பையில் துப்பாக்கி, லஞ்ச் பாக்சில் தோட்டா கொண்டு வந்த பள்ளி மாணவர் கைது!

டிஃபன் பாக்சில் தோட்டாக்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஒரு மணி நேரத்திற்கு பள்ளி வளாகம் முழுக்க ஊரடங்கு நிலை உருவாக்கப்பட்டது.
பையில் துப்பாக்கி, லஞ்ச் பாக்சில் தோட்டா கொண்டு வந்த பள்ளி மாணவர் கைது!
Published on

அமெரிக்காவின் அரிசோனா மாகாண தலைநகர் ஃபீனிக்சில் பாஸ்ட்ரோம் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர் தனது பையில் துப்பாக்கியும், டிஃபன் பாக்சில் தோட்டாக்களையும் கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மாணவரிடம் துப்பாக்கியும், அவரது பை மற்றும் டிஃபன் பாக்சில் தோட்டாக்கள் இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் உடனடியாக பள்ளியில் இருந்து மற்ற மாணவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பள்ளி வளாகம் முழுக்க ஊரடங்கு நிலை உருவாக்கப்பட்டது.

பள்ளிக்கு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொண்டு வந்தது, 15 வயதான மாணவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட மாணவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.

பின் ஆயுதங்களை வைத்திருந்தது, பள்ளியில் இடையூறை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றங்களுக்காக மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பள்ளி மாணவரிடம் இருந்து AR-15 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

X

Maalai Malar
www.maalaimalar.com