search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanjay Singh"

    • டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்தது
    • இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் சஞ்சய் சிங்கை 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள் - உச்ச நீதிமன்றம்

    டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து 2023-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இவரது ஜாமின் மனுவை ஏப்ரல் 2-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் சஞ்சய் சிங்கை 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு காவல் தேவையா? இல்லையா? என்பது குறித்து எங்களுக்குத் தெரிய வேண்டும் என்று அமலாக்கத்துறையிடம் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

    சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பதில் அளித்தது. இதனையடுத்து சஞ்சய் சிங்கிற்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

    இதனையடுத்து, இன்று சஞ்சய் சிங், டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் அவரை வரவேற்றனர்.

    திகார் சிறைக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சியினர் இடையே பேசிய அவர், "இது கொண்டாடுவதற்கான நேரம் அல்ல மாறாக போராட வேண்டிய நேரம். நமது கட்சியின் மூத்த தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயின் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு விரைவில் அவர்கள் வெளியே வருவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் விடுவிக்கப்படும் வரை, நாம் கொண்டாட மாட்டோம், நாம் தொடர்ந்து போராடுவோம்" என்று தெரிவித்தார்.

    • நீங்கள் சஞ்சய் சிங்கை 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு காவல் தேவையா? - உச்ச நீதிமன்றம்
    • அமலக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது

    டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து 2023-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இவரது ஜாமின் மனுவை கடந்த 7-ம் தேதி விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதி ஜாமின் வழங்க மறுத்தது.

    இந்நிலையில், டெல்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா மற்றும் வராலே ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது.

    இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் சஞ்சய் சிங்கை 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு காவல் தேவையா? இல்லையா? என்பது குறித்து எங்களுக்குத் தெரிய வேண்டும் என்று அமலாக்கத்துறையிடம் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

    சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பதில் அளித்தது. இதனையடுத்து சஞ்சய் சிங்கிற்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

    டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், சஞ்சய் சிங்கிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

    • மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமின் மறுத்தது.
    • ஜாமின் வழங்க மறுத்த டெல்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய மதுபான கொள்கையில் நடந்துள்ள முறைகேட்டை அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து 2023-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இவரது ஜாமின் மனுவை கடந்த 7-ம் தேதி விசாரித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதி ஜாமின் வழங்க மறுத்தார்.

    இந்நிலையில், டெல்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வரும் 10-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.
    • வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 12 ஆகும்.

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான சுஷில் குமார் குப்தா, சஞ்சய் சிங் மற்றும் என்.டி. குப்தா ஆகியோரின் பதவிக் காலம் வருகிற 27-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    இதற்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி சார்பாக அந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு சஞ்சய் சிங் மற்றும் என்.டி. குப்தா ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

    இந்த நிலையில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் என்பதால், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் சஞ்சய் சிங் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ளதால் பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்தில் வந்து மனு தாக்கல் செ ய்தார்.

    வருகிற 10-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 12 என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ள ஸ்வாதி மாலிவாலை ராஜ்ய சபா தேர்தலில் வேட்பாளராக ஆம் ஆத்மி பரிந்துரை
    • ஸ்வாதி மாலிவால், சஞ்சய் சிங் மற்றும் என் டி குப்தா ஆகிய மூன்று ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    டெல்லியில் காலியாக உள்ள ராஜ்ய சபா இடங்களுக்கு மூன்று பேரை ஆம் ஆத்மி பரிந்துரை செய்ய வேண்டும். தற்போது ஆம் ஆதிமியின் ராஜ்ய சபா உறுப்பினர்களாக உள்ள சஞ்சய் சிங் மற்றும் என்.டி.குப்தா வின் பதவி காலம் ஜனவரி 27 அன்று முடிவடைகிறது. இருவரையும் மேலவை உறுப்பினர்களாக நியமனம் செய்ய ஆம் ஆத்மியின் அரசியல் விவகாரக் குழு முடிவு செய்துள்ளது.

