search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்தரங்கு"

    • உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்த மாதம் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
    • பயண திட்ட ஏற்பாடுகள் தொழில் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030-ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு லட்சிய இலக்கினை நிர்ணயித்து உள்ளார்.

    இதன் பொருட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே சிறந்து விளங்கும் முதலீட்டுச் சூழலை மேம்படுத்தும் வகையிலும், மாநிலத்தின் வலுவான தொழில் சூழலமைப்பு மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் மனித வளத்தை, உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையிலும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்த மாதம் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

    இம்மாநாட்டினை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து இரு தினங்களும் பங்கேற்றார்.

    மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர், ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் சிறப்பு விருந்தினராக இம்மாநாட்டில் கலந்து கொண்டார்.

    தலைமைத்துவம், நீடித்த நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு இம்மாநாடு நடத்தப்பட்டது.

    இந்நிகழ்வில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்சு, ஜெர்மனி, டென்மார்க், சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய 9 நாடுகள் பங்குதாரர் நாடுகளாகவும், மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தாய்பெய் பொருளாதார மற்றும் சர்வதேச பங்குதாரர்களாக தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட்டன.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டு தினங்களில், முன் எப்போதும் இல்லாத அளவில் 6,64,180 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள். 14,54,712 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உள்ளிட்ட மொத்தம் 26,90,657 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தும் வகையில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இம்முதலீடுகள் பல்வேறு துறைகளில் இருந்து வரப்பெற்று உள்ளன. குறிப்பாக, மேம்பட்ட மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், மோட்டார் வாகனங்கள் மற்றும் மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாது காப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்டது. இவை தவிர பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் தங்கள் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற் கொண்டன.

    இம்மாநாட்டின் முக்கிய முதலீட்டாளர்களான டாடா பவர் நிறுவனம் (70,800 கோடி ரூபாய்), செம்ப்கார்ப் நிறுவனம் (37,538 கோடி ரூபாய்), அதானி குழுமம் (42,768 கோடி ரூபாய்), வின்பாஸ்ட் நிறுவனம் (16,000 கோடி ரூபாய்), டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (12,082 கோடி ரூபாய்). ஜெ.எஸ்.டபிள்யூ நிறுவனம் (12,000 கோடி ரூபாய்), ஹுண்டாய் நிறுவனம் (6.180 கோடி ரூபாய்), டி.வி.எஸ்.நிறுவனம் (5,000 கோடி ரூபாய்), பெகட்ரான் நிறுவனம் (1,000 கோடி ரூபாய்) மற்றும் செயிண்ட் கோபைன் (3,400 கோடி ரூபாய்) போன்ற குறிப்பிடத்தக்க நிறு வனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் அடங்கும்.

    இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் 6277.27 கோடி ரூபாய் முதலீட்டிலான பர்ஸ்ட் சோலார், குவால்கம் மற்றும் பெங் டே ஆகிய 3 நிறுவனங்களின் திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

    இது குறித்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறுகையில் தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை கொண்டு வரும் வகையில் இன்னும் பல லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 28-ந் தேதி ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா செல்வதுடன் அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா செல்கிறார் என்றார் .

    இதற்கான பயண திட்ட ஏற்பாடுகள் தொழில் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 28-ந் தேதி ஸ்பெயின் சென்று அங்கு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார். அங்கு நடைபெறும் கருத்தரங்கு நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார்.

    தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உண்டான சாதகமான சூழ்நிலை பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து கூற உள்ளார். அப்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் 5 நாட்கள் அமையும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

    • யானைகளை கையாளும் முறை குறித்து கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் விளக்கம்
    • யானைகள் வழித்தடத்தில் உள்ள தடைகள் குறித்து கல்லூரி பேராசிரியர் பேச்சு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், நாடுகாணி பகுதியில் உள்ள தமிழக வனத்துறைக்கு சொந்தமான ஜீன்பூல் காா்டனில், ஊட்டி அரசு கலைக்கல்லூரி வனஉயிரின உயிரியல்துறை, இந்திய வனஉயிரின அறக்கட்டளை சாா்பில் யானைகள் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

    நாடுகாணி வனச்சரக அலுவலா் வீரமணி வரவேற்றாா். கருத்தரங்கில் யானைகள் பாதுகாப்பு, மனிதன்- யானை மோதல், முரண்படும் யானைகளை கையாளும் விதம், களைச்செடிகளால் ஏற்படும் பாதிப்பு, களை மேலாண்மை மற்றும் யானைகளின் வாழ்வியல் முறை போன்ற தலைப்புகளில் கலந்தாய்வு நடைபெற்றன.

