என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி பலி
  X

  களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பலியான வியாபாரி மாவடியில் சுவீட் கடை வைத்து நடத்தி வந்தார்.
  • மோட்டார் சைக்கிளில் இருந்த பொருள் கீழே விழுந்ததுள்ளது. அதை எடுக்க முயன்ற போது கீழே விழுந்துள்ளார்.

  களக்காடு:

  களக்காடு அருகே உள்ள வடக்கு சாலைப்புதூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 55). இவருக்கு சுகந்தி என்ற மனைவியும், 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.

  வியாபாரி

  இவர் மாவடியில் சுவீட் கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 11-ந்தேதி நடராஜன் களக்காட்டிற்கு வந்து கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு மாவடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

  சாலைப்புதூர் அருகே உள்ள பாலத்தில் சென்ற போது, மோட்டார் சைக்கிளில் இருந்த பொருள் கீழே விழுந்தது. இதை எடுக்க முயற்சி செய்த போது, மோட்டார் சைக்கிள் கீழே சரிந்து விழுந்தது. இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.

  பலி

  தகவல் அறிந்து வந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அவரை நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

  இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×