search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trader"

    • ஜெபஸ்டீபன் கடைக்கு கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுந்தரபாண்டி என்பவர் பழம் வாங்கி சென்றார்.
    • அப்போது ஜெபஸ்டீபனுக்கும், சுந்தரபாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கால்டுவெல் காலனியை சேர்ந்தவர் ஜெப ஸ்டீபன் (வயது38). இவர் 2-ம் கேட் பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். இவருடன் அவரது உறவி னரான கன்னிமுத்து (59) என்பவரும் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் இவரது கடைக்கு கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுந்தரபாண்டி என்பவர் பழம் வாங்கி சென்றார். பின்னர் திரும்பி வந்து வாங்கி பழங்கள் சரியில்லை என கூறியுள்ளார். அப்போது ஜெப ஸ்டீபனு க்கும், சுந்தரபாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த சுந்தரபாண்டி அரிவாளால் வெட்ட முயன்றார். இதனைப்பார்த்த கன்னிமுத்து அதனை தடுக்க முயன்றார். அப்போது அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • ராஜ்குமார் தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கி இருந்து வருகிறார்.
    • பாத்திமா நகர் 3-வது தெருவை சேர்ந்த தொழிலாளி திலக் என்பவர் ராஜ்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    தூத்துக்குடி:

    கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 28). வியாபாரி. இவர் தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கி இருந்து வருகிறார்.

    நேற்று இரவு அந்த ஓட்டலில் ராஜ்குமார் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாத்திமா நகர் 3-வது தெருவை சேர்ந்த தொழிலாளி திலக் என்பவர் ராஜ்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் அங்குள்ள சாலையில் ராஜ்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை திலக் சரமாரியாக அடித்து தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த ராஜ்குமார் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணரமேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து திலக்கை கைது செய்தனர்.

    • முக்கூடல்- ஆலங்குளம் செல்லும் ரோட்டில் மிக்கேல் ராயப்பன் பனை ஓலை வியாபாரம் செய்து வந்தார்.
    • மிக்கேல் ராயப்பனை இருவரும் சேர்ந்து அவதூறாக பேசி தாக்கி உள்ளனர்.

    நெல்லை:

    முக்கூடல் அருகே உள்ள தாளார்குளத்தை சேர்ந்தவர் மிக்கேல் ராயப்பன் (வயது 48). இவர் கடந்த 14-ந் தேதி முக்கூடல்- ஆலங்குளம் செல்லும் ரோட்டில் பனை ஓலை வியாபாரம் செய்து வந்தார்.

    அப்போது அங்கு வந்த முக்கூடலை சேர்ந்த முருகப்பெருமாள் என்ற பழனி (35) மற்றும் முத்துக்குமார் (36) ஆகிய இருவரும் சேர்ந்து மிக்கேல் ராயப்பனை அவதூறாக பேசி தாக்கி உள்ளனர். இதை தடுக்க முயன்ற அவரது உறவினர் மேரீஸ் ராஜாவையும் அடித்து மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து மிக்கேல் ராஜா முக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகப் பெருமாள், முத்துக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • வண்ணாரப்பேட்டை போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து ஜெகதீசனை கைது செய்தனர்.

    ராயபுரம்:

    வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் 2000-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய மொத்த, சில்லரை ரெடிமேட் ஜவுளி கடைகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட துணிக்கடைகள், ஜூஸ் கடை, வளையல் கடை என பல்வேறு நடைபாதை கடைகள் உள்ளன. இந்த கடைகள் நடைபாதைகளை ஆக்கிரமித்து உள்ளதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் நடைபாதை கடைகளை அகற்றுவதற்காக லாரிகளை எடுத்து வந்ததாக தெரிகிறது.

    லாரிகளை முற்றுகையிட்ட நடைபாதை வியாபாரிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாநகராட்சி அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் எம்.சி.ரோடு பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளும் கடைகளை அகற்றாமல் சென்றனர்.

