search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதியுதவி"

    • ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு சமையல் பணிக்காக சென்றவர் மாயம்.
    • சமையல் பணிக்காகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக கடலில் விழுந்தார்.

    அரபிக்கடலில் தவறி விழுந்து மாயமான குமரி மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    குளச்சல் கிராமத்தை சேர்ந்த யாசர் அலி என்பவர் கொச்சி அருகே அரபிக் கடலில் படகில் இருந்து தவறி விழுந்து மாயமானார்.

    ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு சமையல் பணிக்காக சென்ற யாசர் அலி கடலில் தவறி விழுந்தார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், குளச்சல் "அ" கிராமம், காமராஜ் சாலையைச் சேர்ந்த முஹைதீன் யாசர் அலி (வயது 32) த/பெ.இப்ராஹீம் என்பவர் கடந்த 08.01.2024 அன்று கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி துறைமுக கடலோர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அரபிக் கடலில் 163 கி.மீ. வடமேற்கு திசையில் ஆழ்கடலில் படகில் மீன்பிடிக்கச் சென்றவர்களில் சமையல் பணிக்காகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக படகிலிருந்து கடலுக்குள் தவறி விழுந்துள்ளார்.

    அவரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இதுவரை கண்டுபிடிக்க இயலாமல் காணாமல் போயுள்ளார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள திரு.முஹைதீன் யாசர் அலி அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மூதாட்டியிடம் கொடுத்து வீட்டை சரி செய்து கொள்ளுமாறும், அரிசி உள்ளிட்ட மளிகை ஜாமான்களை வாங்கி கொள்ளுமாறும் கூறினார்.
    • சம்பவ இடத்திற்கு வராத கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய திட்டக்குடி தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி ஊராட்சியில் உள்ள கொட்டாரம் போத்திரமங்கலத்தில் உள்ள பொது மக்களின் குறைகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் கேட்டறிந்தார்.

    அப்போது கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியால் தனது வீடு பாதிக்கப்படுவதாக கொளஞ்சி என்ற மூதாட்டி அமைச்சரிடம் அழுத படி முறையிட்டார். அவரை அழைத்து கண்களை துடைத்து விட்டு, அழ வேண்டாமென கூறிய அமைச்சர், அதிகாரிகளை அழைத்து இந்த இடத்தை முறையான அளவீடு செய்து, பின்னர் கழிவுநீர் வாய்க்கால் கட்டுமாறு உத்தரவிட்டார்.

    மேலும் அதே பகுதியில் வைரம் என்ற மூதாட்டியின் ஓட்டு வீடு முற்றிலும் சேதமானதை கண்ட அமைச்சர், உடனடியாக ரூ.50 ஆயிரம் பணத்தை மூதாட்டியிடம் கொடுத்து வீட்டை சரி செய்து கொள்ளுமாறும், அரிசி உள்ளிட்ட மளிகை ஜாமான்களை வாங்கி கொள்ளுமாறும் கூறினார். பொதுமக்கள் கூறிய புகார்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு நேரில் வரவழைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சம்பவ இடத்திற்கு வராத கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய திட்டக்குடி தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் பட்டூர் அமரலிங்கம், மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு ஆகியோர் உடனிருந்தனர்.

    • இருவரும் எதிர்பாராதவிதமாக படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரமானச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.
    • உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சியில் நேற்று மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே நடைபெற்ற சம்பவத்தில் மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துமணி மற்றும் கே.வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் பாஸ்கரன் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரமானச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

    இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    • அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
    • நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மதுரை மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த பாக்கியராஜ், சின்ன கருப்பு மற்றும் சிறுவன் ஹரி ஆகிய மூவரும் சுற்றுலா சென்றுவிட்டு தங்கள் ஊருக்கு திரும்பும் வழியில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தாராபுரம் தெற்கு கிராமம், மதுரை நெடுஞ்சாலை அபூர்வா ஹோட்டல் அருகே உள்ள அமராவதி ஆற்றில் புதிய ஆற்றுப் பாலம் அருகே நேற்று மாலை குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

    நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

    • மறைந்த சிறை காவலர் குடும்பத்திற்கு நிதியுதவியை மதுரை மத்திய சிறை காவலர்கள் வழங்கினர்.
    • மதுரை மத்திய சிறையில் நர்சரி கார்டன் புதுப்பிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மத்திய சிறையில் மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி ஆய்வு செய்தார். இறுதி நாளான நேற்று காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் குடியரசு தலைவர் பதக்கம் பெற்ற மதுரை மத்திய சிறையை சேர்ந்த உதவி சிறை அலுவலர் பாலமுரு கன், வெற்றிச்செல்வம் மற்றும் அண்ணா பதக்கம் பெற்ற முதல் தலைமை காவலர் சித்ராதேவி ஆகி யோருக்கு சிறைத்துறை தலைமை இயக்குநரின் பாராட்டு சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

    திருச்சி மத்திய சிறையில் பணிபுரிந்து சமீபத்தில் மறைந்த சிறை காவலர் சம்பத் குடும்பத்தினருக்கு மதுரை சிறை காவலர்கள் சார்பாக ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் நிதி உதவியை டி.ஐ.ஜி. பழனி வழங்கினார்.

    மேலும் மதுரை மத்திய சிறையில் நர்சரி கார்டன் புதுப்பிக்கப்பட்டது. இதனை நடிகர் காளையன் திறந்து வைத்தார். இதில் மதுரை மத்திய சிறை கண்காணிப்பா ளர் பரசுராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சை மாவட்ட மைய நூலக மேம்பாட்டு பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
    • நிதி மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், சுதர்சனம் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் .கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட மைய நூலகத்தில் புதிய ஜெராக்ஸ் எந்திரம் வாங்குவதற்கும், ஒளிதிரை அமைப்பதற்கும், கழிப்பறை வசதி அமைப்பது ஆகிய மேம்பாட்டு பணிக்கு ரூ.30 லட்சத்தை தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., ஒதுக்கினார்.

    இந்த நிலையில் இந்த மேம்பாட்டு நிதியை அவர் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், தமிழ்நாடு சட்டப்பேரவை நூலக குழு தலைவர் சுதர்சனம் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ. நிதியுதவி வழங்கப்பட்டது.
    • காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் கலந்து கொண்டு அனைவருக்கும் ஜூஸ் வழங்கி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது 10 விசைப்படகுகள் மற்றும் 64 மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

    எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதனைதொடர்ந்து மீன வர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தங்கச்சி மடத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்க கூட்டமைப்பு சார்பில் இரண்டு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தின் இறுதியில் ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு அனைவருக்கும் ஜூஸ் வழங்கி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.

    இதனைதொடர்ந்து, அவ ரது சொந்த நிதியில் இருந்து இலங்கை சிறையில் உள்ள 64 மீனவர்களின் குடும்பத்தினரின் செலவுக்காக தலா 5 ஆயிரம் 54 பேருக்கும் வீதம் 3.20 லட்சம் ரொக்க பணம் வழங்கினார்.

    • மீனவர்கள் பயஸ், ஆன்றோ, கே.ஆரோக்கியம் ஆகியோர் கடலில் மூழ்கி பரிதாபமாக பலியாயினர்
    • அரசின் முதற்கட்ட நிவாரணமாக தலா ரூ.2 லட்சம் கடந்த அக்டோபர் மாதம் 12-ந்தேதி வழங்கப்பட்டது.

    குளச்சல் :

    குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் பி.ஆரோக்கியம் (வயது 50). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். இந்த படகில் மாதா காலனியை சேர்ந்த ஆன்றோ (47) பங்குத்தாரராக இருந்தார். அதே பகுதியை சேர்ந்த மீன் பிடித்தொழிலாளி கே.ஆரோக்கியம் (52), கொட்டில்பாடை சேர்ந்த பயஸ் (54) உள்பட 16 தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறை முகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். 28-ந்தேதி நள்ளிரவு விசைப்படகு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாரா மல் திடீரென விசைப்படகு கடலில் மூழ்கியது. இந்த சம்பவத்தில் 13 மீனவர்கள் மீட்கப்பட்டனர். மீனவர்கள் பயஸ், ஆன்றோ, கே.ஆரோக்கியம் ஆகியோர் கடலில் மூழ்கி பரிதாபமாக பலியாயினர். இந்த 3 மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் முதற்கட்ட நிவாரணமாக தலா ரூ.2 லட்சம் கடந்த அக்டோபர் மாதம் 12-ந்தேதி வழங்கப்பட்டது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மீனவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கினார்.

    இதையடுத்து நேற்று குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்கம் சார்பில் மேற்கூறிய மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி விசைப்படகு சங்க அலுவலகத்தில் நடந்தது. கோட்டார் முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் கலந்துகொண்டு நிதிக்கான காசோலைகளை வழங்கி னார்.

