search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "toilet"

    • பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. வரை எந்தவித பொது சுகாதார கழிவறையும் இல்லை.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளுக்கு திருமருகல் தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது.

    இங்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,வட்டார வேளாண்மை அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம், தபால் நிலையம், வங்கி, கடைத்தெரு, இரத்தினகிரீஸ்வரர் கோவில் என நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் திருமருகல் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் சுற்றளவில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக எந்த வித பொது சுகாதார கழிவறையும் இல்லை.

    இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

    மேலும் சாலை மற்றும் பொது இடங்களில் சிறுநீர் உள்ளிட்ட இயற்கை உபாதைகளை கழிப்பதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன்படுத்த ஏதுவாக பொது சுகாதார கழிவறை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரியலூர் பஸ் நிலையத்தில் தற்காலிக கழிவறை ஏற்படுத்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அரியலூர் பழைய பஸ் நிலையத்தில் தற்போது கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    அரியலூர்:

    அரியலூர் பழைய பஸ் நிலையத்தில் தற்போது கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அண்ணா சிலை அருகே பயணிகள் காத்திருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பஸ்களில் சென்று வருகிறார்கள். இந்த நிலையில் இப்பகுதியில் கழிப்பிட வசதி இல்லாததால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் தற்காலிக கழிப்பறை ஏற்படுத்தி பயணிகளுக்கு உதவ வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    • பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடம் இல்லாததால் கழிவறையில் நின்று பயணம் செய்ய அனுமதிக்கின்றனர்.
    • புதுச்சேரியில் இருந்து தாம்பரம் வரை இந்த அவலநிலை நீடிக்கிறது.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு நேரடி ரெயில் சேவை காலை மற்றும் மாலையில் உள்ளது.

    முன்பதிவு இல்லாத இந்த ரெயிலில் சாதாரண டிக்கெட் பெற்று பயணிகள் எளிதில் பயணம் செய்ய முடியும் ரெயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வந்தால் இருக்கை கிடைத்துவிடும்.

    ஆனால் புறப்படும் நிலையத்தை தவிர இடையில் உள்ள நிலையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏறுவதால் இருக்கைகள் மட்டுமின்றி உடமைகள் வைக்கக் கூடிய பகுதி, நடைபாதையில் எல்லாம் மக்கள் அமர்ந்து பயணம் செய்கின்றனர்.

    குறிப்பாக புதுச்சேரியில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு காலை 9 மணிக்கு வந்து சேரும் பாசஞ்சர் ரெயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது.

    அந்த ரெயில் விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் போன்ற நிலையங்கள் தவிர சிறிய நிலையங்களிலும் நின்று செல்வதால் வழி நெடுக மக்கள் ஏறுகிறார்கள். இதனால் படிக்கட்டில் நின்று பயணம் செய்கின்ற நிலை காணப்படுகிறது.

    பெண்கள், வயதானவர்கள் ரெயில் பெட்டியில் இடம் இல்லாததால் வழியில் அமர்ந்து பயணிக்கின்றனர். சிலர் கழிவறையில் நின்று பயணம் செய்கின்றனர். பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடம் இல்லாததால் கழிவறையில் நின்று பயணம் செய்ய அனுமதிக்கின்றனர். கழிவறையில் நின்றால் யாருக்கும் இடையூறாக இருக்காது எனக் கருதி அங்கே விட்டு விடுகின்றனர்.

    பாதுகாப்பு இல்லாத சுகாதாரமில்லாத அந்த இடத்தில் சிறுவர்கள் மட்டுமின்றி பெண்களும் நிற்கின்றனர். இதனால் அவசரமாக கழிவறையை பயன்படுத்த நினைப்பவர்கள் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. புதுச்சேரியில் இருந்து தாம்பரம் வரை இந்த அவலநிலை நீடிக்கிறது.

    எனவே புதுச்சேரி - சென்னை இடையே ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

    • தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் 492 இடங்களில் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிப்பறைகள் கட்ட மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தால் சாத்தியக்கூறுகள் ஆராயப் பட்டு கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 954 பொது கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகளை பொது மக்கள் கட்டணமில்லாமல் இலவசமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