    இந்நிலையில் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மோகனா (32) என்பவர் 51-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் தன்னையும் நடைபாதை வியாபாரிகளையும் தகாத வார்த்தையில் மிரட்டல் விடும் தோரணையில் பேசி மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்ததாக பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து ஜெகதீசனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    • வீட்டில் இருந்து வெளியூர் வியாபாரத்திற்கு சென்று வருவதாக ஏழு மலை தனது மனைவி சுகுணாவிடம் கூறி சென்றார்.
    • தகவலின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் ஏழுமலை (வயது 43). இவர் இருசக்கர வாகனம் மூலம் புலி, பூண்டு வியா பாரம் செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியூர் வியாபாரத்திற்கு சென்று வருவதாக ஏழு மலை தனது மனைவி சுகுணாவிடம் கூறி சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி தனது உறவினர்களுடன் சேர்ந்த ஏழுமலையை தேடினார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை அதே கிராமத்தை பாலாஜி என்ப வரது கிணற்றில் ஏழமலை பிணமாக மிதந்தார். அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்றனர். தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் இறங்கி ஏழுமலை உடலை மீட்டனர். அதன் பின்னர்பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வியாபாரி ஏழுமலை எப்படி இறந்தார், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசார ணை நடத்தி வருகிறார்கள்.

    • வியாபாரி உள்பட 4 பேரை மிரட்டி பணம் பறித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இது தொடர்பாக பொன் பாண்டியன் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை பி.பி.குளம், சேக்கிழார் தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் அஜித் (வயது 20). இவர் நேதாஜி மெயின் ரோடு மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 3 பேர் அவர் வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டி பறித்து சென்றனர்.

    இது தொடர்பாக அஜித் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முல்லை நகர் திருவள்ளுவர் தெரு ஜெகதீஸ்வரன் என்ற எலி (வயது 25), தரகன் தெரு பெரியசாமி மகன் ஸ்ரீதர் (23), கார்த்திக் (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மற்றொரு சம்பவம்

    மதுரை சமயநல்லூர், சத்தியமூர்த்தி நகர் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர பாண்டி (29). இவர் நேற்று நள்ளிரவு விளாங்குடி காய்கறி கடை அருகே நடந்து சென்றார். அப்போது கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000-ஐ பறித்ததாக அதே பகுதியை சேர்ந்த விளாங்குடி டேவிட் என்பவரை கூடல்புதூர் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை கே.கே. நகரை சேர்ந்தவர் பொன் பாண்டியன் (40). இவர் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் நுழைவு வாயிலில் ஓட்டல் நடத்தி வருகிறார். அவர் ஓட்டலுக்கு வந்தபோது வழிமறித்த 2 பேர் கத்தி முனையில் மிரட்டி ரூ.500-ஐ பறித்து சென்றனர்.

    இது தொடர்பாக பொன் பாண்டியன் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஆலங்குளம் பாரதிபுரம் தெரு வெள்ளைச்சாமி மகன் பாண்டியராஜா (20), கூடல்புதூர் இமயம் நகர் உதயகுமார் மகன் மொட்டை மணி (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் இலவசமாக வழங்கும் விழா நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
    • காய்கறி பழங்கள் விற்பனை செய்பவர்களுக்கும், பூ வியாபாரம் செய்பவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் சாலை ஓர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் இலவசமாக வழங்கும் விழா நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் வகித்தார் நிகழ்ச்சியில் ரூ. 22.50 லட்சம் மதிப்புள்ள 21 காய்கறி பழங்கள் விற்பனை செய்பவர்களுக்கும், .10 பூ வியாபாரம் செய்பவர்களுக்கும் சேர்த்து 31 வண்டிகளை நகர மன்ற தலைவர் புகழேந்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா ஒன்றிய பொறியாளர் முகமது இப்ராஹிம் துணை தலைவர் மங்களநாயகி மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மகனுடன் கோவையில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    தாராபுரம் :

