search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uttarakhand"

    உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலில் முதல் மந்திரி திரிவேந்திரா சிங் ராவத், யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் வாக்களித்தனர். #Uttarakhandelections
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 92 நகராட்சிகளில் 84 நகராட்சிகளுக்கு உட்பட்ட பஞ்சாயத்து பதவிகளில் மக்கள் பிரதிநிதிகளை நியமிக்க இன்று தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இங்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றிபெற்றுள்ள நிலையில் இந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    இந்த 84 நகராட்சிகளில் உள்ள 1064 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 4,978 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 12.20 லட்சம் ஆண்  வாக்காளர்கள், 11.33  லட்சம் பெண் வாக்காளர்கள் என மொத்தம் சுமார் 23.53 மக்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர்.



    இதற்காக மாநிலம் முழுவதும் 2265 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1258 கண்காணிப்பு மையங்களும் இயங்கி வருகின்றன.

    இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டேராடூன் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் உத்தரகாண்ட் முதல் மந்திரி திரிவேந்திரா சிங் ராவத் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார்.



    யோகா குரு பாபா ராம்தேவ் ஹரித்வார் நகரில் தனது வாக்கை பதிவு செய்தார். இன்று மாலையுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொது இடங்களிலும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். #UttarakhandCM #TrivendraSinghRawat #Uttarakhandelections  ##UttarakhandULBpolls
    தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. #Potato
    புதுடெல்லி:

    இந்திய தோட்டக்கலை உற்பத்தியில் முதன்மை வாய்ந்தது உருளைக்கிழங்கு. மலைப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த உருளைக்கிழங்குகள் குறித்து மத்திய ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் ஆய்வு செய்தது.

    நுண்ணிய ஒட்டுன்னி மூலம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 4 மாநில உருளைக்கிழங்கில் பூச்சி தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடும் ஒன்றாகும்.

    இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    இந்த 4 மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு விதை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்கள் மற்ற மாநிலங்களில் இருந்து உதவியை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    4 மாநிலங்களில் உருளைக்கிழங்குக்கு விதிக்கப்பட்ட தடையால் ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் இருக்காது. பஞ்சாப், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Potato
    ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். #JammukashmirAccident #PMModi
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பனிஹால் என்ற இடத்தில் இருந்து ரம்பான் நகரை நோக்கி ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று ஒரு மினி பஸ் சென்று கொண்டிருந்தது.

    கேலா மோத் பகுதியில் ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் உள்ள பெரிய பள்ளத்தில் விழுந்து, கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 10 பேர் படுகாயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    இதேபோல், உத்தரகாண்டில் உள்ள உத்தர காசியில் நடைபெற்ற சாலை விபத்தில் 9 யாத்ரீகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.



    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டரில் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என பதிவிட்டுள்ளது. #JammuKashmirAccident #PMModi
    உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில், பசுவை நாட்டின் தாயாக அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #Uttarakhand #RashtraMata
    டேராடூன்:

    இந்தியாவில் மாடுகளை பாதுகாக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் தீவிரமாக போராடி வருகின்றனர். சமீபத்தில் பசு பாதுகாவலர்கள் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பசுக்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த பசு பாதுகாவலகள் என்ற பெயரில் சிலர் வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    மேலும், நாட்டின் பல பகுதிகளிலும் பசுக்களை பாதுக்காக்க பல்வேறு மையங்கள் மற்றும் அமைப்புகள் நிருவப்பட்டு பரமாரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஒருபடி மேலே சென்று, பசுவை நாட்டின் தாய் என அறிவித்து புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இதுதொடர்பாக பேசிய உத்தரகாண்ட் மாநில கால்நடை பராமரிப்பு மந்திரி ரேகா ஆர்யா, இந்த தீர்மானத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும், மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் அளிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். #Uttarakhand #RashtraMata
    உத்தரகாண்ட் மாநிலத்தில் 10-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை பள்ளி நிர்வாகமே மறைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Uttarakhand
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் உள்ள உறைவிடப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி மாணவர்கள் 4 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போதே இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் பள்ளியின் கவுரவம் பாதிக்கப்படும் என்பதற்காக இதனை மூடி மறைத்துள்ளனர்.

    மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது எனவும் மாணவியை மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில், சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் கருவுற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து மாணவி தனது சகோதரியிடம் நடந்த அனைத்தையும் கூறவே, அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 1 மாதத்துக்கு முன்பு நடந்த இந்த கொடூரம் இப்போதே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதையடுத்து, 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த 4 மாணவர்களையும், இந்த சம்பவத்தை மறைத்த பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #Uttarakhand
    உத்தரகாண்ட் மாநிலத்தில் மந்திரிகளுக்கு இடையிலான ஆலோசனை கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை முழுவதும் தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகாஷ் பண்ட் தெரிவித்துள்ளார். #PlasticBan #Uttarakhand #PrakashPant
    டேராடூன்:

    பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியையும் பல்வேறு மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார். சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க நிரந்தர தடை விதிக்கப்பட்டது.