    டெல்லி கலால் ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ராஜ்யசபா நியமனத்திற்கான படிவங்கள் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திட அனுமதிக்குமாறு திகார் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக்கோரி, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பிறகு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியது

    தொடர்ந்து, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ள ஸ்வாதி மாலிவாலை ராஜ்ய சபா தேர்தலில் வேட்பாளராக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில், டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக ஸ்வாதி மாலிவால் நியமிக்கப்பட்டார், ஆசிட் தாக்குதல்கள், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்முயற்சிகளில் ஸ்வாதி மாலிவால் முக்கிய பங்கு வகித்தார்

    டெல்லியில் ஜனவரி 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. டெல்லி சட்டமன்றத்தில் உள்ள 70 இடங்களிலும் ஆம் ஆத்மி 62 இடங்களை கொண்டிருப்பதால், ஸ்வாதி மாலிவால், சஞ்சய் சிங் மற்றும் என் டி குப்தா ஆகிய மூன்று ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    ராகவ் சதா, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மியை சேர்ந்த 10 பேர் மேலவையில் உள்ளனர். பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதையடுத்து, மாநிலங்களவையில் ஆம் ஆத்மியின் பலம் அதிகரித்துள்ளது.

    • தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி தேதியை அறிவித்ததில் எந்த விதியையும் மீறவில்லை.
    • தேசிய சாம்பியன்ஷிப்பை இந்த ஆண்டில் நடத்தாவிட்டால், அது வருங்கால இளம் வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    புதுடெல்லி:

    பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் வீரர், வீராங்கனைகளின் போராட்டம் எதிரொலியாக பொறுப்பில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து கடந்த 21-ந்தேதி டெல்லியில் நடந்த இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் புதிய தலைவராக பிரிஜ் பூஷனின் நெருங்கிய ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் யாரும் மல்யுத்த சம்மேளனத்தில் இருக்கக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இருக்கும் வீரர்கள் அவருக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான பஜ்ரங் பூனியா, காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத் ஆகியோர் மத்திய அரசு வழங்கிய விருது, பதக்கங்களை திருப்பி அளிக்கப் போவதாக அதிரடியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

    சஞ்சய் சிங்குக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்ததால் வேறு வழியின்றி புதிய நிர்வாகிகளை கொண்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்தது. வீரர்களுக்கு போதிய அவகாசம் வழங்காமல் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியை இந்த மாத இறுதிக்குள் நடத்தப்போவதாக புதிய நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது, விதிமுறைகளுக்கு புறம்பானது என்றும் விளையாட்டு அமைச்சகம் கூறியது. இதையடுத்து மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட பணிகளை கவனிக்க இந்திய உசூ சம்மேளன தலைவர் பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையில் 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவர் சஞ்சய் சிங் தனது அதிருப்தியை கொட்டி தீர்த்துள்ளார். சஞ்சய் சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஜனநாயக முறைப்படி நடந்த இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் சர்வதேச மல்யுத்த சங்கத்தின் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் ஜம்மு-காஷ்மீர் ஐகோர்டு ஓய்வு பெற்ற நீதிபதி தேர்தலை நடத்தினார். 25 மாநில மல்யுத்த சங்கங்களில் 22 மாநில சங்க நிர்வாகிகள் தேர்தலில் ஓட்டு போட்டனர். இதில் தலைவர் பதவிக்கு நின்ற எனக்கு பதிவான 47 ஓட்டுகளில் 40 வாக்குகள் கிடைத்தது. இவை எல்லாம் நடந்த பிறகு நீங்கள் (மத்திய அரசு) எங்களை இடைநீக்கம் செய்வதாக சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைப்புக்கு தங்களது நிலைப்பாட்டை விளக்க எந்த வித வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இது, இந்திய அரசியலமைப்பின் கீழ் அனைவருக்கும் உரிமை என்ற இயற்கை நீதி, கொள்கைக்கு எதிரானதாகும். இந்திய மல்யுத்த சம்மேளனம் ஒரு தன்னாட்சி அமைப்பு. இந்த விஷயத்தில் மத்திய அரசு நடைமுறைகளை முறையாக பின்பற்றவில்லை. நாங்கள் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம். அவர்கள் இடைநீக்கத்தை தளர்த்தாவிட்டால், சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து கோர்ட்டு செல்வோம்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்களின் (பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக்) பின்னணியில் காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள் இன்னும் சில கூட்டம் இருப்பது தெளிவாகிறது. இந்த 3 பேரையும் தவிர்த்து வேறு யாராவது இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு எதிராக இருக்கிறார்களா என்பதை சொல்லுங்கள் பார்ப்போம். இவர்கள் ஜூனியர் மல்யுத்த வீரர்கள் வளர்வதை விரும்பவில்லை. அவர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்கிறார்கள்.

