search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் அவதி"

    • அவனியாபுரம்-பெருங்குடி 4 வழிச் சாலை இறுதிக்கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
    • அந்த சாலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுரை

    மதுரையின் முக்கிய மற்றும் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளில் ஒன்றாக அவனியாபுரம் விமான நிலைய சாலை மாறியிருக்கிறது. மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு செல்வதற்கு ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், வி.வி.ஐ.பிக்கள், வி.ஐ.பி.க்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், வர்த்தக பிரதிநிதிகள் அனைவரும் அவனியாபுரம் விமான நிலைய சாலை வழியாகவே செல்கின்றனர். மேலும் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் முக்கிய நகரங்களுக்கு செல்லும் பிரமுகர்களும் இந்த சாலை வழியாகவே விமான நிலையம் செல்ல வேண்டும். துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று வருவோர் அதிகரித்துள்ளனர். அதனால் இந்த சாலையின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

    மேலும் தெற்கு வாசலில் இருந்து விமான நிலையம் வரை செல்லும் சாலை மிக குறுகலாக உள்ளது. இந்த சாலையில் வில்லாபுரம் முதல் அவனியாபுரம் பெரியார் சிலை வரை 10-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் இருக்கின்றன. பிரபலமான தியேட்டர், வணிக வளாகங்கள் இருப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திருமண மண்டபங்களில் பார்க்கிங் வசதி இல்லாமல் இருப்பதினால் முகூர்த்த நாட்களில் நிகழ்ச்சிக்கு வரும் நபர்கள் முக்கிய பிரமுகர்கள் தங்களது கார் மற்றும் இருசக்கர வாகனங்களை சாலையிலே நிறுத்தி விட்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் விமான நிலையத்திற்கு சரியான நேரத்திற்கு பயணிகள் சென்று சேர்வதில் சிரமம் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் பெருங்குடியில் இருந்து விமான நிலையம் வரை உள்ள சாலையை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது. தற்போது பெருங்குடியில் இருந்து அவனியாபுரம் மருதுபாண்டியர் சிலை வரை சாலை விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

    அவனியாபுரம் - பெருங்குடி 2.5 கி.மீ. தூர சாலையை நான்கு வழி சாலையாக மேம்படுத்தும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து விட்டது. இந்த சாலையின் நடுவே சில மின் கம்பங்கள் உள்ளன. அவற்றை அகற்றி சாலையோரத்தில் அமைக்க வேண்டியுள்ளது. இந்தப் பணியை தமிழக மின் வாரியம் மேற்கொள்ள வேண்டும் என்பதால் அவர்களிடம் மதிப்பீடு கோரப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மின் வாரியம் மதிப்பீட்டை இறுதி செய்து வழங்காமல் உள்ளது. அதனால் இறுதி கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வேலைப்பளு காரணமாக மதிப்பீட்டை இறுதி செய்து அளிக்க முடியாமல் உள்ளதாக மின் வாரியத்தினர் கூறுகின்றனர். மின் வாரியத்திடமிருந்து மதிப்பீடு கிடைத்தவுடன் இந்த சாலைப் பணிகளை துரிதப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவர நெடுஞ்சாலை துறை தயாராக உள்ளது.

    17.5 மீட்டர் அகலத்தில் நடுவே 2.5 மீ மீடியன் உடன் அமைக்கப்படும் இந்த சாலைப் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தால் விமான நிலையம் செல்வோர் மட்டுமின்றி தூத்துக்குடி நான்கு வழிச் சாலைக்கு செல்லும் பயணிகளும், அந்த சாலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிகளுக்கும் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டியுள்ளது.
    • சாலை வழியாக செல்லும் போது வாகனங்கள் பழுதடைந்து இடையூறுகளை சந்திக்கிறார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அருகே தில்லைவிளாகம்- அரமங்காடு சாலை உள்ளது. இங்கு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது.

    இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் தில்லைவிளாகம், வடகாடு முத்துப்பேட்டை போன்ற பகுதிகளுக்கு செல்ல இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும். மேலும் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை திருவாரூர் போன்ற பகுதிகளுக்கும் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டியுள்ளது.

    தற்போது தில்லைவிளாகம்- அரமங்காடு சாலை சேதமடைந்து குண்டும்- குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் மக்கள் மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள்.

