search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US"

    • செங்கடல் பகுதியில் இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம்- ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
    • டிரோன்கள், ஏவுகணைகளை வீசி கப்பல் மீது தாக்குதல்.

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக உள்ளனர். இதையடுத்து செங்கடல் பகுதியில் இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று தெரிவித்தனர். அதன்படி செங்கடல் பகுதியில் சென்ற வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினர். டிரோன்கள், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்தநிலையில் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுக்க அமெரிக்கா புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது. இதில் 10 நாடுகளை இணைத்து படையை உருவாக்கி செங்கடலில் கண்காணிப்பில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின், பக்ரைனில் கூறியதாவது:-

    செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது ஒரு சர்வதேச சவாலாகும். இதற்கு புதிய பன்னாட்டு பாதுகாப்பு முயற்சியை அறிவித்துள்ளோம்.

    இதற்கான பணியில் அமெரிக்காவுடன் இங்கிலாந்து, பக்ரைன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், சீஷெல்ஸ் ஆகிய நாடுகள் இணையும். சில நாடுகள் கூட்டு ரோந்து பணியை நடத்தும். மற்றவை தெற்கு செங்கடல் மற்றும் ஏமன் வளைகுடாவில் உளவுத்துறை ஆதரவை வழங்கும்

    இவ்வாறு ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

    • ஆயுதம் தாங்கிய வாகனங்களுக்கு பெருமளவு சேதம்.
    • 18 ஆண்டுகளில் மிகவும் மோசமான நிலை.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போர் காரணமாக பொது மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில், ரஷியா உக்ரைன் இடையேயான போரில் இதுவரை ரஷிய ராணுவப்படையை சேர்ந்த 3 லட்சத்து 15 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயமுற்று இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது ரஷிய ராணுவத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம் என்று அமெரிக்க உளவுத்துறை தகவல்களில் தெரியவந்துள்ளது. மேலும் போர் காரணமாக ரஷிய வாகனங்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய வாகனங்களுக்கு பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

     


    இதன் காரணமாக ரஷியாவின் போர் வாகனங்களின் நவீனத்தன்மை கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ரஷியா போருக்காக பயன்படுத்திய அதிநவீன வாகனங்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய வாகனங்கள் பெரும்பாலும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன.

    போர் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் பைடன், "உக்ரைனை தனித்துவிட மாட்டேன், அமெரிக்கர்களும் அப்படி செய்ய மாட்டார்கள்," என்று தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனுக்கு கூடுதலாக 200 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்.  

    • கைதிகள் பரபஸ்பர விடுதலைக்கு இரு நாடுகளும் சம்மதம்
    • 6 பில்லியன் டாலர் பணப்பரிமாற்றம் மனிதாபிமான பொருட்களை கொள்முதல் செய்ய உதவும்

    ஈரானில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் அமெரிக்காவும் ஈரானியர்களை சிறைபிடித்துள்ளது. இவ்வாறு சிறை பிடிக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய அமெரிக்கா- ஈரான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ஈரானில் உள்ள ஐந்து அமெரிக்கர்கள் சிறையில் இருநது விடுதலை செய்யப்படுவார்கள். அதேபோல் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஐந்து பேரை அமெரிக்கா விடுதலை செய்ய இருக்கிறது.

    மேலும், தென்கொரியாவில் இருந்து கத்தாருக்கு 6 பில்லியன் அமெரிக்க டாலரை மாற்றம் செய்யவும் அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.

    இதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பிளிங்டன் கடந்த வாரமே கையெழுத்திட்ட நிலையில், நேற்றுதான் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே அமெரிக்க துருப்புகள் மற்றம் அவற்றின் துணை நாடு துருப்புகளை ஈரான் மத்திய கிழக்கு கடற்கரை பகுதியில் அச்சுறுத்தி வரும் நிலையில், ஈரானின் பொருளாதாரத்திற்கு இது கூடுதல் உதவியாக இருக்கும் என எதிர்க்கட்சி ஜோ பைடன் அரசை விமர்சிக்கும என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தென்கொரியா- கத்தார் மத்திய வங்கி பண பரிமாற்ற அனுமதி ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசிய வங்கிகள் தொடர்பான அமெரிக்காவின் தடையை மீறியதாகாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மனிதாபிமான பொருட்களை கொள்முதல் செய்வதற்கு இது உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    • அமெரிக்காவின் கேம்ப் டேவிட்டில் வருகிற 18-ந் தேதி முத்தரப்பு உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
    • சர்வதேச நிகழ்வுகளுக்கு இடையே அல்லாமல் தனியாக நடைபெறும் முதல் உச்சி மாநாடு இதுவாகும்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கேம்ப் டேவிட்டில் வருகிற 18-ந் தேதி முத்தரப்பு உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் உயர்மட்ட அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அமெரிக்கா செல்ல உள்ளார். இதற்கு முன்னதாக கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த ஜி7 மாநாட்டின்போது முத்தரப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. எனினும் சர்வதேச நிகழ்வுகளுக்கு இடையே அல்லாமல் தனியாக நடைபெறும் முதல் உச்சி மாநாடு இதுவாகும்.

    இந்த மாநாட்டில் வடகொரியாவில் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை சமாளிக்க முத்தரப்பு நாடுகளின் ஒத்துழைப்பு, பாதுகாப்பு போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அமெரிக்க அரசு இது சம்பந்தமான எல்லா ரகசிய திட்டங்களை குறித்தும் விசாரிக்க ஒரு படையை உருவாக்கியது
    • இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் தெரிந்து கொள்ள நான் அனுமதிக்கபடவில்லை

    'பறக்கும் தட்டுகள்' எனும் பெயரில் பல கதைகளிலும், திரைப்படங்களிலும் காட்டப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் விமானங்களின் (Unidentified Flying Objects) நடமாட்டங்களை குறித்து அமெரிக்கா தகவல்கள் சேகரிக்கிறது.

    முன்னெப்போதும் இல்லாத அளவில் அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், தேசிய பாதுகாப்பு கண்ணோட்டத்துடனும், அமெரிக்காவின் எதிரி நாடுகளின் மறைமுக தாக்குதல் முயற்சிகளை கண்டறியவும், இவ்விமானங்கள் குறித்து நடத்தப்பட்ட ராணுவ ஆராய்ச்சிகளின் தகவல்களை வெளியிட உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    பென்டகன் (Pentagon) எனப்படும் அமெரிக்க ராணுவ தலைமையகத்திடமிருந்து இதற்கான தகவல்கள் பெறப்படுகின்றன.

    இந்நிலையில் அமெரிக்க விமான படையின் உளவுப்பிரிவை சேர்ந்த முன்னாள் அதிகாரி ஒருவர் இது சம்பந்தமான ஆராய்ச்சி தகவல்களை நெடுங்காலமாக ராணுவம் மறைத்து வருகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.

    மேஜர் டேவிட் க்ரூஷ் (Major David Grusch) எனும் அந்த அதிகாரி, அமெரிக்க காங்கிரஸ் முன் சாட்சியம் அளித்து கூறியதாவது:-

    அமெரிக்க அரசு இது சம்பந்தமான எல்லா ரகசிய திட்டங்களை குறித்தும் விசாரிக்க ஒரு படையை உருவாக்கியது. இதன் தலைவராக 2019-ல் நான் நியமிக்கப்பட்டேன். அப்போது அமெரிக்க உளவு செயற்கைக்கோள் செயல்படுத்தும் துறையில் பணியாற்றினேன்.

    அப்போது பல தசாப்தங்களாக நடைபெற்று வந்த, பூமியில் விழுந்த அடையாளம் தெரியாத பறக்கும் விமானங்களை குறித்தும், அவற்றின் பாகங்களை கொண்டு மீண்டும் அவற்றை உருவாக்க முயலும் பொறியியல் குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெறுவது எனக்கு தெரியப்படுத்தப்பட்டது.

