என் மலர்

  நீங்கள் தேடியது "Aravind kejriwal"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேர்தல் பிரசாரத்தின்போது டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் கன்னத்தில் அறைந்த நபர் அளித்த பேட்டியில், நான் ஏன் இப்படி செய்தேன் என தெரியவில்லை என கூறியுள்ளார். #AravindKejriwal
  புது டெல்லி:

  டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மோத்தி நகர் பகுதியில் கடந்த மே 4ம் தேதி திறந்த வாகனத்தில் சென்று அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

  அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆவேசமாக தகாத வார்த்தைகளால் திட்டியவாறு ஓடிவந்து வாகனத்தின் மீது ஏறிநின்று, கெஜ்ரிவாலின் கன்னத்தில் பளாரென்று அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அரவிந்த் கெஜ்ரிவால் சற்று தடுமாறி நிலைகுலைந்தார்.  அதன்பின்னர் அங்கிருந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கெஜ்ரிவாலை தாக்கிய சுரேஷ் என்ற அந்த  நபரை மடக்கி பிடித்து போலீசரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது டெல்லி காவல்துறையின் கிரிமினல் சட்டப்பிரிவு 107/5-ன்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த மே 5ம் தேதி மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். கைதான சுரேஷை 2 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

  இந்நிலையில் இது தொடர்பாக நேற்று பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் சுரேஷ் கூறுகையில், ‘ஒரு மாநிலத்தின் முதல்வரை மதிக்காமல், நான் ஏன் இப்படி செய்தேன் என தெரியவில்லை. எப்படி அறைந்தேன் எனவும் தெரியவில்லை. நான் எந்த கட்சியினையும் சார்ந்தவன் அல்ல. நான் செய்த இந்த தவறின் பின்னணியில் யாரும் இல்லை.

  என் பின்னால் நின்றுக் கொண்டு யாரும் இவ்வாறு செய்யச்சொல்லி தூண்டவில்லை. இச்சம்பவத்திற்கு நானே முழு பொறுப்பு. நான் போலீசாரின் கஸ்டடியில் இருக்கும்போதும் எனக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படவில்லை. போலீசார் என்னிடம் ஒன்றை தான் கூறினார்கள். நான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை தான். அதனை நான் உணர்ந்தேன். இதற்காக மிகவும் வருந்துகிறேன்’ என கூறினார். #AravindKejriwal


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நல்ல திட்டங்கள் கிடைக்க வேண்டுமெனில் சந்திரபாபு நாயுடுஜியை மீண்டும் முதல்வராக்குங்கள் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். #ArvindKejriwal #ChandrababuNaidu
  விஜயவாடா:

  ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தல் தொகுதியுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. இதனையொட்டி தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார். 

  பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

  ஆந்திர மக்களுக்கு தொடர்ந்து நல்ல திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்றால் சந்திரபாபு நாயுடுஜியை மீண்டும்  முதல்வராக்குங்கள் என்றார். #ArvindKejriwal #ChandrababuNaidu 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடையூறுகள் தராமல் அவரை வேலை செய்ய விடுமாறு மத்திய அரசுக்கு சிவசேனா இன்று அறிவுறுத்தியுள்ளது. #ShivSena #ArvindKejriwal
  மும்பை:

  டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கும் மோதல் நீடித்து வருகிறது. டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு சுதந்திரமாக முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை என்றும், மந்திரி சபையின் அறிவுரையின் பேரில்தான் அவர் செயல்பட முடியும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் அதிரடியாக தீர்ப்பளித்தது.

  இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவில் இன்று செய்தி வெளியிடப்பட்டது. அதில், டெல்லியின் ஆம் ஆத்மியின் ஆட்சி முறையாக இல்லையென்றால் ஆட்சியை கலைத்து விடுங்கள் என்றும், அதற்கு பதிலாக பணி செய்ய விடாமல் தடுக்க கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  மேலும், டெல்லியில், துணை நிலை ஆளுநருக்கும், முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே போட்டி இல்லை என்றும், பிரதமர் மோடிக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே தான் போட்டி நிலவுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, இனியாவது டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது பணியை செய்யவிடுமாறு சாமனா நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. #ShivSena #ArvindKejriwal
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உடல்நலக் குறைவால் டெல்லி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தை இன்று ரத்துசெய்த முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சிகிச்சைக்காக பெங்களூரு புறப்பட்டு செல்கிறார். #ArvindKejriwal #KejriwalinBengaluru #Kejriwaltreatment
  புதுடெல்லி:

  டெல்லி அரசுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைக்க மறுப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கவர்னர் அலுவலகத்துக்குள் 9 நாள் தர்ணா போராட்டம் நடத்திய முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தனது உள்ளிருப்பு போராட்டத்தை முடித்து கொண்டார்.

  கவர்னரின் அறிவுறுத்தலின்படி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று பல்வேறு துறைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் சந்தித்துப் பேசுவார்கள் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

  ஆனால், 9 நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகியுள்ளதால் சிகிச்சைக்காக நாளை கெஜ்ரிவால் பெங்களூரு புறப்பட்டு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஏற்கனவே மூச்சுத்திணறல் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அவ்வப்போது பெங்களூருவில் உள்ள தனியார் இயன்முறை (நேச்சுரோபதி) மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #ArvindKejriwal #Kejriwaltreatment
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒவ்வொரு ஆண்டும் கோடையில் டெல்லியில் கடுமையான நீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அடுத்த ஆண்டு கோடை காலத்தில் தண்ணீர் பிரச்சனை இருக்காது என டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். #ArvindKejriwal
  புதுடெல்லி:

  டெல்லியின் தெற்கு பகுதியில் புதிய துணை மின்நிலையத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

  மேலும், இத்தனை வருடங்களாக மக்கள் அவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெறுவதற்கு அரசு அலுவலகங்களில் காத்திருந்து, லஞ்சம் கொடுத்து வாங்கி வந்துள்ளதாகவும், இனி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளே மக்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று சான்றிதழ்களை வழங்க வழிசெய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  மேலும், இந்த திட்டம் குறித்து டெல்லி கவர்னர் அனில் பாய்ஜாலை நாளை நேரில் சந்தித்து பேச இருப்பதாகவும் டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

  தொடர்ந்து பேசிய அவர், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும் எனவும், அதற்கு மக்களும் சிறிது பொறுமையுடன் இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

  மேலும், டெல்லியின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாட்டை  போக்க பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாகவும், அடுத்த வருட கோடைக்காலத்தில் டெல்லியில் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். #ArvindKejriwal
  ×