    குறிப்பாக பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் இந்த சாலை வழியாக செல்லும் போது வாகனங்கள் பழுதடைந்து இடையூறுகளை சந்திக்கிறார்கள். எனவே தில்லைவிளாகம்- அரமங்காடு சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சில நாட்களாக திண்டு க்கல்-நிலக்கோட்டைக்கு போதிய அளவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
    • ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் மாணவ-மாணவிகள் ஆட்டோவில் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டையை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து திண்டுக்கல், வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஏராளமான மாணவ-மாணவிகள் பயணம் செய்து வருகின்ற னர்.

    மேலும் அலுவலகம் செல்பவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் அரசு பஸ்களை நம்பி உள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக திண்டு க்கல்-நிலக்கோட்டைக்கு போதிய அளவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. மேலும் வத்தலக்குண்டு பகுதிக்கும் குறைவான அரசு பஸ் சேவையே உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் மாணவ-மாணவிகள் ஆட்டோவில் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏழை, எளிய மாணவர்கள் ஆட்டோவிற்கு பணம் இல்லாமல் நண்பர்களிடம் வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை போக்கு வரத்து அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. ஆனால் டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறையால் அரசு பஸ் சேவை பாதிக்கப்பட்ட தாக அவர்கள் தெரி வித்தனர்.

    தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் காலை நேரத்தில் அரசு பஸ்களை நம்ப முடியவில்லை. இதனால் தனியார் பஸ் மற்றும் ஆட்டோக்களில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே மாணவ-மாணவிகளின் எதிர்காலம் கருதி போதிய அளவு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் வலியுறுத்தல்
    • படிப்பு வீணாகி போவதாகவும் குற்றச்சாட்டு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில்

    இருந்து தினந்தோறும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    மாலை நேரம் கல்லூரியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல ஆரணி பழைய பஸ் நிலையத்தில் போதிய பஸ் வசதி வசதிகள் இல்லாத காரணத்தினால் தினந்தோறும் 2 பாடபிரிவுகள் பின்னரே கல்லூரிக்கு செல்ல நேரிடுகின்றன.

    இதனால் கல்லூரி படிப்பு வீணாகி போவதாகவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையீட்டு மதிய நேரத்தில் செய்யாறு பகுதிக்கு அதிகளவில் சிறப்பு பஸ்கள் இயக்கி மாணவர்களின் படிப்பை தொடர வழிவகை செய்ய வேண்டும என்று கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பள்ளி கட்டிடம் பழுதடைந்து பாழடைந்த நிலையில் இரு ப்பதால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது.
    • சமுதாய கூடத்தில் விசேஷ நாட்களில் விசேஷங்கள் நடைபெறும் பொழுது பள்ளி மாணவர்களும் விசேஷ வீட்டாரும் ஒரே இடத்தில் அமரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி ஒன்றியம் சண்முக சுந்தரபுரம் ஊராட்சியில் கரிசல்பட்டி கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நூற்று க்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி கட்டிடம் பழுதடைந்து பாழடைந்த நிலையில் இரு ப்பதால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது.

    இதனால் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சமுதாய கூடத்தில் விசேஷ நாட்களில் விசேஷங்கள் நடைபெறும் பொழுது பள்ளி மாணவர்களும் விசேஷ வீட்டாரும் ஒரே இடத்தில் அமரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    இது சம்பந்தமாக அரசு உயர் அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கரிசல் பட்டி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளி கட்டிடத்தை உடனடியாக பராமரிப்பு செய்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்து சமுதாய கூடத்தில் இயங்கும் பள்ளிக்கூடத்தை சொந்த கட்டிடத்திற்கு உடனடியாக மாற்றித்தரும்படி மாணவ ர்களின் பெற்றோர்களும் கரிசல்பட்டி பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • படிக்கும் சிறுவர், சிறுமியரை ஈடுபடுத்திய சம்பவம், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    • இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்களை ஈடுபடுத்தும் பள்ளிகளின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன எலசகிரி பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி ஆங்கில வழி தொடக்கப்பள்ளியில், குப்பைகளை அகற்றுவதற்கும் தூய்மைப்படுத்துவதற்கும் வகுப்பு நேரங்களில் அங்கு படிக்கும் சிறுவர், சிறுமியரை ஈடுபடுத்திய சம்பவம், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் வகுப்பு நேரங்களில், எந்த காரணத்தைக் கொண்டும் பிற பணிகளுக்கு அவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்பது விதிமுறை.

