search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "compensate"

    ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். #JammukashmirAccident #PMModi
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பனிஹால் என்ற இடத்தில் இருந்து ரம்பான் நகரை நோக்கி ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று ஒரு மினி பஸ் சென்று கொண்டிருந்தது.

    கேலா மோத் பகுதியில் ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் உள்ள பெரிய பள்ளத்தில் விழுந்து, கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 10 பேர் படுகாயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    இதேபோல், உத்தரகாண்டில் உள்ள உத்தர காசியில் நடைபெற்ற சாலை விபத்தில் 9 யாத்ரீகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.



    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டரில் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என பதிவிட்டுள்ளது. #JammuKashmirAccident #PMModi
    ×