    பொது மக்களுக்கு நல்ல சுகாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவும், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பதற்காகவும் சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரிப்பது, புதிய கழிப்பறைகளை கட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் 492 இடங்களில் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 366 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 100 கழிப்பறைகளை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 26 கழிப்பறைகளை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் 2023-24ம் ஆண்டில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 352 இடங் களில் 1046 இருக்கைகளுடன் 215 புதிய கழிப்பறைகளும், 265 புதிய சிறுநீர் கழிப்பறைகளும் கட்டப்பட உள்ளன. பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிப்பறைகள் கட்ட மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தால் சாத்தியக்கூறுகள் ஆராயப் பட்டு கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    • ஊராட்சி மன்றம் சார்பாக நால்ரோடு பஸ் நிறுத்தம் அருகில் நவீன கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.
    • மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு சட்ட மன்ற தொகுதி பெருமா நல்லூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றம் சார்பாக நால்ரோடு பஸ் நிறுத்தம் அருகில் ரூ.9.25 லட்சம் மதிப்பில் நவீன கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டு ள்ளது. அதனை இன்று காலை திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டி ற்கு அர்ப்ப ணித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் வேல்குமார், எம்.சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தாமணி வேலுச்சாமி, பெருமா நல்லூர் கூட்டுறவு கடன் சொசைட்டி தலைவர் பொன்னுலிங்கம், கணக்க ம்பாளையம் கூட்டுறவு சொசைட்டி தலைவர் மேக்னம் பழனி சாமி, ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகராஜ், ஒன்றிய கழக பொருளாளர் சிவசாமி, பாசறை செயலாளர் சந்திரசேகர், முன்னாள் சேர்மன் தங்கராஜ், முன்னாள் ஊராட்சி செயலாளர் ராக்கியண்ணன், பெருமா நல்லூர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அய்யாசாமி, மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 20 நாட்களுக்கு மேலாக பூட்டி கிடக்கும் கட்டணக் கழிப்பறையை திறக்காததை கண்டித்தும், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மார்க்கெட் வளாகத்தில் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்தும்ஆர்ப்பாட்டம் நடந்தது,
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில், தினசரி காய்கறி மார்க்கெட் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    விருத்தாசலம் காட்டுக்கூடலூர் ரோட்டில் அமைந்துள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் 20 நாட்களுக்கு மேலாக பூட்டி கிடக்கும் கட்டணக் கழிப்பறையை திறக்காததை கண்டித்தும், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மார்க்கெட் வளாகத்தில் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்தும், மார்க்கெட் அருகில் சாலை விரிவாக்கத்தின் போது தோண்டப்பட்டு இடத்தில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாயை சீரமைக்காததை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில், தினசரி காய்கறி மார்க்கெட் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • துர்நாற்றம் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தபடியே நடந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.
    • ஒருபுறமிருக்க நடை பாதை உடைந்தும் காணப்படுகிறது.

    சென்னை:

    வடசென்னையின் முக்கிய பகுதியாக திகழ்வது பேசின் பாலம்.

    வடசென்னை பகுதி வாசிகள் மட்டுமின்றி, மாதவரம், புழல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருபவர்களும் இந்த பாலத்தை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

    வால்டாக்ஸ் ரோடு மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு செல்பவர்களும் பெரியமேடு, வேப்பேரி பகுதிக்கு வருபவர்களும் இந்த வழியாகவே வருகிறார்கள். பேசின் பாலம் அருகில் உள்ள நடைபாதை வழியாக சென்று அருகில் உள்ள பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்துக்கு பயணிகள் சென்று வருகிறார்கள்.

    இந்நிலையில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் நடை பாதையை திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

    அவசரத்துக்கு சாலையோரமாக வண்டியை நிறுத்தி விட்டு சிறுநீர் கழித்துவிட்டு செல்வதை பெரும்பாலானோர் வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.

    இதனால் நடைபாதையில் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. இதனை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சிறுநீர் கழிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்த போதிலும் சிறுநீர் கழிப்பவர்களை மட்டும் கட்டுப்படுத்துவது என்பது சவாலாகவே உள்ளது.

    இது தொடர்பாக பேசின் பால பகுதியை அதிகமாக பயன்படுத்தும் பொதுமக்கள் சிலர் கூறும்போது, நடை பாதையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க தடுப்பு வேலிகள் போன்று அமைத்தால் அது பலன் அளிக்கும்.

    அதே நேரத்தில் கழிவறை கட்டி கண்காணித்தாலும் சிறுநீர் கழிப்பதை தடுக்க முடியும் என்றனர். சிறுநீர் கழிப்பதால் வீசும் துர்நாற்றம் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தபடியே நடந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.

    இது ஒருபுறமிருக்க நடை பாதை உடைந்தும் காணப்படுகிறது. இதனை சரி செய்து மக்கள் சிரமமின்றி நடைபாதையில் நடந்து செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிவகாசியில் அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் ஆண் சிசு உடலை வீசியது யார்? என சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்கிறனர்.
    • தலைமை டாக்டர் அய்யனாரிடம் தகவல் தெரிவித்தார்.

    சிவகாசி

    சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்ற னர். மகப்பேறு சிகிச்சை பிரிவு தனியாக இயங்கி வருகிறது. நேற்று மதியம் மகப்பேறு சிகிச்சை பிரிவில் உள்ள ஒரு கழிவறையை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர் சென்றார்.

