180, கொடைக்கானல் மலைப் பூண்டு ரூ.300, இமாச்சல் பூண்டு ரூ.200-க்கு விற்கப்படுகிறது.

    சீரகம் கிலோ ரூ.800

    இந்த நிலையில் மளிகை பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இன்று பாளை மார்க்கெட்டில் சீரகம் விலை கிலோ ரூ.800- ஆக உயர்ந்தது. மிளகு ரூ.760 ஆகவும் அதிகரித்ததால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதே போல துவரம் பருப்பு ரூ.158-ம், உளுந்து ரூ.132-ம், மல்லி ரூ.110-ம், வெந்தயம் ரூ.130-ம், கடுகு ரூ.120 ஆகவும் உயர்ந்துள்ளது.

    காய்கறிகளின் விலையை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் அதிகரித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

    • மதுரை காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி விலை அதிகரித்துள்ளது.
    • இஞ்சி விலை ரூ.300, சின்ன வெங்காயம்-ரூ.90..

    மதுரை

    மதுரையில் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தக்காளி, இஞ்சி உள்ளிட்டவற்றின் விலைகள் பொதுமக்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றன.

    மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படு கிறது. இதனால் ஒட்டன் சத்திரம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுரை மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு வரும்.

    மேலும் வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளி, சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் விற்ப னைக்கு வருவது வழக்கம். வெளி மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தற்போது காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக மதுரை மார்க்கெட்டுகளில் விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மதுரை மார்க்கெட்டு களில் தக்காளியின் விலை கடந்த 2 வாரங்களாக உச்சத்தில் இருந்து வருகிறது உழவர் சந்தைகளில் ரூ.100-ஐ தாண்டி விற்கப்படும் தக்காளி வெளி மார்க்கெட்டுகளில் ரூ.140 வரை விற்பனையாகி வருகிறது. பச்சை மிளகாய் கடந்த சில நாட்களாக கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை சற்று குறைந்து ரூ.100-க்கு விற்பனையாகி வருகிறது.

    இஞ்சியை பொறுத்த வரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.220-க்கு விற்கப்பட்டது. தற்போது அதன் விலை மேலும் அதிகரித்து ரூ.270-க்கு உழவர் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனால் வெளி மார்க்கெட்டுகளில் இஞ்சியின் விலை ரூ.300-ஐ தாண்டி உள்ளது. தற்போது இஞ்சி சீசன் இல்லை என்பதாலும் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை என்பதாலும் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரி கள் தெரிவித்துள்ளனர்.

    காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அசைவ உணவிற்கு அதிக முக்கியத்து வம் தருவதாகவும், அதற்காக இஞ்சியின் தேவை அதிகரித் துள்ளதாலும் விலை உயர்ந்து வருவதாகவும் சில வியாபாரிகள் கூறுகின்ற னர்.

    மதுரையில் உள்ள உழவர் சந்தைகளில் மற்ற காய்கறிகள் விலை விவரம் வருமாறு:-

    கத்திரிக்காய்-ரூ.36, முருங்கைக்காய்-ரூ.50, உருளை-ரூ.50, கேரட் -ரூ.70, பட்டர் பீன்ஸ் -ரூ.120, முட்டைக் கோஸ்-ரூ.30, பச்சை மிளகாய்-ரூ.110, சின்ன வெங்காயம்-ரூ.90, பெரிய வெங்காயம்-ரூ.30, பூண்டு-ரூ.200, மல்லி-ரூ.90, கறிவேப்பிலை-ரூ 36 ஆக உள்ளது.

    தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றின் திடீர் விலை உயர்வுக்கு பதுக்கலும் ஒரு காரணம் என்று தெரிய வந்துள்ளது. விலை ஏற்றம் காரணமாக அதிக லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இந்த காய்கறிகளை சில வியாபாரிகள் தங்களது குடோன்களில் அதிக அளவில் பதுக்குவதாகவும் அதனால் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்படுவ தாகவும் புகார் எழுந்துள்ளது.

