search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காய்கறி பயிர்களில் நோய்தாக்குதலை தடுப்பது எப்படி? நீலகிரி தோட்டக்கலை அதிகாரிகள் விளக்கம்
    X

    காய்கறி பயிர்களில் நோய்தாக்குதலை தடுப்பது எப்படி? நீலகிரி தோட்டக்கலை அதிகாரிகள் விளக்கம்

    • மழைக்காலங்களில் உருளைக்கிழங்கு கேரட், பீன்ஸ் ஆகியவற்றில் நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • பேசிலோமைசீஸ் கலவையை ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 கிலோ தொழுவூரத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் பருவமழைக்காலம் நடக்கிறது. இதனால் பயிர்களில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அபாயம் அதிகம் உள்ளது. எனவே அங்கு உள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்களை ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் மேலாண்மை மூலம் தற்காத்து கொள்வது எப்படி என்பது தொடர்பாக கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர், திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேலாண்மை அறிவியல் நிலைய அதிகாரிகள் செயல்விளக்கம் செய்து காட்டினர்.

    அப்போது மழைக்காலங்களில் உருளைக்கிழங்கு கேரட், பீன்ஸ், முட்டைக்கோசு மற்றும் சைனீஸ் காய்கறி ஆகியவற்றில் நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே ட்ரைக்கோ டெர்மா உள்ளிட்ட நுண்ணுயிர் கலவைகளை ஒரு ஏக்கருக்கு 2 புள்ளி வீதம் 5 கிலோவை, 200 கிலோ தொழு உரத்துடன் கலந்து வயல் முழுவதும் தெளித்து வந்தால், நோய் வரும் முன்பாகவே தற்காத்து கொள்ளலாம்.

    அதேபோல நோய் எதிர்ப்பு திறன் மிகுந்த பயிர் வகைகளை பயிரிடுவது, பரிந்துரைக்கப்பட்ட அளவில் பூஞ்சன கொல்லிகளை சரியான கால இடைவெளியில் பயன்படுத்தி ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகளை மேற்கொள்வது ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது.

    அதிலும் குறிப்பாக கேரட், உருளைக்கிழங்கு பயிர்களில் மிகவும் சவாலாக உள்ள நூல் புழுக்களை பேசிலோமைசீஸ் கலவையை ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 கிலோ தொழுவூரத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.

    மேலும் வரப்பு ஓரங்களில் கடுகு, செண்டுமல்லி ஆகிய பூச்சிகளை கவரும் பொறிபயிர்கள் பயிரிட்டு, அங்கு ஏக்கருக்கு 2 எண்கள் சோலார் விளக்கு பொறி, லிட்டருக்கு 12 எண்கள் மஞ்சள் ஒட்டு பொறிகளை பயன்படுத்தி ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை களை செய்தால், விவசாயிகள் செலவினங்களை குறைத்து பயனடைய முடியும் என்று அதிகாரிகள் நேரடி செயல் விளக்கம் மூலம் பயிற்சி அளித்தனர்.

    Next Story
    ×