    இதன்அடிப்படையில் கூடலூா் வனக் கோட்டத்தில் மனிதன்-யானை மோதலை களைய கருத்துரு வழங்கப்பட்டது. ஊட்டி அரசு கலைக் கல்லூரி வனஉயிரின உயிரியல்துறை தலைவா் ராமகிருஷ்ணன் பேசுகையில், கூடலூா் கோட்டத்தில் 1976-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வனப்பரப்பில் ஏற்பட்டு உள்ள மாற்றம், பாதிப்புகள், யானைகள் வழித்தடத்தில் உள்ள தடைகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தாா்.முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் பேசுகையில், மனிதன்-யானை மோதல் ஏற்படும்போது யானைகளை கையாளும் முறை குறித்தும் விளக்கி கூறினார்.

    தொடர்ந்து வன உயிரின மோதல் குறித்த தெளிவுரை, கருத்து பரிமாற்றமும் நடைபெற்றது.

    • நவீன கால மேம்பாடுகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
    • 110 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆய்வு கட் டுரைகளை சமர்ப்பித்தார்கள்.

    நாகர்கோவில், நவ.5-

    தோவாளை சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் துறை சார்பாக தேசிய அளவி லான கருத்தரங்கு நடை பெற்றது. தாளாளர் எபநேசர் ஜோசப் தலைமை தாங்கி னார். சிறப்பு விருந்தி னராக இஸ்ரோ சிறப்பு விஞ்ஞானி டாபினி மனோஜா கலந்து கொண்டு கணினி பொறியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையின் நவீன கால மேம்பாடுகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.

    விழாவில் கல்லூரி முதல் வர் ஸ்பென்சர் பிரதாப் சிங், கணினி பொறியியல் துறை தலைவர் ஹாரியட் லிண்டா மற்றும் பலர் கலந்துகொண்ட னர். சுமார் 15 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 110 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆய்வு கட் டுரைகளை சமர்ப்பித்தார்கள்.

    விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஷெர்லி கனக பிரியா, துணை ஒருங்கிணைப்பாளர் மகிபா, மாணவர் பிரதிநிதி மெல்வின் சேம், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி செய் திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் சட்ட விழிப்புணர்வு மன்றத்தின் சார்பில் பெண்களுக்கான சட்டங்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது. கல்லூரி துணை முதல்வரும், கணினி பயன்பாட்டியல் துறை தலைவருமான முத்துலட்சுமி கலந்து கொண்டு இந்தியாவில் பெண்கள் தொடர்பான சட்டங்கள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் 2-ம் ஆண்டு மாணவர் ராம்குமார் வரவேற்றார்.

    முடிவில் சிவசுப்பிர மணியன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி செய்திருந்தார்.

    • சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • பாதுகாப்பு சட்டத்தில் உள்ள சிக்கல்களை மாண வர்களுக்கு எடுத்துரைத்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் சட்ட விழிப்புணர்வு மன்றத்தின் சார்பில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் குறித்த கருத்தரங்கு நடந்தது.

    சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகபாண்டி வரவேற்றார். கணினி பயன்பாட்டுத் துறை பேராசிரியர் கணேஷ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனிநபர் தரவுகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது மற்றும் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள சிக்கல்களை மாண வர்களுக்கு எடுத்து ரைத்தார்.

    முடிவில் சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் நிஷாந்த்குமார் நன்றி கூறினார்.

    • ஜெயங்கொண்டத்தில்பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
    • மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமை தாங்கினார்.

    ஜெயங்கொண்டம் 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமை தாங்கினார்.

    அரசு மருத்துவர் கீதா மணிவண்ணன் முன்னிலை வகித்தார். பீனிக்ஸ் பெண்கள் குழந்தைகள் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் கலந்துகொண்டு பெண் குழந்தைகள் உடல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும் போது நண்பர்கள் மற்றும் பெற்றோர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் பெண்கள் கல்வி விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை செய்ய வேண்டும் என பேசினார்.

