search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த டெல்லி நீதிமன்றம்
    X

    கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த டெல்லி நீதிமன்றம்

    • திகார் சிறையில் தனது கணவரைக் கொல்ல சதி நடப்பதாக கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா குற்றம் சாட்டியுள்ளார்
    • திகார் நிர்வாகம் நான் இன்சுலின் கேட்கவில்லை என்ற அறிக்கையை செய்தித்தாளில் படித்து வருத்தம் அடைந்தேன் - கெஜ்ரிவால்

    டெல்லி முதல்வரான கெஜ்ரிவால் மதுபான கொள்கை விவகாரத்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் போதிலும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. தொடர்ந்து டெல்லி முதல்வராக இருந்து சிறையில் இருந்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.

    இதற்கிடையே, திகார் சிறையில் தனது கணவரைக் கொல்ல சதி நடப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    இந்நிலையில், "நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளதாக" டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறை கண்காணிப்பாளருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும் அந்த கடிதத்தில், " என் சர்க்கரை அளவு ஒரு நாளைக்கு மூன்று முறை மிக அதிகமாக உள்ளதால், நான் தினமும் இன்சுலின் கேட்கிறேன்.

    ஆனால், திகார் நிர்வாகம் நான் இன்சுலின் கேட்கவில்லை என்ற அறிக்கையை செய்தித்தாளில் படித்து வருத்தம் அடைந்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    மேலும் கெஜ்ரிவாலின் கடுமையான நீரிழிவு மற்றும் இரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கம் குறித்து தினமும் 15 நிமிடங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.

    Next Story
    ×