    எனவே காய்கறிகளின் விலை மேலும் உயராமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறி குடோன்களில் தக்காளி, இஞ்சி உள்ளிட்ட காய்கறிகள் பதுக்கப்பட்டுள்ளதா? என்பதை சோதனை செய்து கண்டறிய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ‘காய்கறி’ விலை கடும் உயர்வால் ‘கறி’க்கு பொதுமக்கள் மாறினர்.
    • இந்த விற்பனையால் இறைச்சி கடைக்காரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மதுரை

    பொதுவாக ஆன்மீகத் திற்கு உகந்ததாக கருதப்படும் கார்த்திகை, மார்கழி மாதங் களில் அசைவ பிரியர்கள் சைவத்திற்கு மாறுவார்கள் என்பதாலும், சபரிமலை யாத்திரை செல்பவர்கள் எண்ணிக்கையை கணக்கில் கொண்டும் காய்கறிகளின் விலை உச்சம் தொடும்.

    அதேபோல் சுபமுகூர்த்த நாட்கள் மிகுந்த தை, மாசி வைகாசி, ஐப்பசி மாதங்க–ளில் சராசரியாக காய்கறி–களின் விலை உயரும். மற்ற மாதங்களில் காய்க–றிகளின் விலை குறைவா–கவே இருக் கும்.

    ஆனால் தற்போது வழக் கத்திற்கு மாறாக ஆனி மாதத்தில் காய்கறிகளின் விலை எதிர் பாராத அள–வுக்கு புதிய உச்சம் தொட் டுள்ளது. குறிப்பாக தக்கா–ளியின் விலை 100 ரூபாயை தாண்டி–யுள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.

    அதேபோல் சின்ன வெங் காயத்தின் விலையும் 100 எட்டி இல்லத்தரசிகளுக்கு பெரும் சுமையை கொடுத் துள்ளது. இதனால் பெரும் பாலான உணவகங்கள் தக்காளியை தவிர்த்து வருகி–றது. அதேபோல் சின்ன வெங்காயத்திற்கு பதிலாக பெரிய வெங்காயத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    இந்தநிலையில் சைவம், அசைவம் இரண்டையும் சாப்பிடுபவர்கள் அசை–வத்திற்கு தற்போது முழுமை–யாக மாறியுள்ளனர். காய்க–றிகளின் விலையை விட இறைச்சி வகைகளின் விலை குறைவாக இருப்ப–தாக கருத்து தெரிவித்துள்ள அவர்கள் காய்கறிகளின் அபரிமிதமான இந்த விலையேற்றம் தங்களது அன்றாட செலவை இரு–மடங்காக்கி விட்டதாக ஆதங்கத்துடன் தெரிவித்து வருகிறார்கள்.

    ஞாயிற்றுக்கிழமை விடு–முறை தினமான இன்று காய்கறி மார்க்கெட்டுகள் பெரும்பாலும் வெறிச்சோ–டியே காணப்பட்டன. அதற்கு மாறாக இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதே–போல் மீன் விற்பனை–யும் இன்று அமோகமாக இருந் தது.

    மதுரை மாநகரில் நெல் பேட்டை, தெற்குவாசல், கருப்பாயூரணி, நரிமேடு, காளவாசல், மாட்டுத்தா–வணி, பழங்காநத்தம், மக–பூபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடு, மாடு, மீன் விற்பனை கடை–களில் ஏராளமானோர் குவிந்தனர்.

    இதில் ஆட்டுக்கறியை பொறுத்தவரை எலும்புடன் கிலோ ரூ.700, தனிக்கறி ரூ.800 என்றும், கறிக்கோழி கிலோ ரூ.190, நாட்டுக்கோழி கிலோ ரூ.550 முதல் ரூ.600 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. சராசரியாக ஆட்டு இறைச் சிக்கு ஒரு கடையில் 10 முதல் 15 ஆடுகள் வரை விற் பனையானது.

    அதிரடியான இந்த விற்பனையால் இறைச்சி கடைக்காரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தக்காளி, மிளகாய், பீன்ஸ், கத்தரிக்காய் கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகிறது.
    • இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனக மூலம் சந்தைக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ள ரிக்காய், புடலங்காய், தடி யங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஓசூர், பெங்களூர் பகுதிகளில் இருந்து தக்காளியும், மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து கேரட், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளும் விற்பனைக்காக வருகிறது.

    கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் காய்கறிகளின் உற்பத்தி அடியோடு பாதிக் கப்பட்டது. இதனால் மார்க்கெட்டுகளுக்கு வரக்கூ டிய காய்கறிகளின் வரத்து குறைய தொடங்கியது. இதனால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி, மிளகாய், பீன்ஸ், கத்தரிக்காய் கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. இதனால் இல்லத்தரசிகள், பொதுமக்கள் கடும் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    தக்காளி வரத்தை பொறுத்தமட்டில் வழக்கமாக வரக்கூடிய அளவைவிட மிகக்குறைவான அளவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம் சந்தைக்கு வருகிறது. இதனால் தினமும் தக்காளியின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.100-ஐ தொட்டது.

    இந்த நிலையில் இன்றைய தக்காளி கிலோ ரூ.110-க்கு விற்பனை ஆகி வருகிறது. 28 கிலோ எடை கொண்ட ஒரு பாக்ஸ் தக்காளி ரூ.3500-க்கு விற்பனையானது. தக்காளி வரத்து குறைவாக உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

    பீன்ஸ் விலையும் கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.120-க்கு விற்பனையானது. மிளகாய் விலை வரலாற்றில் இதுவரை விற்பனை இல்லாத அளவிற்கு கிலோ ரூ.180 ஆக உயர்ந்து காணப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட நிலையில் மிளகாய் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. நாட்டுக்கத்தரிக்காய் கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்டது. இஞ்சி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ இஞ்சி ரூ.80-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் 3 மடங்கு விலை உயர்ந்து கிலோ ரூ.240-க்கு விற்கப்பட்டது. நாகர்கோவில் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

    தக்காளி ரூ.110, கேரட் ரூ.90, வழுதலங்காய் ரூ.80, நாட்டு கத்தரிக்காய் ரூ. 120, வரி கத்தரிக்காய் ரூ.60, வெள்ளரிக்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.35, பல்லாரி ரூ.29, பீன்ஸ் ரூ.130, புடலங்காய் ரூ.50, வெண்டைக்காய் ரூ.50, மிளகாய் ரூ.150, பூண்டு ரூ.150, இளவன்காய் ரூ.30,

    காய்கறி விலை உயர்வு குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், நாகர்கோவில் மார்க்கெட்டுகளுக்கு கடந்த சில நாட்களாக வரக்கூடிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. தக்காளி, மிளகாயை பொறுத்தமட்டில் இதுவரை இல்லாத அள விற்கு உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உற்பத்தி குறைந்ததே ஆகும். இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

    • அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு பசுமை காய்கறிகளை வழங்க வேண்டும்.
    • குழந்தைகள் பாதுகாப்பான முறையில் தங்குவதற்கான கட்டிட வசதியை அமைத்துத்தர வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி, அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அமிர்தசரோவர் திட்டத்தின் கீழ் தூர்வாரி, ஆழ்படுத்தப்பட்ட ஊராட்சி குளத்தையும், மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் இயக்குனர் அமுதவல்லி மற்றும் மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் கட்டிடப் பணிகளை துரிதமாகவும் தரமாகவும் கட்ட வேண்டும்.

    அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு பசுமை காய்கறிகளை வழங்க வேண்டும். மேலும் அங்கன்வாடி குழந்தைகள் பாதுகாப்பான முறையில் தங்குவதற்கான கட்டிட வசதியை அமைத்து தர வேண்டும் என்றார்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், சீர்காழி ஆர்டி.ஓ அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் செந்தில்கு மார், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார்.

    உதவி செய ற்பொறியாளர் சீதாலட்சுமி, ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி,வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் பூர்ணசந்திரன், தாரா, பலராமன், ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி சுப்பையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணராயபுரம் பகுதியில் காய்கறி சாகுபடி பணி தீவிரமடைந்துள்ளது
    • கத்திரிக்காய் கிலோ 30 ரூபாய், வெண்டைக்காய் கிலோ 20 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, புனவாசிப்பட்டி, பாப்பாப்பட்டி, வயலுார், சரவணபுரம், சிவாயம் ஆகிய கிராமங்களில் குறைந்த செலவில் அதிகம் வருமானம் தரக்கூடிய காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கத்திரிக்காய், வெண்டைக்காய் சாகுபடி நடந்துள்ளது. சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. விவசாயிகள் காய்களை பறித்து கரூர், குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும் மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். கத்திரிக்காய் கிலோ 30 ரூபாய், வெண்டைக்காய் கிலோ 20 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

