search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகளில் சிதலமடைந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்
    X

    பள்ளிகளில் சிதலமடைந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்

    • சட்டமன்றத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • முஞ்சிறை, கொல்லங்கோடு அரசு மேல்நிலை பள்ளிகளில் சரி செய்ய வேண்டும்

    மார்த்தாண்டம் :

    முஞ்சிறை, கொல்லங்கோடு அரசு மேல்நிலை பள்ளிகளில் சிதலமடைந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்

    கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் சட்டசபையில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் முஞ்சிறை அரசு மேல்நிலை பள்ளியும், கொல்லங்கோடு நகராட்சியில் கொல்லங்கோடு அரசு மேல்நிலை பள்ளியும் உள்ளன. இங்கு அதிகமான மாணவ, மாணவியர்கள் படித்து தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனால் அந்த 2 பள்ளிகளிலும் கட்டிடங்கள் மிகவும் சிதலமடைந்திருக்கிறது. அந்த கட்டிடங்களை போர்க்கால அடிப்படையில் அதை சரி செய்து தர வேண்டும்.

    இதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், நான் ஏற்கனவே சொன்ன மாதிரிதான் 418 பள்ளிக்கூடம் இல்லாமல் மேலும் 173 பள்ளி கூடங்களுக்கு கிட்டத்தட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கூடங்களுக்கு இன்றைக்கு 215 கோடி ரூபாய்க்கு உட்கட்டமைப்பு வசதிக்கு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல் கூடுதலாக இன்னும் 252 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் கணக்கீடுகள் செய்யப்பட்டு அதற்கென்று தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

    அந்தந்த பகுதியை சேர்ந்து இருக்கிற கல்வி அலுவலர்கள் மற்றும் அந்த பகுதியில் இருக்கின்ற அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுக்கின்ற அந்த தகவல்களையும் நாங்கள் பெற்று கொண்டு மேலும் பத்திரிகை செய்தி மூலமாக வருகின்ற தகவல்களுக்கும் நாங்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி அதற்கும் இன்றைக்கு தனியாக நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மிக விரைவாக இந்த நிதி எல்லாம் வரவர அதற்கான வேலைகள் உடனடியாக நம்முடைய பொதுப்பணித்துறை அமைச்சரிடம் எடுத்து சொல்லி ஏனென்றால் 2 வாரத்திற்கு முன்னாடி அவர்கள் துறை சார்ந்து ஒரு கூட்டமே போட்டிருக்கிறார்கள்.

    இத்தனை மாதத்திற்குள் இத்தனை கட்டிடங்கள் இத்தனை வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். இன்னும் அதை நம்முடைய முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இன்னும் விரைவாக அந்த பணிகளை முடிக்கின்ற பணியில் நாங்களும் எங்களை ஈடுபடுத்தி கொள்வோம். அதன் அடிப்படையில் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார்.

    Next Story
    ×