    ஆனால் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் தெரிந்து கொள்ள நான் அனுமதிக்கபடவில்லை. இதுகுறித்து எனக்கு தெரிந்திருக்கும் தகவல்களை வெளியில் கூற நான் முன் வந்தபோது என்னை பணி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையான துன்பங்களுக்கு ஆளாக்கினார்கள். 1930-களிலிருந்து அமெரிக்க அரசுக்கு இதுகுறித்த தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

    இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

    அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு சபையையும் சேர்ந்த உறுப்பினர்களும் இந்த ஆளில்லா விமானங்களை குறித்தும், இதுகுறித்த ஆராய்ச்சிகள் குறித்தும் டேவிட்டிடம் தகவல்கள் கோரியுள்ளனர்.

    கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து பல இடங்களிலிருந்து இத்தகைய "விமானங்களை" கண்டதாக செய்திகள் வருவதாகவும், அதனை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்த பென்டகன், டேவிட்டின் இந்த குற்றச்சாட்டுகளை முழுவதுமாக மறுத்துள்ளது.

    • 1985-ம் வருடம் கப்பற்படையில் தனது முதல் பொறுப்பை ஏற்றார்
    • கடந்த செப்டம்பர் மாதம் கப்பற்படையின் துணைத்தலைவராக பொறுப்பேற்றார்

    அமெரிக்காவின் கப்பற்படையில் மிக உயர்ந்ததாகவும், பெருமைக்குரியதாகவும் கருதப்படுவது, அமெரிக்க கப்பற்படை செயலரின் கீழ் வரும் அமெரிக்க கப்பற்படை நடவடிக்கைகளின் தலைவர் (Chief of Naval Operations) பதவி.

    இப்பதவிக்கு இதுவரை அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத ஒரு நிகழ்வாக அதிபர் ஜோ பைடன், லிஸா ஃப்ரான்செட்டி எனும் ஒரு பெண்மணியை நியமித்திருக்கிறார். இதன்மூலம் லிஸா அமெரிக்க படைகளின் கூட்டு தலைவர்களில் (Joint Chiefs of Staffs) இடம் பெறும் முதல் பெண்மணியும் ஆகிறார்.

    தற்போது அமெரிக்க கடற்படையின் துணைதலைவராக பணியாற்றும் லிஸா, தனது பணிக்காலத்தில் இதுவரை பல்வேறு சாதனைகளை புரிந்திருக்கிறார்.

    1985-ம் வருடம் கப்பற்படையில் தனது முதல் பொறுப்பை ஏற்ற லிஸா, பல முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.

    கொரியாவிற்கான அமெரிக்காவின் கடற்படையின் ஆணையர், கடற்படை போர்முறை மேம்பாட்டு நடவடிக்கைகளின் துணைதலைவர் மற்றும் ராணுவ கூட்டுபடையின் மூலோபாயம், திட்டம் மற்றும் நோக்கங்களின் இயக்குனர் என முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார்.

    கடந்த செப்டம்பர் மாதம் கப்பற்படையின் துணைத்தலைவராக பொறுப்பேற்ற லிஸா, 2 தாக்குதல் நடவடிக்கைகளுக்கு துணை கடற்படை ஆணையராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரது நியமனம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருப்பதாவது:-

    தற்போதைய கப்பற்படையின் துணைத்தலைவர் பொறுப்பு உட்பட மிகச்சிறப்பான 38-வருட பணி அனுபவம் கொண்டவரான லிஸா மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். நாட்டிற்காக அவரின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. கொள்கை முடிவுகளில் மட்டுமல்லாமல் செயலாக்கங்களிலும் அவர் தனது திறனை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

    அவரது சாதனைகளுக்காக, பெருமை வாய்ந்த 4 நட்சத்திர குறியீட்டை பெற்றவர். அமெரிக்க ராணுவ வரலாற்றில் இந்த பெருமையை பெறும் இரண்டாம் பெண்மணி இவர். அவர் இப்பொழுது இந்த தலைமை பதவியிலும் தனது பெயரை பதிவு செய்யும் விதமாக திறமையாக செயல்படுவார் என நான் நம்புகிறேன். இவரது நியமனம் அமெரிக்க ராணுவத்தில் பாலின பிரதிநிதித்துவத்துக்கான ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

    இவ்வாறு பைடன் தெரிவித்தார்.

