என் மலர்
நீங்கள் தேடியது "Delhi CM"
- டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்ததுன் நாடு முழுவதும் எதிர்க்கட்சி முதல்வர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி மற்றும் பஞ்சாப் முதல்வர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளது என மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்ததுன் நாடு முழுவதும் எதிர்க்கட்சி முதல்வர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறது.
அந்த வகையில், இன்று தமிழகத்திற்கு வருகை தந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அவருடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த மான் சிங்கும் பங்கேற்றார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி மற்றும் பஞ்சாப் முதல்வர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், " நான் டெல்லி செல்லும்போது அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திப்பதுண்டு. டெல்லியில் மாடல் பள்ளி போன்று தமிழகத்தில் தொடங்க வேண்டும் என்று ஆய்வு செய்தோம். டெல்லி அரசுக்கு ஆளுநர் மூலமாக தொடர் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அனைத்து மாநில முதல்வர்களும் டெல்லி அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
மத்திய அரசு டெல்லி அரசுக்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும்" என்றார்.
பின்னர் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், " டெல்லி அரசுக்கு முழு சுதந்திரம் உண்டு என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முழு சுதந்திரம் இல்லையென்றால் அரசை நடத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லை. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஆதரவு தர வேண்டும்" என்றார்.
டெல்லியில் காற்று மாசுபடுதலை குறைக்கும் வகையில் 150 இ- பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லியில் அடுத்த பத்து ஆண்டுகளில் மின்சார பேருந்தை பெறுவதற்காக டெல்லி அரசு ரூ. 1,862 கோடி ஒதுக்கியுள்ள நிலையில் மத்திய அரசு ரூ. 150 கோடி வழங்கியுள்ளது.
இந்நிலையில், டெல்லி முதல் -மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று இந்திர பிரஸ்தா டிப்போவில் இருந்து 150 இ - பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதையடுத்து போக்குவரத்து துறை மந்திரி கைலாஷ் கெலாட் உடன் ஒரு பேருந்தில் ஏறிய முதல் மந்திரி ராஜ்காட் கிளஸ்டர் பேருந்து நிலையம் வரை பயணித்தார்.
மேலும், ஒரு வருடத்தில் இரண்டாயிரம் இ- பேருந்துகளை பெறுவதே இலக்கு என்று அரவிந்த் ஜெக்ரிவால் தெரிவித்தார்.
மேலும், அவரது டுவிட்டர் பதிவில், “ மாசுபாடுக்கு எதிரான போராட்டத்தில் டெல்லி இன்று ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. இன்று 150 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. நான் ஒரு பேருந்தில் பயணித்தேன். இந்த பேருந்தில் நவீன வசதிகள் உள்ளன. நீங்கள் அனைவரும் கண்டிப்பாக பிரம்மாண்டமான இ - பேருந்தில் பயணம் செய்ய வேண்டு” என்று பதிவிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்.. பகவந்த் மானின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை கண்ணீரை வரவழைத்தது- அரவிந்த் கெஜ்ரிவால் நெகிழ்ச்சி
கிழக்கு டெல்லி மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு ஒழுங்காக சம்பளம் வழங்கவேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தற்காலிக துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் டெல்லியில் அடிக்கடி குப்பைகள் மலைபோல் தேங்குகின்றன.

துப்புரவு பணியாளர்கள் சம்பளம் தொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இரண்டு நாட்களுக்குள் 500 கோடி ரூபாய் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்படும் என மாநில அரசு தெரிவித்தது. இதன்மூலம் பிரச்சினையை தீர்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. #DelhiSanitationWorkers #SanitationProtest #Kejriwal


