search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "communal violence"

    • நாளை வரை நூ மாவட்டத்தில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன
    • கைது சட்ட விரோதமானது மட்டுமல்ல, பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்

    இந்தியாவின் வடமாநிலமான அரியானாவில் உள்ளது நூ (Nuh) மாவட்டம்.

    இங்கு கடந்த ஜூலை 31 அன்று ஒரு பிரிவினர் நடத்திய ஊர்வலத்தில் வேறொரு பிரிவினர் கற்களை எறிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு மோதல் உருவானது. இதில் வன்முறை வெடித்து இம்மோதல் பெரும் கலவரமாக மாறியது.

    கலவரம் மேலும் பரவாமல் தடுக்கவும், அமைதி திரும்பவும் மாநில அரசாங்கமும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து பணியாற்றி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இக்கலவரம் குறித்து இரு தரப்பினரும் மற்றொரு தரப்பினர் மீது பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர். நாளை () வரை அந்த மாவட்டத்தில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

    கலவரம் குறித்து பல பிரமுகர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சுதர்ஷன் செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியரயராக பணிபுரிபவர் முகேஷ் குமார். இவர் இக்கலவரம் மற்றும் காவல்துறை நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

    முகேஷ் குமார் எக்ஸில் (டுவிட்டர்) ஒரு பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

    "கத்தார் நாட்டை தலைமை இடமாக கொண்ட அல் ஜசீரா (Al Jazeera) செய்தி நிறுவனம், குருகிராம் காவல்துறை ஆணையர் கலா ராமச்சந்திரன்-ஐ தொடர்பு கொண்டு இந்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நிர்பந்திக்கிறது. இந்த அழுத்தத்தால் ஆணையர் இந்து மத ஆர்வலர்களும், ஆதரவாளர்களும் எங்கிருந்தாலும் அவர்களை கைது செய்கிறார்." இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

    இதை குருகிராம் காவல்துறை மறுத்தது. இதனை தொடர்ந்து முகேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைது நடவடிக்கைக்கு சுதர்ஷன் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.., "இந்த கைது சட்ட விரோதமானது மட்டுமல்ல, பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான தாக்குதல். நாங்கள் அவருக்கு துணையாய் இருப்போம்" என தெரிவித்துள்ளது.

    அந்நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியர் சுரேஷ் சவ்ஹன்கே (Suresh Chavhanke) இது குறித்து தனது கண்டனங்களை பதிவு செய்தார். முகேஷ் விடுவிக்கப்பட்டதாக சுரேஷ் பின்னர் தெரிவித்திருந்தாலும் காவல்துறையினர் அதிகாரபூர்வமாக இதனை தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை.

    இலங்கையின் கடலோர நகரமான சிலாபம் நகரில் இருதரப்பினருக்கு இடையில் மீண்டும் கலவரம் வெடித்ததால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று நீக்கப்பட்டது.
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களின்மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    பயங்கரவாதத்தின் இந்த கோரத்தாண்டவத்தில் இருந்து மெல்ல மீண்டுவரும் இலங்கை மக்கள் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர்.

    இதற்கிடையில், சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத பதிவை மையமாக வைத்து அந்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடலோர நகரமான சிலாபம் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினருக்கு இடையில் மீண்டும் கலவரம் வெடித்தது. முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

    இதைதொடர்ந்து, ஹெட்டிபொல பகுதியிலும் இருபிரிவினருக்கு இடையில் மீண்டும் மோதல் வெடித்தது. இதில் ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் தடுக்கவும் அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேவையற்ற வதந்திகள் பரவாமல் இருக்க சமூக வலைத்தளங்களும் முடக்கி வைக்கப்பட்டன.



    இதைதொடர்ந்து, குளியாப்பிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய மற்றும் ஹெட்டிபொல, கம்பாலா உள்ளிட்ட பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் போலீசாரின் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

    இந்தப் பகுதிகளில் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு இன்று நீக்கப்பட்ட நிலையில் புதிய கலவரம் தொடர்பாக சுமார் 60 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இயல்புநிலைக்கு திரும்பிவரும் இலங்கையின் வடமேற்கு பகுதியில் இருபிரிவினருக்கு இடையில் இன்று வெடித்த மோதலை தொடர்ந்து 4 நகரங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களின்மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    பயங்கரவாதத்தின் இந்த கோரத்தாண்டவத்தில் இருந்து மெல்ல மீண்டுவரும் இலங்கை மக்கள் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத பதிவை மையமாக வைத்து அந்நாட்டின் மேற்கு பகுதியில் அமந்துள்ள கடலோர நகரமான சிலாபம் நகரில் நேற்று முன்தினம் இருதரப்பினருக்கு இடையில் நேற்று கலவரம் வெடித்ததால் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.



    அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் தடுக்கவும் அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேவையற்ற வதந்திகள் பரவாமல் இருக்க சமூக வலைத்தளங்களும் முடக்கி வைக்கப்பட்டன.

    இந்நிலையில், இன்று பிற்பகல் ஹெட்டிபொல பகுதியில் இருபிரிவினருக்கு இடையில் மீண்டும் மோதல் வெடித்தது.

    இதைதொடர்ந்து, குளியாப்பிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய மற்றும் ஹெட்டிபொல ஆகிய பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் போலீசாரின் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தப் பகுதிகளில் நாளை (14-ம் தேதி) அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    நைஜீரியாவில் இரு தரப்பு மத ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் பலியாகினர். #Nigeria #CommunalViolence
    அபுஜா:

    நைஜீரியா நாட்டின் வட பகுதியில் உள்ள கடுனா மாகாணத்தில் கசுவான் மாகாணி நகரில் ஒரு சந்தை உள்ளது. இந்த சந்தையில் இரு வெவ்வேறு மதங்களை சேர்ந்த சுமை தூக்குகிறவர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த பிரச்சினை தொடர்பாக, இரு தரப்பு மத ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 55 பேர் பலியாகினர்.

    இந்த மோதல் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாகாண போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். மேலும் அந்த நகரத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த மத மோதல்கள் குறித்து அந்த நாட்டின் அதிபர் முகமது புகாரி கவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “எந்த மதமும் அல்லது கலாசாரமும் வன்முறையை ஆதரிப்பது இல்லை. சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அமைதியும், நல்லிணக்கமும் நிலவுவது அவசியம்” என்று கூறினார்.

    மேலும், “வெவ்வேறு மத நம்பிக்கை உள்ள மக்களிடம் நல்லிணக்கம் இல்லாதவரையில், நமது அன்றாட பணிகளை நாம் செய்து முடிப்பது சாத்தியம் இல்லாமல் போய் விடும். இந்த பிரச்சினையில், மத தலைவர்கள் சகிப்புத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும்; வேற்றுமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். #Nigeria #CommunalViolence 
    ×