மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் - உச்சநீதிமன்றம் உத்தரவு

விசாரணை நடத்தியதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.ஏற்கனவே 90 நாட்கள் சிறையில் தண்டனை அனுபவித்தார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

டெல்லி மாநில அரசின் மதுபானக் கொள்கை தொடர்பாக பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தியதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. ஏற்கனவே 90 நாட்கள் சிறையில் தண்டனை அனுபவித்த நிலையிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற காரணங்களை கருத்தில் கொண்டும் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com