    காங்கயம் அருகே வடசின்னாரிபாளையம் காட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 50). திருமணமான இவர் விவசாயம் செய்து வந்தார். இந்தநிலையில் செல்லமுத்து கடந்த பல வருடங்களாக அதிகளவில் மது குடித்து வந்ததாகவும், அதிலிருந்து மீள முடியாமல் புலம்பி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்லமுத்து நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் தனது தோட்டத்தில் இருந்த பயிர்களுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

    இதையறிந்த அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு கொடுவாய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லமுத்துவை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டினம் பாப்பையின் புதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் ராஜேஷ் (வயது 35). காய்கறி வியாபாரியான இவருக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு கோவையை சேர்ந்த சர்மி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஹர்ஷத் (13) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் மகனுடன் கோவையில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    ராஜேஷ் தனது பெற்றோருடன் பாப்பையின் புதூர் பகுதியில் வசித்தபடி வியாபாரத்தை கவனித்து வந்தார். அடிக்கடி மனைவி மற்றும் மகனை நினைத்து சில நேரத்தில் பெற்றோரிடம் வருத்தம் தெரிவித்து வந்தார். சம்பவத்தன்று நேற்று இரவு தாய் ராணி ஊருக்கு சென்றபோது ராஜேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்திய ஆடை பங்களிப்பு 4.5 சதவீதமாக உள்ளது.
    • அக்டோபர் 12,13 ஆகிய தேதிகளில் டென்மார்க் நாட்டில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    டென்மார்க் நாட்டின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்திய ஆடை பங்களிப்பு 4.5 சதவீதமாக உள்ளது. நம் நாட்டில் இருந்து ஆண்கள், சிறுவர்களுக்கான டிரவுசர், ஓவரால், ஷார்ட்ஸ், புல்ஓவர், டி-சர்ட், பெண்களுக்கான டிரவுசர், ஜாக்கெட்டுகள் அதிக அளவில் ஏற்றுமதியாகிறது.

    டென்மார்க் நாட்டின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதி, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அந்நாட்டுக்கான இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தை மேலும் உயர்த்துவதற்காக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தொடர்ந்து முயற்சித்து வருகிறது. வருகிற அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் டென்மார்க் நாட்டில் வர்த்தகர் - ஏற்றுமதியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதில் இந்திய ஏற்றுமதியாளர் பங்கேற்க ஏ.இ.பி.சி., ஏற்பாடு செய்துள்ளது.டென்மார்க் நாட்டின் இறக்குமதியில் பின்னலாடை ரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்நாட்டில் நடைபெற உள்ள வர்த்தகர் சந்திப்பு நிகழ்ச்சியில் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 0421 2232634 என்ற எண்ணில் ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பலியான வியாபாரி மாவடியில் சுவீட் கடை வைத்து நடத்தி வந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் இருந்த பொருள் கீழே விழுந்ததுள்ளது. அதை எடுக்க முயன்ற போது கீழே விழுந்துள்ளார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள வடக்கு சாலைப்புதூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 55). இவருக்கு சுகந்தி என்ற மனைவியும், 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.

    வியாபாரி

    இவர் மாவடியில் சுவீட் கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 11-ந்தேதி நடராஜன் களக்காட்டிற்கு வந்து கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு மாவடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    சாலைப்புதூர் அருகே உள்ள பாலத்தில் சென்ற போது, மோட்டார் சைக்கிளில் இருந்த பொருள் கீழே விழுந்தது. இதை எடுக்க முயற்சி செய்த போது, மோட்டார் சைக்கிள் கீழே சரிந்து விழுந்தது. இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.

    பலி

    தகவல் அறிந்து வந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அவரை நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வியாபாரியை கத்தியால் குத்திய அண்ணன்- தம்பி கைது செய்யப்பட்டனர்.
    • ரூ.10ஆயிரம் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளை விற்றுள்ளார்

    மதுரை

    ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்தவர் விமல் ஆனந்த் (வயது 30). இவர் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் சோழவந்தானை சேர்ந்த நவீன் ரூ.10ஆயிரத்துக்கு மோட்டார் சைக்கிளை விற்றார்.

    இந்தநிலையில் அச்ச ம்பத்து பாக்கியலட்சுமி நகரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன்கள் ஜெயபால்(22), கோபால் (26) ஆகியோர் விமல் ஆனந்தை தேடி வந்தனர்.