    • நடப்பு நிதியாண்டில் 1,300 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • இணையதளத்தில் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மானியத்தில் மாடி தோட்டம் அமைக்க, பயனாளிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் கலைச்செல்வன் அழைப்பு விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மாடி தோட்டம் மூலம் காய்கறி உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க நடப்பு நிதியாண்டில் 1,300 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    ஒரு பயனாளிக்கு 450 ரூபாய் மதிப்பில் காய்கறி வளர்ப்பு பைகள், 2 கிலோ கோகோ பீட், 6 வகையான காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி, வேப்பெண்ணெய், தொழில் நுட்ப கையேடு, பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் அந்தந்தவட்டார தோட்ட க்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அல்லது www.tnhorticulture.tn.gov.in/kit என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து பயன் பெறலாம்.

    திட்ட விபரங்களுக்கு கீழ்க்கண்டவட்டார தோட்டக்கலை உதவிஇயக்கு நர்களை தொடர்பு கொள்ள வேண்டும். தஞ்சாவூர் மற்றும் பூதலூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் - 9943422198. ஓரத்தநாடு மற்றும் திருவோணம் தோட்டக்கலை உதவி இயக்குநர் -9488945801.

    பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் தோட்டக்கலை உதவி இயக்குநர்- 9597059469.

    கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் உதவி இயக்குநர்- -9842569664.

    பாபநாசம், அம்மாப்பேட்டை மற்றும் திருவையாறு தோட்டக்கலை உதவி இயக்குநர் -9445257303.

    பேராவூரணி மற்றும் சேதுபா வாசத்திரம் தோட்ட க்கலை உதவி இயக்குநர் 8903431728 ஆகிய செல்போன் எண்களில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எஸ்.புதூரில் காய்கறி, மிளகாய் உற்பத்தியாளர்களுக்கான கருத்தரங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • தொழில்நுட்ப ரீதியாக சந்தைப்படுத்துவதற்கான முறைகளை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் காய்கறி மற்றும் மிளகாய் உழவர் உற்பத்தியாளர்களுக்கான கருத்தரங்கு நடந்தது. இதை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியப்பகுதியில் காய்கறி மற்றும் பப்பாளி பழங்கள் வெகுவாக விளைகின்றன. அதனை முறையாக தொழில்நுட்ப ரீதியாக சந்தைப்படுத்துவதற்கான முறைகளை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    விவசாயிகளுக்கு பய னுள்ள வகையில், பல்வேறு தொழில் நுட்பங்கள் குறித்து, திறன்மிக்க வல்லுநர்களை கொண்டு இந்த கருத்தரங்கில் எடுத்துரைக்கப்படவுள்ளது. இதனை முறையாக பயன்படுத்திக் கொண்டு மற்ற விவசாயிகளுக்கும் இது குறித்து எடுத்துரைத்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    இந்த கருத்தரங்கில் பல்வேறு வகையான விதைகளை விவசாயி களுக்கு கலெக்டர் வழங்கினார். இதில் டாக்டர்கள் செந்தில்குமார், சங்கர், துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) தமிழ்செல்வி, போஸ், மண்டல ஒருங்கி ணைப்பாளர் (விதைகள்) ஜீவானந்தம், வேளாண்மை அலுவலர்கள் காளிமுத்து, கனிமொழி மரகதம், புவனேசுவரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    குமாரபாளையத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட தினசரி காய்கறி மார்க்கெட் கட்டப்பட உள்ளது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  2 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட்  கட்டப்பட உள்ளது. 

    கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில்  அமைக்க,  சேர்மன் விஜய்கண்ணன், நகராட்சி கமிஷனர், பொறியாளர் மற்றும் கவுன்சிலர்களால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மார்க்கெட் கடைகள் தற்காலிகமாக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அமைக்கப்பட்டது.

    ×