    விசைப்படகு சங்க தலைவர் வர்க்கீஸ், செய லாளர் பிராங்கிளின், துணைத்தலைவர் ஆன்றனி, பொருளாளர் அந்திரியாஸ், துணைச்செயலாளர் ஆன்றனிதாஸ், நகரா ட்சி கவுன்சிலர்கள் ஜாண்ச ன், பனிக்குருசு மற்றும் விசைப்படகு சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • பட்டாசு விபத்தில் உயிரிழந்த 13 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு பா.ம.க. சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
    • ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை வந்து சந்திக்கு மாறும் கூறினார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரெங்கபாளையம் பகுதியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

    பலியான 13 பேரில் வீடுகளுக்கும் நேரில் சென்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா தனது சொந்த நிதியில் தலா ரூ. 10 ஆயிரம் வீதம் இறந்த 13 பேரின் குடும்பங்களுக்கும் நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை வந்து சந்திக்கு மாறும் கூறினார். அப்போது பா.ம.க. மத்திய மாவட்ட செயலாளர் டேனியலும் உடன் இருந்தார். பின்னர் பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா நிருபர்களிடம் கூறுகையில், பட்டாசு விபத்தில் உயரி ழந்தவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். தமிழக அரசு வழங்கிய 3 லட்சம் ரூபாய் நிதி போதாது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 25 லட்ச ரூபாய் வைப்பு நிதி யாக தமிழக அரசு வழங்கி அவர்களின் வாழ் வாதாரத்தை பாது காக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • வெடி விபத்தில் உயிரிழந்த, காயமடைந்த குடும்பத்தினருக்குஅ.தி.மு.க. சார்பில் ஆறுதல், நிதியுதவி
    • வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அடுத்த வெற்றியூர் மதுரா விரகாலூர் கிராமத்திலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.

    விபத்து நிகழ்ந்த இடத்தில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடா வுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு, விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, அ.தி.மு.க. சார்பில் நிதியுதவி யினை வழங்கினார். நிகழ்வில் ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ராமஜெய லிங்கம், மாவட்ட மாணவ ரணிச் செயலர் சங்கர், ஒன்றியச் செயலாளர்கள் சாமி நாதன், வடிவழகன் உள்பட பலர் இருந்தனர்.

    • நவீன சலவையகங்கள், ரெடிமேட் தொழிலகம் அமைக்க ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது.
    • பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 10 நபர்களைக் கொண்ட குழுவாக சேர்ந்து நவீன சலவையகங்கள், ரெடிமேட் ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்க தலா ரூ.3 லட்சம் நிதி அளிக்கப் படுகிறது.

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளி களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பதிவு பெற்ற குழுக்கள் பூர்த்தி செய்த விண்ணப் பங்களை வருகிற 30-ந் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாம்பல் நிற அணில்கள் சரணாலய அபிவிருத்திக்கு ரூ.75 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
    • ராம்கோ மூத்த மேலாளர் (நிலவியல்) சண்முகம் மற்றும் ராம்கோ மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், துணை இயக்குனர் அலுவலகத்தில் ராம்கோ சமூக கூட்டாண்மை சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் சாம்பல் நிற அணில் வன உயிரின சரணாலய அபிவிருத்தி மற்றும் மயில்கள் பாது காப்பு அபிவிருத்திக்காக ராம்கோ நிறுவனம் சார்பில் ரூ.75 லட்சத்திற்கான வரை வோலை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது.

    ராம்கோ நிறுவனம் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு சமூக பொறுப்பு நிதியின் கீழ் நிதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில் சாம்பல் நிற அணில்கள் மற்றும் மயில்கள் பாதுகாப்பு அபிவிருத்திக்கு ரூ.75 லட்சம் ராம்கோசிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் சமூக கூட்டாண்மை சுற்றுச் சூழல் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான வரை வோலையை நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர் (பணிகள்) கண்ணன், மூத்த துணை பொதுமேலாளர், (சுரங்கம்) சரவணன் ஆகியோர் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக கண்காணிப்பாளர் பெரிய கருப்பனிடம் வழங்கினார். அருகில் வனச்சரக அலுவலர் செல்லமணி, உயிரியிலாளர் பார்த்தீபன், ராம்கோ மூத்த மேலாளர் (நிலவியல்) சண்முகம் மற்றும் ராம்கோ மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×