    நிகழ்ச்சியில் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருட் சகோதரிகள் சகாயராணி, நிர்மலா பிரான்சிஸ், இணை செயலாளர் மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நிலவில் ஆய்வை மேற்கொண்டது.ஆதித்யா-எல்.1 சூரியனை ஆய்வு செய்கிறது.
    • இளநிலை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் விண்வெளியில் இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

    வேதியியல் துறைத்தலை வர் ராஜராஜன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரோசி தலைமை வகித்தார்.வேதியியல் துறை உதவி பேராசிரியர் சித்திரவேல் அறிமுக உரையாற்றினார்.

    இதில் சந்திராயன்- 3, ஆதித்யா எல்- 1 என்ற தலைப்பில் சதீஸ்தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநரும் சென்னை ஐ.ஐ.டி. கவுரவ பேராசிரியரும், விஞ்ஞானி யுமான பாண்டியன் பேசு கையில், இந்தியா, நிலவின் தென் துருவத்தில் உலகில் முதன்முதலாக கால் பதித்தது. சந்திராயன்-3 என்ற செயற்கைக்கோள் உதவியுடன் விக்ரம் லேண்டரை இறங்க வைத்து அதிலிருந்து பிரக்யான் ரோவர்என்பது நிலவில் ஆய்வை மேற்கொண்டது.ஆதித்யா-எல்.1 சூரியனை ஆய்வு செய்கிறது.

    இக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், இப்போது இஸ்ரோவில் பல்வேறு ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத் திக்கொண்டு பணியாற்றி வருபவரும் சங்கரன் உங்களுக்கெல்லாம் வழிகா ட்டியாக உள்ளார்.

    இளநிலை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இஸ் ரோவில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது என்றார்.

    மேலும், மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். முடிவில் வேதியியல் துறை இணைப் பேராசிரியர் ஞானசுந்தரம் நன்றி கூறினார்.

    • ராம்கோ பொறியியல் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்கு நடந்தது.
    • முடிவில் முதலாம் ஆண்டு மாணவி அனுசுபிக்சா நன்றி கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. 4-ம் ஆண்டு மாணவி திவ்யா வரவேற்றார். விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, தளவாய்புரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி , விருதுநகர் மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நவமணி, மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தின் வழக்குப் பணியாளர் செல்வி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு புறதொடர்பு பணியாளர் முத்துலட்சுமி , விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் கோபு, ஏட்டு பொன் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். முடிவில் முதலாம் ஆண்டு மாணவி அனுசுபிக்சா நன்றி கூறினார்.

    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • முடிவில் நாட்டுநல பணித்திட்டதிட்ட அலுவலர் வரேந்திரா நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுரை நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு அலகு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். இந்த கருத்தரங்கில் சாலை பாதுகாப்பு கோட்டபொறியாளர் (பொறுப்பு) வரலட்சுமி, உதவிக்கோட்டபொறியாளர் சாந்தினி, உதவிபொறியாளர்கள் காவியமீனா, கீதா ஆகியோர் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்ற வேண்டிய வழி முறைகள் பற்றி விளக்கி பேசினர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது.

    இதில் ஆசிரியர்கள் தங்கழகு, விவசாயஆசிரியர் சுரேஷ், ஸ்டாலின், கணினிஆசிரியர் செந்தில்குமரன் உள்பட மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டுநல பணித்திட்டதிட்ட அலுவலர் வரேந்திரா நன்றி கூறினார்.

    • கோகிலா சித்த மருத்துவமனை சார்பில் 6 நாள் சித்த மருத்துவ கருத்தரங்கு நடந்தது.
    • (சித்தா) ரோஜா ரமணி குத்து–விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    மதுரை

