search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டமன்றம்"

    • சட்டமன்றத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • முஞ்சிறை, கொல்லங்கோடு அரசு மேல்நிலை பள்ளிகளில் சரி செய்ய வேண்டும்

    மார்த்தாண்டம் :

    முஞ்சிறை, கொல்லங்கோடு அரசு மேல்நிலை பள்ளிகளில் சிதலமடைந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்

    கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் சட்டசபையில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் முஞ்சிறை அரசு மேல்நிலை பள்ளியும், கொல்லங்கோடு நகராட்சியில் கொல்லங்கோடு அரசு மேல்நிலை பள்ளியும் உள்ளன. இங்கு அதிகமான மாணவ, மாணவியர்கள் படித்து தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனால் அந்த 2 பள்ளிகளிலும் கட்டிடங்கள் மிகவும் சிதலமடைந்திருக்கிறது. அந்த கட்டிடங்களை போர்க்கால அடிப்படையில் அதை சரி செய்து தர வேண்டும்.

    இதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், நான் ஏற்கனவே சொன்ன மாதிரிதான் 418 பள்ளிக்கூடம் இல்லாமல் மேலும் 173 பள்ளி கூடங்களுக்கு கிட்டத்தட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கூடங்களுக்கு இன்றைக்கு 215 கோடி ரூபாய்க்கு உட்கட்டமைப்பு வசதிக்கு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல் கூடுதலாக இன்னும் 252 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் கணக்கீடுகள் செய்யப்பட்டு அதற்கென்று தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

    அந்தந்த பகுதியை சேர்ந்து இருக்கிற கல்வி அலுவலர்கள் மற்றும் அந்த பகுதியில் இருக்கின்ற அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுக்கின்ற அந்த தகவல்களையும் நாங்கள் பெற்று கொண்டு மேலும் பத்திரிகை செய்தி மூலமாக வருகின்ற தகவல்களுக்கும் நாங்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி அதற்கும் இன்றைக்கு தனியாக நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மிக விரைவாக இந்த நிதி எல்லாம் வரவர அதற்கான வேலைகள் உடனடியாக நம்முடைய பொதுப்பணித்துறை அமைச்சரிடம் எடுத்து சொல்லி ஏனென்றால் 2 வாரத்திற்கு முன்னாடி அவர்கள் துறை சார்ந்து ஒரு கூட்டமே போட்டிருக்கிறார்கள்.

    இத்தனை மாதத்திற்குள் இத்தனை கட்டிடங்கள் இத்தனை வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். இன்னும் அதை நம்முடைய முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இன்னும் விரைவாக அந்த பணிகளை முடிக்கின்ற பணியில் நாங்களும் எங்களை ஈடுபடுத்தி கொள்வோம். அதன் அடிப்படையில் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார்.

    • சட்டசபை கூடும் காலம் 14 நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைப்பு
    • சபாநாயகருக்கு முதுகு தெரியும்படி எந்த உறுப்பினரும் உட்காரவும், நிற்கவும் கூடாது

    இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றமாக உத்தர பிரதேச மாநிலம் சட்டமன்றம் திகழ்கிறது. 403 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு, பேப்பர்களை கிழிப்பதற்கு, சத்தமாக சிரிப்பதற்கு விரைவில் தடைவர இருக்கிறது.

    இதற்கான புதிய விதிமுறைகள் நேற்றுமுன்தினம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்மீதான விவாதம் இன்று நடைபெற்று அதன்பின் நடைமுறைப்படுத்தப்படும்.

    சபாநாயகருக்கு முதுகு தெரியும்படி எந்த உறுப்பினரும் உட்காரவும், நிற்கவும் கூடாது. உரை நிகழ்த்தும்போது கேலரில் உள்ள யாரையும் சுட்டிக்காட்டக் கூடாது. அதேபோல் பாராட்டக்கூடாது.  புகைப்பிடிக்கக் கூடாது. சத்தமாக சிரிக்கக் கூடாது.

    சட்டசபை கூடும் காலம் 14 நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைப்பு. உறுப்பினர்கள் எந்தவிதமான குறிப்புகளையும் எடுத்துச் செல்லக் கூடாது. சட்டமன்ற முதன்மை செயலகம் அன்றைய தினத்திற்குரிய பணிக்குறிப்புகளை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெற செய்யும் போன்ற விதிமுறைகள் அதில் அடங்கியுள்ளன.

    • நாகூர் அனிபா நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
    • நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், சிறுபான்மையினர் நலன் மானிய கோரிக்கை விவாதத்தில், நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பேசியதாவது, இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவின் நூற்றாண்டு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.

    திராவிட இயக்கத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் தன்னுடைய குரலால் அரும்பணியாற்றிய அவருக்கு சிறப்பு செய்யும் வகையில், நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.

    நாகூரில் அவருக்கு நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க வேண்டும்.

    மேலும் நாகூர் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்.

    இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசினார்.

    ×