    அப்போது 250 கிராம் எடை உள்ள குறைமாத ஆண் சிசு உடல் கிடந்தது. இதைக்கண்ட தூய்மை பணியாளர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சம்பந்தப்பட்ட பிரிவின் தலைமை டாக்டர் அய்யனாரிடம் தகவல் தெரிவித்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிசு உடலை மீட்டு அதனை வீசி சென்ற பெண் யார்? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுநீர் கழிப்பதற்காக நீண்ட வரிசையில் நின்று செல்ல வேண்டியுள்ளது.
    • ஒரு கழிவறையை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி

    புதுச்சேரி மாநிலத்தின் நெற்களஞ்சியமாகவும், 2-வது பெரிய நகரமாகவும் பாகூர் விளங்குகிறது. பாகூரின் முக்கிய பகுதியான மேரி வீதியில் தாலுகா, கொம்யூன், வங்கி, கருவூலம், பதிவு என பல முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதே பகுதியில் செயல்படும் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி பல ஆண்டுகளாக போதிய இடவசதியின்றி குறுகிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சுமார் 100 குழந்தைகள் படித்து வருகின்றனர். போதிய இடவசதி இல்லாததால் பள்ளியின் நுழைவாயில் பகுதியிலேயே 2 சிறிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஒரு கழிவறையை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் பள்ளியின் இடைவேளை நேரத்தில் மாணவிகள் சிறுநீர் கழிக்கவும், தண்ணீர் குடிக்கசெய்வதும் வழக்கம். ஆனால் இப்பள்ளியில் மாணவிகள் சிறுநீர் கழிப்பதற்காக நீண்ட வரிசையில் நின்று செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. இதனால் மாணவிகள் வெகுநேரம் காத்திருந்து சிறுநீர் கழிக்க வேண்டியது உள்ளது.

    ஒரு சிறிய கழிவறையில் ஒரேநேரத்தில் 5 மாணவிகள் சென்று வருவதால் சுகாதாரம் என்பது அங்கு கேள்விக்குறியாக உள்ளது. இந்தநிலை தொடர்ந்து நீடிப்பதால் மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பு ஏற்படலாம் என்று பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.

    அங்குள்ள அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியிலும் இதேநிலைதான் இருப்பதாக பெற்றோர்கள் குமுறுகின்றனர். எனவே கல்வித்துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி கூடுதல் கழிவறை கட்டித் தருவதுடன் மாற்று இடத்தில் அடிப்படை வசதிகளுடன் பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பணியை ஆய்வு செய்து விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
    • நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் குடியிருப்பு அருகே ரூ. 32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பொது கழிவறை கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அருண்ராய் மற்றும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.

    மேலும், நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் பார்வையிட்டனர்.

    ஆய்வின் போது நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம், ஓவர்சீயர் குமரன், நகர வடிவமைப்பு மேற்பார்வையாளர் அருள் முருகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.

    • அபிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை, கழிவறை வசதி இல்லாததால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    • மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிவறைகள், வகுப்பறை கட்டிடங்கள் கட்ட அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும் என்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தை சுற்றிலும் அதிக கிராமங்கள் உள்ள பகுதியாகும். இங்கு விவசாய கூலி வேலை செய்து பிழைத்து வரும் குழந்தைகளின் நலன்கருதி 1905-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. அபிராமம் பகுதியில் தனியார் பள்ளிகள் இருந்தாலும், அரசுப்பள்ளியை நம்பியே மாணவர்கள் உள்ளனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அபிராமம் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி என்பதால் ஏழை, எளிய விவசாயிகளின் பிள்ளைகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளில் படித்து வருகின்றனர். இங்கு போதிய வகுப்பறை கட்டிட வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர்.

    அதேபோல் கழிவறை வசதியும் இல்லாததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இடைவேளை நேரத்தில் அனைத்து மாணவ- மாணவிகளும் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை உள்ளது.

    மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிவறைகள், வகுப்பறை கட்டிடங்கள் கட்ட அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும் என்றனர்.

    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் பூங்கொடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உட்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், குப்பைமேடு பகுதியில் சுகாதார வளாகத்துடன் கூடிய சமுதாயக்கூடம், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நகரச் செயலாளர் சங்கர் தலைமையில் ஒன்றிய செயலாளர் முரளிதரன், மாவட்ட குழு உறுப்பினர் காதர் உசேன் முன்னிலையிலும் பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு, சமையல் பாத்திரங்களை கொண்டு வந்து சமைத்தவாறு, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் பூங்கொடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, இன்ஸ்பெக்டர் கலைவாணி போராட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உட்பட 43 பேரை கைது செய்தனர்.

    ×