    அவர்கள், சோழவந்தான் நவீன் விற்ற மோட்டார் சைக்கிள் எங்களுக்கு சொந்தமானது என்றுகூறி அதை தந்துவிடுமாறு கேட்டனர். அதற்கு விமல் ஆனந்த், "என்னிடம் அவர் ரூ.10ஆயிரம் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளை விற்றுள்ளார். அந்த பணத்தைப் பெற்றுத்தந்தால் மோட்டார் சைக்கிளை தருவதாக கூறினார்.

    இதனை தொடர்ந்து அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரம் அடைந்த 2 பேரும் விமல் ஆனந்தை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன்-தம்பி ஜெயபால்,கோபால் ஆகியோரை கைது செய்தனர்.

    நிபா வைரஸ் பீதியால் ஊத்துக்கோட்டை மாம்பழ மார்க்கெட்டு வியாபாரம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. மாம்பழம் வாங்க வியாபாரிகள் தயங்குகின்றனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னேரி, நரசாரெட்டி கண்டிகை, புதுகுப்பம், ஆம்பாக்கம், பேரடம், மதனம்பேடு, என்.எம். கண்டிகை, தாராட்சி, நெல்வாய், பாலவாக்கம், கரடிபுத்தூர், செங்கரை, தேர்வாயகண்டிகை, கண்ணன்கோட்டை.

    பூண்டி, சீதஞ்சேரி, அம்மம் பாக்கம், காரணி, சுப்பாநாயுடு கண்டிகை, நந்தனம், கொடியமேபேடு, படயகொடியமேபேடு, வெள்ளாத்துக்கோட்டை, நம்பாக்கம், அரியத்தூர், சென்றான்பாளையம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மாந்தோட்டங்கள் உள்ளன.

    இங்கு பங்கினபள்ளி, ருமானி, ஜவாரி, சில்பசந்த், மல்கோவா, ஹாபிஸ், செந்துரை பழரகங்கள் பயிரிடப்படுகின்றன. இந்த மாம்பழங்களுக்கு கடும் கிராக்கி உண்டு.

    தஷ்போது சீசனையொட்டி ஊத்துக்கோட்டை மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அதிக அளவில் மாம்பழங்கள் வந்து குவிந்து வருகின்றன.

    இங்கு திருவள்ளூர், பூந்தமல்லி, போரூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், தாம்பரம், சென்னை போன்ற வெகு தூரத்தில் இருந்து வரும் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் மாம்பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நிபா வைரஸ் பழங்களால் பரவுகிறது என்ற பீதியால் பெரும்பாலான பொதுமக்கள் மாம்பழங்களை சாப்பிட தயங்குகின்றனர்.

    இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஊத்துக்கோட்டை மாம்பழ மார்க்கெட்டு தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் விலையும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது

    பங்கனபல்லி கிலோ ரூ. 20-க்கு விற்கப்படுறது. அதேபோல் ஜவாரி கிலோ ரூ. 25, ருமானி ரூ. 8, செந்துரை ரூ. 8, நாட்டு ரகம் வெறும் ரூ. 5-க்கு விற்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு பங்கனபல்லி ரூ. 40, ஜவாரி ரூ. 50, ருமானி ரூ. 25, செந்துரா ரூ. 30 நாட்டு ரகம் ரூ.20 விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    நிபா வைரஸ் பீதி காரணமாக பொது மக்களிடத்தில் மாம்பழம் வாங்கும் ஆர்வம் குறைந்துள்ளதாக புதுகுப்பத்தை சேர்ந்த மாரி என்ற வியாபாரி தெரிவித்தார்.

    வியாபாரம் இல்லாததால் ஊத்துக்கோட்டை மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வந்த மாம்பழங்கள் அழுகி வருகின்றன. விவசாயிகள் லாரி மற்றும் டிராக்டர்களில் கொண்டு சென்று கொட்டி அழித்து வருகின்றனர். #tamilnews
    ×