    தகுதி போட்டிஇன்றி ஆசிய விளையாட்டு போட்டிக்கு சென்ற பஜ்ரங் பூனியா 0-10 என்ற புள்ளி கணக்கில் மோசமாக தோற்று திரும்பினார். அவர்கள் மல்யுத்தம் விளையாடவில்லை. அரசியல் செய்கிறார்கள். உண்மையிலேயே மல்யுத்தம் மீது அக்கறை இருந்தால் முன்நோக்கி வாருங்கள். உங்களுக்கு உள்ள பாதை சரியாக இருக்கும். அரசியல் செய்ய விரும்பினால், தயவு செய்து அதை வெளிப்படையாக செய்யுங்கள்.

    நிர்வாகிகள் தேர்தல் முறைப்படி நடந்து முடிந்து விட்ட நிலையில் தடையை நீக்கக்கோரி நாங்கள் சர்வதேச மல்யுத்த சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். தற்போது அங்கு (ஐரோப்பா) விடுமுறையாகும். அதனால் அது குறித்து பரிசீலிக்க இன்னும் சில நாட்கள் ஆகக்கூடும்.

    தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி தேதியை அறிவித்ததில் எந்த விதியையும் மீறவில்லை. தேசிய சாம்பியன்ஷிப்பை இந்த ஆண்டில் நடத்தாவிட்டால், அது வருங்கால இளம் வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது தான் இப்போது நிகழ்ந்துள்ளது. ஏனெனில் தாமதம் ஆகும் போது, அவர்களின் வயது அதிகரித்து விட்டால் அதன் பிறகு குறிப்பிட்ட வயது பிரிவு போட்டிகளில் பங்கேற்க முடியாது.

    இவ்வாறு சஞ்சய்சிங் கூறினார்.

    • மணிப்பூர் விவகாரம் தொடர்பாக 12 மணிக்கு விவாதம் நடத்தலாம் என்று சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார்.
    • எதிர்க்கட்சிகள் பிரதமர் விளக்கம் அளிக்க கோரி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது.

    மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் முதல் நாளிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

    2-வது நாளான வெள்ளிக்கிழமை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பினர். மணிப்பூர் ரத்தம் சிந்துகிறது என்ற முழக்கத்துடன் அவையின் மைய பகுதியில் முற்றுகையிட்டனர். இதனால் இரு அவைகளின் நடவடிக்கைகளும் 2-வது நாளாக முடங்கி இருந்தன.

    இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று 3-வது நாளாக அமளி நிலவியது.

    பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் இடது சாரி கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி முறையிட்டார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக 12 மணிக்கு விவாதம் நடத்தலாம் என்று சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார்.

    இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. உடனடியாக விவாதம் நடத்த வேண்டும். பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முறையிட்டனர்.

    மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறும்போது, மணிப்பூர் விவாதத்துக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

    ஆனால் எதிர்க்கட்சிகள் பிரதமர் விளக்கம் அளிக்க கோரி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவையை 12 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

    12 மணிக்கு பிறகு பாராளுமன்றம் கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து மணிப்பூர் விவகாரத்தை எழுப்பினார்கள். இதை தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை 2-வது முறையாக அவை ஒத்திவைக்கப்பட்டது.

