கிருஷ்ணராயபுரம் பகுதியில் காய்கறி சாகுபடி பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம் பகுதியில் காய்கறி சாகுபடி பணி தீவிரமடைந்துள்ளது கத்திரிக்காய் கிலோ 30 ரூபாய், வெண்டைக்காய் கிலோ 20 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
கிருஷ்ணராயபுரம் பகுதியில் காய்கறி சாகுபடி பணி தீவிரம்
Published on

கரூர்,

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, புனவாசிப்பட்டி, பாப்பாப்பட்டி, வயலுார், சரவணபுரம், சிவாயம் ஆகிய கிராமங்களில் குறைந்த செலவில் அதிகம் வருமானம் தரக்கூடிய காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கத்திரிக்காய், வெண்டைக்காய் சாகுபடி நடந்துள்ளது. சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. விவசாயிகள் காய்களை பறித்து கரூர், குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும் மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். கத்திரிக்காய் கிலோ 30 ரூபாய், வெண்டைக்காய் கிலோ 20 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com