    நேற்று பைடன் அமெரிக்க ராணுவத்தில் பல முக்கிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை நியமித்துள்ளார். ஜோ பைடனின் நியமனங்களை அமெரிக்க ராணுவ செயலர் லாயிட் ஆஸ்டின் பாராட்டியிருக்கிறார்.

    • துப்பாக்கி சூடு நடத்தியதாக 19 வயதான நபர் கைது செய்யப்பட்டார்.
    • திடீர் துப்பாக்கி சூடு காரணமாக சிறுமி ஒருவர் காரின் மீது மோதி விபத்தில் சிக்கினார்.

    அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் பலத்த காயமுற்றனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்த சமயம் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    துப்பாக்கி சூடு நடத்தியதாக 19 வயதான நபர் கைது செய்யப்பட்டார். விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தின் அல்ட்ரியா தியேட்டரின் வெளியே துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த பகுதியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோருக்கு வயது 18 மற்றும் 36 ஆகும். மேலும் 31 வயதான நபருக்கு பலத்த காயமும், நான்கு பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டன. திடீர் துப்பாக்கி சூடு காரணமாக சிறுமி ஒருவர் காரின் மீது மோதி விபத்தில் சிக்கினார். மேலும் பலர் தள்ளுமுள்ளில் சிக்கி காயமுற்றனர்.

    • ஆப்பிள் மொபைல் சாதனங்களில் அமெரிக்க சிறப்பு சேவைகளின் உளவு நடவடிக்கை அம்பலம்.
    • ஆப்பிள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பு இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு.

    ரஷிய ரகசங்களை அறிந்து கொள்ளும் அமெரிக்க நாட்டின் சதித்திட்டத்தை ரஷிய பாதுகாப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளது. அதன்படி ரஷியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐபோன்களை பிரத்யேக உளவு மென்பொருள் மூலம் அமெரிக்கா உளவு பார்த்து வந்துள்ளது.

    சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சாதனங்கள் இந்த உளவு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாஸ்கோவை சேர்ந்த கேஸ்பர்ஸ்கை ஆய்வகம் தெரிவித்து இருக்கிறது. மேலும் நாடு முழுக்க சுமார் ஆயிரத்திற்கும் அதிக ஐபோன்களில் இந்த பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் ரஷியாவை சேர்ந்த வெளியுறவுத் துறை அதிகாரிகளின் சாதனங்களும் அடங்கும்.

    "ஆப்பிள் மொபைல் சாதனங்களில் அமெரிக்க சிறப்பு சேவைகளின் உளவு நடவடிக்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்," என்று பாதுகாப்பு பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ஆப்பிள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பு இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதற்கான தெரிகின்றன.

    ரஷிய பாதுகாப்பு துறை தெரிவித்து இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. "ஆப்பிள் சாதனங்களில் பேக்டோர் ஏற்படுத்தும் நோக்கில் இதுவரை எந்த அரசுடனும் நாங்கள் பணியாற்றியது இல்லை. எதிர்காலத்திலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம்," என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    • டிஃபன் பாக்சில் தோட்டாக்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
    • ஒரு மணி நேரத்திற்கு பள்ளி வளாகம் முழுக்க ஊரடங்கு நிலை உருவாக்கப்பட்டது.

    அமெரிக்காவின் அரிசோனா மாகாண தலைநகர் ஃபீனிக்சில் பாஸ்ட்ரோம் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர் தனது பையில் துப்பாக்கியும், டிஃபன் பாக்சில் தோட்டாக்களையும் கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மாணவரிடம் துப்பாக்கியும், அவரது பை மற்றும் டிஃபன் பாக்சில் தோட்டாக்கள் இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் உடனடியாக பள்ளியில் இருந்து மற்ற மாணவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பள்ளி வளாகம் முழுக்க ஊரடங்கு நிலை உருவாக்கப்பட்டது.

    பள்ளிக்கு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொண்டு வந்தது, 15 வயதான மாணவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட மாணவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.

