search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Wrestling Federation of India"

  • பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்களை அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷன் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது.
  • இந்த முறை பாஜக சார்பில் அவருக்கு ஏன் எம்.பி சீட் கொடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு சிரித்தவாறே பிரிஜ் பூஷன் சிங், தனது மகனுக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.

  இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவரும் 6 முறை பாஜக எம்.பியாகவும் இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக பெண் மல்யுத்த வீரர்கள் தொடுத்த கிரிமினல் வழக்கில் விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் டெல்லி ரோஸ் அவன்யூ மாவட்ட நீதிமன்றத்தில் உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
   

  பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்களை அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷன் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் இணை குற்றவாளியும் முன்னாள் WFI உதவி செயலாளருமான வினோத் தோமர் மீதும் மிரட்டல் குற்றச்சாட்டையும் நீதிமன்றம் பதிவு செய்தது.

  இதுகுறித்து கருது தெரிவித்துள்ள பிரிஜ் பூஷன், இது அனைத்தும் தன் மீது புனையப்பட்ட குற்றச்சாட்டுகள் என்றும் தான் நிரபராதி என்பதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த முறை பாஜக சார்பில் அவருக்கு ஏன் எம்.பி சீட் கொடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு சிரித்தவாறே பிரிஜ் பூஷன் சிங், தனது மகனுக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.
  உத்தரப் பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் தொகுதியில் பாஜக எம்.பி.யாக இருந்த சிங் மீதான பாலியல் புகார்களை அடுத்து அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது. அக்கட்சி அவரது மகன் கரண் பூஷன் சிங்கை அந்த தொகுதியில் நிறுத்தியுள்ளது. 


  • கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்தது.
  • இந்திய மல்யுத்த சம்மேளம் மீதான இடைநீக்க நடவடிக்கையை உலக மல்யுத்த சங்கம் நேற்று தளர்த்தியது.

  புதுடெல்லி:

  இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தாமல் பலமுறை தள்ளிவைக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த உலக மல்யுத்த சங்கம், கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்தது.

  இதற்கிடையே, பல்வேறு சலசலப்புக்கு மத்தியில் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு மல்யுத்த வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அவர் விதிமுறைக்கு புறம்பாக தேசிய போட்டிகளை நடத்த முயற்சித்ததால் உடனடியாக புதிய நிர்வாகத்தை மத்திய விளையாட்டு அமைச்சம் இடைநீக்கம் செய்தது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக கமிட்டி மல்யுத்த பணிகளை கவனிக்கிறது. ஆனாலும் புதிய நிர்வாகம், விளையாட்டு அமைச்சகத்தின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

  இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளம் மீதான இடைநீக்க நடவடிக்கையை உலக மல்யுத்த சங்கம் நேற்று தளர்த்தியது. அதே சமயம் முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக பல மாதங்கள் போராடிய பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் போன்ற வீரர், வீராங்கனைகளை சர்வதேச போட்டிக்கு பரிசீலனை செய்யும் போது எந்தவித பாகுபாடும் காட்டமாட்டோம் என்று இந்திய மல்யுத்த சம்மேளனம் எழுத்துபூர்வமாக உத்தரவாதம் தர வேண்டும் என்றும் உலக சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

  • பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் மத்திய அரசு வழங்கிய விருது, பதக்கங்களை திருப்பி அளிப்பதாக அறிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
  • இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அமைத்தது.

  புதுடெல்லி:

  பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர், விராங்கனைகள் டெல்லியில் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து மல்யுத்த சம்மேளன நடவடிக்கைகளில் இருந்து பிரிஜ் பூஷன் ஒதுங்கினார். கோர்ட்டு உத்தரவுப்படி அவர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடக்கிறது.

  கடந்த 21-ந்தேதி டெல்லியில் நடந்த இந்திய மல்யுத்த சமமேளன புதிய நிர்வாகிகள் தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்சய் சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த கனமே, மல்யுத்தத்தில் மீண்டும் பிரச்சினை வெடித்தது. பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் யாரும் மல்யுத்த சம்மேளனத்தில் இருக்கக்கூடாது என்பது தான் வீரர்களின் பிரதான கோரிக்கை. தாங்கள் நினைத்தபடி நடக்காததால் வீராங்கனைகள் மறுபடியும் கோதாவில் குதித்துள்ளனர். பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் மத்திய அரசு வழங்கிய விருது, பதக்கங்களை திருப்பி அளிப்பதாக அறிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

  இதற்கிடையே, புதிய தலைவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்ததால் இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கடந்த 24-ந்தேதி மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. மேலும், வீரர்களுக்கு போதிய அவகாசம் வழங்காமல் ஜூனியர் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பை இந்த மாத இறுதிக்குள் நடத்தப்போவதாக புதிய நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்றும் விளையாட்டு அமைச்சகம் சுட்டிக்காட்டியது. அத்துடன் மல்யுத்த நிர்வாகத்தை தற்காலிகமாக கவனிக்க இடைக்கால கமிட்டியை அமைக்கும்படி இந்திய ஒலிம்பிக் சங்கத்தை கேட்டுக் கொண்டது.

  இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அமைத்தது. இந்திய உசூ சம்மேளன தலைவர் பூபிந்தர் சிங் பஜ்வா கமிட்டியின் தலைவராகவும், முன்னாள் ஆக்கி வீரர் எம்.எம். சோமயா, முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை மஞ்ஜூஷா கன்வார் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இந்த கமிட்டியில் இருப்பார்கள்.

  வீரர்கள் தேர்வு, சர்வதேச போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்கான பதிவை சமர்ப்பிப்பது, போட்டிகளை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு, வங்கி கணக்கு விவரங்களை கையாள்வது, இதன் இணையதளத்தை நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளை எல்லாம் இடைக்கால கமிட்டி மேற்கொள்ளும்.

  ஏற்கனவே நிர்வாகிகள் தேர்தலுக்கு முன்பாக சில மாதங்கள் இடைக்கால கமிட்டி தான் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாக பணிகளை கவனித்தது. அதில் பூபிந்தர் சிங் பஜ்வாவும் ஒரு உறுப்பினராக இருந்தார். அந்த அனுபவம் அவருக்கு நிர்வாகத்தை திறம்பட வழிநடத்த உதவிகரமாக இருக்கும்.

  பஜ்வா கூறுகையில், '2024-ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது. அதற்கு தயாராவதை உடனடியாக தொடங்க வேண்டும். பயிற்சி முகாமுடன் சீனியர் மற்றும் ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளை விரைவில் நடத்துவோம். நாட்டில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக மல்யுத்தம் திகழ்கிறது. முடிந்த அளவுக்கு ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வெல்லும் வாய்ப்பை உருவாக்குவதே எங்களது இலக்கு' என்றார்.

  • இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கடிதம்.
  • 3 உறுப்பினர்களை கொண்ட தற்காலிக இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.

  இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை மத்திய அரசு இடைநீக்கம் செய்துள்ள நிலையில், தற்காலிக குழு அமைக்கக் கோரி இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது.

  இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை கண்காணிக்க தற்காலிக குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 உறுப்பினர்களை கொண்ட தற்காலிக குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.

  தற்காலிக குழுவின் தலைவராக பூபேந்தர் சிங் பஜ்வா, உறுப்பினர்களாக எம்.எம்.சோமையா, மஞ்சுஷா கன்வார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

  இந்த அமைப்பு, வீரர்கள் தேர்வு, விளையாட்டுப் போட்டிகளின் மேற்பார்வை, வங்கி கணக்கு உள்ளிட்டவைகளை இக்குழு கவனிக்கும்.

  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நிலையில் இந்திய ஒலிம்பிக் கமிட்டி மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை கவனிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை மத்திய அரசு இடைநீக்கம்.
  • மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட் தொடரும் என அறிவிப்பு.

  இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாடப் பணிகளை கண்காணிக்க தற்காலிக குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  தற்காலிக குழு அமைக்க கோரி இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

  இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை மத்திய அரசு இடைநீக்கம் செய்துள்ள நிலையில், தற்காலிக குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  மேலும், மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விளையாட்டுத்துறையில் உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு வினேஷ் போகத், பஜ்ரங் புனியா பெயர்களை இந்திய மல்யுத்த பெடரேசன் பரிந்துரை செய்துள்ளது. #WFI #KhelRatna
  விளையாட்டுத்துறையில் சாதனைக் படைக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவிக்கும்.

  இந்த விருதுகளுக்கு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெயர்களை அந்தந்த விளையாட்டுத்துறை மத்திய அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யும். அதன்படி இன்று இந்திய மல்யுத்த பெடரேசன் கேல் ரத்னா விருதுக்கு வினேஷ் போகத், பஜ்ரங் புனியா பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.


  வினேஷ் போகத்

  ராகுல் அவேரா, ஹர்ப்ரீத் சிங், திவ்யா கக்ரன், பூஜா தண்டா ஆகியோர் பெயர்களை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. விரேந்தர் குமார், சுஜீத் மான், நரேந்திர குமார் மற்றும் விக்ரம் குமார் ஆகியோர் பெயர்களை துரோணாச்சாரியார் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.

  நேற்றுடன் முடிவடைந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் பதக்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  ×