    மதுரை கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை, மத்திய ஆயுஷ் அமைச்சகம் நிதி உதவியுடன் சித்த மருத் துவர்களுக்கான தோல் நோய்கள் மற்றும் அழகு சிகிச்சைக்கான ஆறு நாட் கள் தொடர் மருத்துவ கருத் தரங்கு நடைபெற்று வருகி–றது. இந்த நிகழ்ச்சியை பூவந்தி அரசு ஆரம்ப சுகா தார நிலைய உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) ரோஜா ரமணி குத்து–விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை டாக்டர். வெங்கடேஷ் வரவேற்றார். இதில் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன், விருதுநகர் மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் சங்குமணி, மத்திய சித்தா ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சி அலுவலர் டாக்டர். மீனா, தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்கு னர் டாக்டர். மீனாகுமாரி, துச்சேரி மண்டல சித்த ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொறுப்பு) டாக்டர். சத்யரா ஜேஸ்வரன், டாக்டர். ஜெய வெங்கடேஷ்,

    கோகிலா சித்த மருத்துவ மனை மற்றும் ஆராய்ச்சி மைய உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர். பவித்ரா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனை வரையும் அருப்புக்கோட்டை சித்த மருத்துவமனை மருத்து வர் மணிகண்டன் வாழ்த்தி பேசினார். முடிவில் கோகிலா சித்த மருத்துவ மனை உயர் நிர்வாக அலுவ லர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் பணி வாய்ப்பு கருத்தரங்கு நடந்தது.
    • முடிவில் வணிகவியல் துறை பேராசிரியர் லட்சுமணகுமார் நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மற்றும் பணி வாய்ப்பு மையம் சார்பில் அரசு அலுவலகங்களில் தட்டச்சு மற்றும் ஸ்டெனோகிராபி திறன் கொண்டவர்களுக்கு "வேலைவாய்ப்பு" எனும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குமரேசன் பேசுகையில், அரசு பள்ளிக்கு செல்வதற்குரிய தகுதிகள் தமிழகம் மற்றும் மத்திய தேர்வாணையங்களில் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வழிமுறைகள் குறித்து எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் பணி அமர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேசன் வரவேற்றார். முடிவியல் வணிகவியல் துறை பேராசிரியர் லட்சுமணகுமார் நன்றி கூறினார்.

    • சிறந்த ஆராய்ச்சி கட்டுரையை எழுதுவது பற்றியும், தரவுகள் பற்றியும் பேசினார்
    • கலந்துகொண்ட நூலகர்கள், பேராசி ரியர்கள், மாணவ-மாணவிகளுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கான் கடை புனித கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான நூலக அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது. தொடக்க விழாவில் தாளாளர் மரியவில்லியம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தலைமை உரையாற்றினார். கல்லூரி நூலகர் விஜயகுமார் வரவேற்றார். குமரி மாவட்ட நூலக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் மேரி கருத்தரங்கத்தின் மைய உரையை கூறினார். கல்லூரி துணை முதல்வர் கிறிஸ்டஸ் ஜெயசிங் வாழ்த்தி பேசினார். கல்லூரி வாசகர் வட்டத்தின் முத்திரையை கல்லூரி தாளாளர் வெளியிட்டார். கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராக கேரள பல்கலைக்கழக நூலகர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன்பின் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை ஆக்னஸ் அலெக்ஸ் ரதி பல்வேறு மாவட்டகளில் இருந்து வந்திருந்த நூலகர்களையும், ஆராய்ச்சி மாணவர்கள், கல்லூரி மாணவ-மாணவி களுக்கு நன்றி கூறினார்.

    இரண்டாம் அமர்வில் சிறப்பு விருந்தினர் சுரேஷ்குமார் சிறந்த ஆராய்ச்சி கட்டுரையை எழுதுவது பற்றியும், தரவுகள் பற்றியும் பேசினார். 3-ம் அமர்வில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்துகொண்ட நூலகர்கள் கட்டுரை வாசிக்கப்பட்டு விவாதிக்கப் பட்டது. 4-ம் அமர்வில் நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு குமரி மாவட்ட நூலகர் அதிகாரி மந்திரம் தலைமை தாங்கி, தலைமை உரையாற்றினார்.

    கருத்தரங்கில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்துகொண்ட நூலகர்கள், பேராசி ரியர்கள், மாணவ-மாணவிகளுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டது. நிறைவு விழா நிகழ்ச்சியில் ஹோலி கிராஸ் கல்லூரி நூலகர் ஜெயகலா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், குமரி மாவட்ட நூலக கூட்டமைப்பு, டாக்டர் அம்பேத்கர் நூலகம், கல்லூரி வாசகர் வட்டம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. 

    ×