    பின் ஆயுதங்களை வைத்திருந்தது, பள்ளியில் இடையூறை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றங்களுக்காக மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பள்ளி மாணவரிடம் இருந்து AR-15 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

    • கொலராடோவில் கருவுற்ற பெண்கள், எந்த நிலையில் இருந்தாலும் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்.
    • ஏற்கனவே பல சமயங்களில் தாம்ப்சன் கொன்சேல்ஸ்-ஐ தாக்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த நபர் தனது காதலி கருக்கலைப்பு செய்ததற்காக துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 22 வயதான ஹரோல்டு தாம்ப்சன், 26 வயதான கேப்ரியல்லா கொன்சேல்ஸ்-ஐ கொலை செய்தார் என்று டல்லாஸ் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    டெக்சாசில் இருந்து சுமார் 800 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் கொலராடோவுக்கு பயணம் செய்த கொன்சேல்ஸ் அங்கு கருக்கலைப்பு செய்து கொண்டார். கொலராடோவில் கருவுற்ற பெண்கள், எந்த நிலையில் இருந்தாலும் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

     

    கருவுற்று ஆறு வாரங்கள் ஆனவர்கள், மருத்துவ அவசர நிலையின்றி தாமாக முன்வந்து கருக்கலைப்பு செய்வது டெக்சாஸ் மாகாணத்தில் சட்டரீதியில் குற்ற செயல் ஆகும். சம்பவத்தன்று கொன்சேல்ஸ்-ஐ சந்தித்த தாம்ப்சன் அவரிடம் சிறுது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின் தாம்ப்சன், கொன்சேல்ஸ் கழுத்தை நெறிக்க தொடங்கியுள்ளார்.

    கொன்சேல்ஸ் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து நடந்து செல்ல முயன்றிருக்கிறார். அப்போது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்த தாம்ப்சன் கொன்சேல்ஸ் தலையில் சுட்டார். ஏற்கனவே பல சமயங்களில் தாம்ப்சன் கொன்சேல்ஸ்-ஐ தாக்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. காதலியை கொலை செய்த தாம்ப்சனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

    • அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் ஆகியவற்றுக்கு வாஜ்பாயை ரஸ்கோத்ரா அழைத்துச் சென்றார்.
    • இரவு விடுதி எப்படிப்பட்டது என்று அறியாதவராக வாஜ்பாய் இருந்தார்.

    புதுடெல்லி:

    பா.ஜனதாவை நிறுவிய தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய், திருமணமே செய்து கொள்ளவில்லை. 3 தடவை பிரதமர் பதவி வகித்துள்ளார். அவர் கடந்த 2018-ம் ஆண்டு காலமானார்.

    அனைத்து கட்சி தலைவர்களாலும் மதிக்கப்பட்ட வாஜ்பாயின் புதிய வாழ்க்கை வரலாற்று நூலை அபிஷேக் சவுத்ரி என்பவர் 2 தொகுதிகளாக எழுதி உள்ளார். 'வாஜ்பாய்-அசென்ட் ஆப் ஹிண்டு ரைட்' என்ற அந்த புத்தகத்தில் புதிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    நூலின் சில பகுதிகள் வருமாறு:-

    கடந்த 1960-ம் ஆண்டு, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜான் கென்னடியும், ரிச்சர்டு நிக்சனும் போட்டியிட்டனர். அமெரிக்க அரசின் அழைப்பின்பேரில், அந்த தேர்தல் பிரசாரத்தின் பார்வையாளராக வாஜ்பாய் அமெரிக்கா சென்றார்.

    அவரது முதலாவது வெளிநாட்டு பயணம் அதுவே ஆகும். 1960-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி அவர் அமெரிக்காவுக்கு விமானம் ஏறினார். ரெயில்வே தொழிலாளர்கள் நலனில் வாஜ்பாய்க்கு இருந்த அக்கறை காரணமாக அவர் அழைக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை எழுதியது.

