கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மறுநாளுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து.
கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
Published on

டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவருக்கு ஜாமின் வழங்கியதற்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவை, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் வரை நிறுத்தி வைப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

ஜாமின் நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையிலேயே உள்ளார். இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் முழு விவரம் கிடைத்த பின்பே மேல்முறையீட்டு மனு மீது முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்து.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com