    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்திலும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில மந்திரி பிரகாஷ் பண்ட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதற்கும், சேமித்து வைக்கவும் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விளம்பரப்படுத்தவும் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். #PlasticBan #Uttarakhand  #PrakashPant
    உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 16-ம் தேதி முதல் இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற உள்ளது. #IndoUSMilitaryExercise #DefenceCooperation
    லக்னோ:

    இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து இரு நாட்டு ராணுவ வீரர்கள் பங்கேற்கும் போர் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஊடுருவல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. அவ்வகையில் 14-வது கூட்டு ராணுவ பயிற்சி வரும் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    யூத் அப்யாஸ் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த பயிற்சியானது இந்த ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் சாவ்பாட்டியாவில் உள்ள இமயமலை அடிவாரத்தில் நடைபெற உள்ளது. இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் அமெரிக்காவில் இருந்து 350 ராணுவ வீரர்களும், இந்தியா தரப்பில் அதே அளவிலான வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.


    இருநாட்டு ராணுவத்திலும் உள்ள நிர்வாக கட்டமைப்பு, ஆயுதங்கள், உபகரணங்கள், நம்பிக்கையூட்டும் பயிற்சி மற்றும் போர் ஒத்திகை உள்ளிட்டவை குறித்து பரஸ்பரம் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. #IndoUSMilitaryExercise #DefenceCooperation 
    உத்தரகாண்ட் மாநிலத்தில் மோகன்ரி என்ற மலைப்பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். #Uttarakhand
    அல்மோரா:

    உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டம் மோகன்ரி மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று நிலை தடுமாறி அங்கிருந்த 50 அடி பள்ளத்தில் விழுந்தது.

    இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 21-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகாமையிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் மீட்புப்படையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை கவனித்து வருகின்றனர்.



    பத்ரோக்ஜன் - பிகியாசன் சாலையில் நடைபெற்ற இந்த விபத்தை தொடர்ந்து அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Uttarakhand

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்ஜ் பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Uttarakhand #Accident
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்ஜ் பள்ளத்தாக்கின் மேல் இன்று மதியம் சென்று கொண்டிருந்த வேன், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், சுமார் 700 அடி பள்ளத்தாக்கில் அந்த வேன் கவிழ நேரிட்டது.

    இதையடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு, மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் வேனில் பயணம் செய்தவர்களில் 13 பேர் உயிரிழந்ததாகவும், மீனாட்சி மற்றும் ராதா ஆகிய இரு சிறுமிகள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    விபத்து ஏற்பட்ட கார்ஜ் பள்ளத்தாக்கில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிகமாக விபத்து ஏற்படும் பகுதிகளில் இந்த பள்ளத்தாக்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. #Uttarakhand #Accident
    தொடர் கனமழை காரணமாக, வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், 3 ஆறுகள், 9 கி.மீ., தூரத்தை கடந்து கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். #Assam #Uttarakhand
    இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் பெய்து வரும் பலத்த மழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

    அதேபோல் உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், அசாம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்கள் முழுவதிலும் உள்ள ஏரிகள், ஆறுகள் நிறைந்து வருகின்றன. பல்வேறு இடங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் பல்வேறு பகுதிகளுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். 

    அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் லகிம்பூர் மாவட்டம் ஜுகிபரி கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர், 9 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு கை வண்டியில் வைத்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 



    ஜுகிபரி பகுதியில் சரியான மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் வெள்ளம் பாய்ந்தோடும் 3 ஆறுகள் மற்றும் 9 கிலோமீட்டர் தூரத்தை கடந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

    அதேபோல், உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பிதோகார்க் மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரை அந்த ஊர் மக்கள் சுமார் 11 கிலோமீட்டர் தூரம் மலைப்பகுதி வழியாக தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். #Assam #Uttarakhand

    உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. #UttarakhandBusAccident
    டேராடூன்:  

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில் இருந்து ஹரித்வார் நோக்கி அரசு பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. அதில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    அந்த பேருந்து திஹ்ரி மாவட்டத்தின் சூர்யதார் பகுதியில் ரிஷிகேஷ் - கங்கோத்ரி நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் பலியானதாக முதக் கட்ட தகவல்கள் வெளியாகின.

    திஹ்ரி மாவட்டம் மற்றும் சம்பா மாவட்ட பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பேருந்து விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விபத்தில் பலியானவர்களுக்கு மாநில முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, மாநில அரசு சார்பில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அளித்தும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #UttarakhandBusAccident
    உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர். #UttarakhandBusAccident
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில் இருந்து ஹரித்வார் நோக்கி அரசு பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. அதில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    அந்த பேருந்து திஹ்ரி மாவட்டத்தின் சூர்யதார் பகுதியில் ரிஷிகேஷ் - கங்கோத்ரி நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

    இதனால் அருகிலிருந்த பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.



    தகவலறிந்து அங்கு திஹ்ரி மாவட்ட பேரிடர் மீட்புக்குழு மற்றும் சம்பா மாவட்ட மீட்புக்குழுவினர் விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்தவர்கள மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விபத்தில் பலியானவர்களுக்கு மாநில அரசு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அளித்தும் உத்தரவிட்டுள்ளது. #UttarakhandBusAccident
    ×