    ஐ.நா. பொதுச்சபை கூட்டத்துக்கு சென்ற பிரதிநிதிகள் குழுவில் வாஜ்பாய் பெயரை அப்போதைய பிரதமர் நேரு சேர்த்ததும் இந்த பயணத்துக்கு ஒரு காரணம்.

    ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த இளம் ஐ.எப்.எஸ். அதிகாரி மகாராஜாகிருஷ்ணா ரஸ்கோத்ராவுடன் வாஜ்பாய் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டார். நியூயார்க்கில் இருந்த பெரும்பாலான நேரங்களில் ரஸ்கோத்ராவுடன் இருந்தார்.

    அப்போது இருவரும் 30 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர். ஐ.நா. தலைமையகத்தில் இல்லாத நேரங்களில், ஆர்.எஸ்.எஸ். பத்திரிகைக்கு எழுதி அனுப்புவதும், நியூயார்க்கை சுற்றி பார்ப்பதுமாக வாஜ்பாய் நேரத்தை பிரித்துக்கொண்டார்.

    அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் ஆகியவற்றுக்கு வாஜ்பாயை ரஸ்கோத்ரா அழைத்துச் சென்றார். ஆனால் அவையெல்லாம் வாஜ்பாய்க்கு ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை.

    சில நேரங்களில், இரவுநேர கேளிக்கை விடுதிகளுக்கு வாஜ்பாயை ரஸ்கோத்ரா அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, இரவு விடுதி எப்படிப்பட்டது என்று அறியாதவராக வாஜ்பாய் இருந்தார். ''அங்கு ஆடை அவிழ்ப்பு நடக்காது, நவீன இசையின் பரிணாம வளர்ச்சியை பார்க்கலாம்'' என்று ரஸ்கோத்ரா உறுதி அளித்தார்.

    அதன்பிறகு, வாஜ்பாய் ஆர்வமாக இரவு விடுதிகளுக்கு சென்றார்.

    இவ்வாறு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

    • நான் இறக்க போவதாக கருதினேன், என் குழந்தைகள் மற்றும் மனைவியைப் நினைத்தேன்.
    • அந்த பாலூட்டி கடலின் மேற்பரப்புக்குச் சென்று தலையை அசைக்க தொடங்கியது.

    அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பகுதியை சேர்ந்த மைக்கேல் பேக்கார்ட், ராட்சத திமிங்கலத்தின் வாய்க்குள் 40 வினாடிகள் சிக்கி தவித்து பின்னர் உயிருடன் மீண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.

    இது குறித்து அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

    ஒரு சாதாரண நாளில் அது நடந்தது. நான் கடலுக்கு சென்று தண்ணீரில் இறங்கினேன்,இரண்டு டைவ்கள் செய்தேன். பின்னர் மூன்றாவது டைவ் செய்த போது, நான் கீழே கீழே கீழே இறங்கினேன்.

    ஒரு சரக்கு ரயிலைப் போல நான் இழுக்கப்பட்டேன். பின்னர் அந்த இடம் திடீரென்று கருப்பாகிவிட்டது. எனது உடலிலும் அழுத்தத்தை உணர முடிந்தது. ராட்சத திமிங்கலத்தின் வாயில் இருப்பதை உணர்ந்தேன். நான் அந்த பொருளைப் பிடிக்க நினைத்தேன். உள்ளே இருந்து நான் வெளியேற முயற்சிக்கிறேன்.

    அது [திமிங்கலம்] வெறித்தனமாக இருந்தது.நான் இறக்க போவதாக நினைத்தேன். நான் என் குழந்தைகள் மற்றும் என் மனைவியைப் பற்றி நினைத்தேன்.அதிர்ஷ்டவசமாக, அந்த பாலூட்டி கடலின் மேற்பரப்புக்குச் சென்று தலையை அசைக்க தொடங்கியது.

    இதனால் நான் அதன் வாயிலிருந்து மேலே பறக்கிறேன். நான், கடவுளே என்று கத்தினேன். திமிங்கலத்தின் வாயில் இருக்கும் போது, ​என்து நுரையீரல் வெடிக்கவில்லை என்பதால் நன்றியுள்ளவனாக இருந்தேன் என்று நினைத்தேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×