அபாய அளவில் காற்றின் தரம் - டெல்லி முதல்வர் முக்கிய அறிவிப்பு

டெல்லியில் காற்று மாசின் அளவு 432 ஆக பதிவாகி இருக்கிறது. ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.
அபாய அளவில் காற்றின் தரம் - டெல்லி முதல்வர் முக்கிய அறிவிப்பு
Published on

டெல்லி காற்று மாசு அளவு தொடர்ந்து அபாயகர நிலையிலேயே உள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி டெல்லியில் காற்று மாசின் அளவு 432 ஆக பதிவாகி இருக்கிறது. இது நேற்றிரவு 11 மணிக்கு பதிவான 452-வை விட குறைவு தான் என்பது ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து காற்றின் தரம் அபாயகர நிலையில் இருப்பதை அடுத்து டெல்லியில் மறு உத்தரவு வரும் வரை ஆரம்ப பள்ளிகள் ஆன்லைன் வழி கல்வி முறையை பின்பற்ற வேண்டும் என்ற முதலமைச்சர் அதிஷி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே ஆன்லைன் வழியில் பாடம் கற்க அம்மாநில அரசு வலியுறுத்தி உள்ளது.

காற்று மாசுடன் பனிமூட்டமும் சேர்ந்து கொண்டதால் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை இயக்க முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக 283 விமானங்கள் தாமதமாகி இருக்கின்றன. மேலும் ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com