    முன்னதாக மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தன.

    பாராளுமன்ற மாநிலங்களவையிலும் மணிப்பூர் விவகாரத்தில் அமளி காணப்பட்டது. மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த கோரி 11 கட்சிகள் நோட்டீஸ் அளித்தன.

    இது தொடர்பாக அவை தலைவர் ஜெகதீப்தன்கருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக்ஒபிரையலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அமளியால் அவை முதலில் 12 மணி வரையும், 2-வது முறையாக 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

    மணிப்பூர் கலவரம் தொடர்பாக பாராளுமன்றத்தின் இரு அவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

    மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய்சிங் கடும் அமளியில் ஈடுபட்டார். அவை தலைவர் இருக்கை அருகே சென்று அமளி செய்தார்.

    இதைத் தொடர்ந்து சஞ்சய்சிங்கை சஸ்பெண்டு செய்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப்தன்கர் உத்தரவிட்டார். மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    • துணை முதல்-மந்திரியாக அஜித்பவார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
    • சகன் புஜ்பாலும் மந்திரிசபையில் சேர்க்கப்பட்டார்.

    மும்பை :

    மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் அஜித்பவார், சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசின் மந்திரி சபையில் இணைந்ததுடன் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

    இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் டுவிட்டரில் கூறியதாவது:-

    நாட்டின் மிகப்பெரிய ஊழல் ஆதரவாளர் பிரதமர் நரேந்திர மோடி. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு பிரதமர் உத்தரவாதம் அளித்த 2 நாட்களுக்கு பிறகு, மகாராஷ்டிராவில் சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசாங்கத்தில் துணை முதல்-மந்திரியாக அஜித்பவார் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் சகன் புஜ்பாலும் மந்திரிசபையில் சேர்க்கப்பட்டார். இன்று அனைத்து டி.வி. சேனல்களும் பிரதமர் மோடியை கண்டிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டு இருந்தது.
    • அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை கைது செய்தது. இதேபோல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறும் போது, ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் பெயரை குற்றப்பத்திரிக்கையில் தவறுதலாக சேர்த்திருப்பதே, இந்த வழக்கு முழுக்க முழுக்க பொய்யான ஒன்று தான் என்று வெளிப்படையாக தெரிகிறது என்றார்.

     

    "அது எப்படி ஒருவரின் பெயரை குற்றப்பத்திரிக்கையில் தவறுதலாக சேர்த்திருக்க முடியும்? இதில் இருந்தே இந்த வழக்கு முழுக்க முழுக்க பொய்யான ஒன்று என்பது தெளிவாகிறது. நாட்டிலேயே மிகவும் நேர்மையான கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே பிரதமர் இவ்வாறு செய்கிறார். நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் அரசியல் கட்சியை கேவலமான அரசியல் செய்து பிரதமர் தடுக்க நினைக்கிறார். இது அவர் செய்க்கூடிய காரியம் இல்லை," என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருக்கிறார்.

    "வரலாற்றிலேயே முதல் முறையாக அமலாக்கத்துறை இவ்வாறு செய்திருக்கிறது. குற்றப்பத்திரிக்கையில் என் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுவிட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருக்கிறது," என்று சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

    இதுமட்டுமின்றி தன்மீது வேண்டுமென்றே உள்நோக்கத்துடன், உண்மையற்ற, அவதூறான தகவல்களை தெரிவித்த அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ரா மற்றும் உதவி இயக்குனர் ஜோகேந்தர் சிங் ஆகியோர் மீது விசாரணை நடத்த வலியுறுத்தி மத்திய நிதித்துறை செயலாளருக்கு சஞ்சய் சிங் கடிதம் எழுதியிருந்தார்.

    ×