என் மலர்
நீங்கள் தேடியது "கடவுள் கிருஷ்ணர்"
- பார்மர் மாவட்டத்தில் மாசடைந்த தண்ணீர் தேங்கும் பிரச்சனை பல ஆண்டாக நீடித்து வருகிறது.
- ஜோஜாரி ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.
அங்குள்ள பார்மர் மாவட்டத்தின் பலோட்ரா பகுதியில் மாசடைந்த தண்ணீர் தேங்கும் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஜோத்பூர், பாலி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், ஜோஜாரி ஆற்றில் கலக்கின்றன.
அந்த ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது, தொழிற்சாலை கழிவுகள் மாசடைந்த நீராக கரையோர பகுதிகளில் தேங்குகின்றன. வீடுகளுக்கு உள்ளேயும் புகுந்து விடுகிறது. துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், பார்மர் பகுதிக்குச் சென்ற ராஜஸ்தான் மாநில தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை மந்திரி கே.கே.விஷ்ணோயிடம் இதுபற்றி கேட்கப்பட்டது.
அப்போது அவர் கூறுகையில், பார்மர் மாவட்டத்தில் பகவான் கிருஷ்ணர் மிகவும் தாராள மனதுடன் இருக்கிறார். நமது முதல் மந்திரி, பகவான் கிருஷ்ணரை வேண்டும் போதெல்லாம் இங்கு மழை கொட்டித் தீர்க்கிறது. பிறகு, இந்திரனிடம் சொல்லி, மக்கள் இயல்பு வாழ்க்கையை தொடர மழையை தணிக்க வேண்டி இருக்கிறது என தெரிவித்தார்.
கே.கே.விஷ்ணோயின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக, பார்மர் மாவட்டம் பேடூ தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹரிஷ் சவுத்ரி கூறுகையில், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சனையின் பொறுப்பை கடவுள்மீது சுமத்துவது கேலிக்கூத்தாக உள்ளது. மந்திரி, பிரச்சனையை திசைதிருப்புவது மட்டுமின்றி, பிரச்சனையை அரசாங்கத்தால் சரிசெய்ய முடியாது, பிரார்த்தனையால்தான் பலன் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் கூறுகிறார். இது அபத்தமானது என்றார்.
- நாங்கள் நீதிமன்றங்களை கோயில்களாக கருதுகிறோம். நீதி வழங்குவது கடவுளின் வேலை,
- உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி எனக்கு கிருஷ்ணர் உருவில் தெரிந்தார் என்று கூறியுள்ளார்.
சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று (பிப் 20) தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, இன்று டெல்லி சட்டமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்ட உரையின் போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "நாங்கள் நீதிமன்றங்களை கோயில்களாக கருதுகிறோம். நீதி வழங்குவது கடவுளின் வேலை, அதனால் தான் நீதிபதிகள் தீர்ப்புகளை அறிவிக்கும் போது அதனை கடவுளின் தீர்ப்பாக நாங்கள் பார்க்கிறோம். நேற்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி எனக்கு கிருஷ்ணர் உருவில் தெரிந்தார் என்று கூறியுள்ளார்.
பாஜகவின் பித்தலாட்டத்தை உச்சநீதிமன்றத்தில் கடவுளே வந்து அம்பலப்படுத்தினார். பாஜக தேர்தலில் நியாயமாக வெற்றி பெறாமல், குறுக்கு வழியில் வெற்றி தேடியதை வீடியோ ஆதாரம் மூலமாக இந்திய நாடே பார்த்தது என்று பேசியுள்ளார்.






