search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sukhwinder Singh Sukhu"

    • இமாசல பிரதேச மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார்.
    • புதிய முதல் மந்திரிக்கு பிரதமர் மோடி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    இமாசல பிரதேச மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. சிம்லாவில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக முதல்-மந்திரியாக சுக்விந்தர் சிங் சுகு (58), துணை முதல் மந்திரியாக முகேஷ் அக்னிகோத்ரி தேர்வு செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே, இமாசல பிரதேச மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக சுக்விந்தர் சிங் சுகு இன்று பதவி ஏற்றார்.

    இந்நிலையில், புதிய முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள சுக்விந்தர் சிங் சுகுவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இமாச்சல பிரதேச முதல் மந்திரியாக பதவியேற்ற சுக்விந்தர் சிங் சுகுவுக்கு வாழ்த்துகள். உங்கள் உயர்வு உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. இமாசல பிரதேச மக்களுக்கு சேவை செய்வதில், வெற்றிகரமான பதவிக் காலம் அமைய வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • குஜராத்தில் சாதனை வெற்றி பெற்ற பா.ஜ.க. இங்கு ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது.
    • நாளை காலை 11 மணிக்கு சுக்விந்தர் சிங் சுகு முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு நடந்த தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 75.6 சதவீத வாக்குகள் பதிவாகின. 68 இடங்களில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. அங்கு 1985-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் என்ற சரித்திரம், இந்த முறையும் மாறவில்லை; தொடருகிறது.

    குஜராத்தில் சாதனை வெற்றி பெற்ற பா.ஜ.க. இங்கு ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. இங்கு 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கிறது.

    இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழுவுக்கு தலைமை தாங்கிய நடத்திய சுக்விந்தர் சிங் சுகு, மாநில முதல் மந்திரியாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தௌன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுக்விந்தரை முதல் மந்திரியாக கட்சித் தலைமை இன்று அறிவித்துள்ளது.

    சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சுக்விந்தர் சிங் சுகு முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். நாளை காலை 11 மணிக்கு அவர் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    ×