    அவற்றையும் மீறி சில பள்ளிகளில் இது போன்ற செயல்கள் நடைபெற்று வருகிறது. இதனை உடனே தடுக்க வேண்டும் என பொதுமக்களும், பெற்றோரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    எனவே இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்களை ஈடுபடுத்தும் பள்ளிகளின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

    • மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு எல்லாம் சமைக்க அருகே கிராம சுகாதார மைய பகுதில் உள்ள அறையில் சமையல் செய்து மாணவர் களுக்கு வழங்கி வருகின்றனர்.
    • பள்ளி வகுப்பு அறைகட்டிடம், சமையல் கூடம், கழிப்பிடம் கட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மருதாண்டப்பள்ளி ஊராட்ச்சியில் மருதாண்டப்பள்ளியில் அரசு ஆரம்பள்ளி இயங்கி வருகிறது. முதலில் தெலுங்கு பள்ளியாக இருந்த இந்தப் பள்ளி தமிழ் பள்ளியாக மாறி பல ஆண்டுகளாகிறது.

    இந்தப் பள்ளி மருதாண்டப்பள்ளி, வரதாபுரம், டேம்கொத்தூர், ஒட்டர் பாளையம் ஆசிய பகுதியில் இருந்து 100-க்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.

    பள்ளியில் மூன்று அரசு சார்ந்த ஆசிரியரும், 2 ஆசிரியர் தனியார் மூலம் அமர்த்தபட்ட ஆசிரியர்கள் மொத்தம் 5 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி அளித்து வருகின்றனர்.

    பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிகம் ஆனால் போதுமான வகுப்பறை இல்லை. பள்ளியில் இரண்டு கட்டிடம் அதில் ஒரு கட்டிடத்தில் 2 வகுப்பறை உள்ளது.

    மற்றொரு கட்டிடத்தில் 2 வகுப்பறை, அதில் ஒரு கட்டிடம் பழுதானதால் அதை சில வருடம் முன்பு இடித்து விட்டு இன்னும் புதிய வகுப்பறை இல்லாததால் ஒரே கட்டிடத்தில் 2 வகுப்பறையில் அதே வகுப்பறை உள்ளேயும் வராண்டாவில் மாணவர்களுக்கு கல்வி அளித்து வருகின்றனர்.

    பள்ளி மாணவர்களுக்கு கழிப்பறை பழுதானதால் அதை இடித்து தள்ளினர். மாணவர்கள் பள்ளி அருகே வெளி பகுதியில் சிறுநீர் கழிக்க செல்கின்றனர்.

    சமையல் அறையும் பழுது என்பதால் அதையும் இடித்து விட்டனர். தற்போது மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு எல்லாம் சமைக்க அருகே கிராம சுகாதார மைய பகுதில் உள்ள அறையில் சமையல் செய்து மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    அரசு அதிகாரிகளுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் எஸ்.எம்.சி. தலைவி நாகரத்தினா சித்தராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சுதா வேணுவிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

    இந்தப் பள்ளிக்கு போர்கால அடிப்படையில் பள்ளி வகுப்பு அறைகட்டிடம், சமையல் கூடம், கழிப்பிடம் கட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    • இந்த சாலையில் இரவு நேரங்களில் பயணிப்பது பெரும் சவாலாக உள்ளது. சாலையில் இருபுறங்களிலும் மின்விளக்குகள் இல்லை.
    • பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி இந்த சாலையில் விபத்துக்கள் நடக்கிறது.

    கிருஷ்ணாபுரம்,

    தருமபுரி மாவட்டம் அருகே கிருஷ்ணாபுரம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் வழியாக கம்பை நல்லூருக்கு தினந்தோறும் சுமார் 8 கிராமங்களை சேர்ந்த பள்ளி கல்லூரி, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் பயணம் செய்து வருகின்றனர்.

    இந்த சாலை அப்பகுதி மக்களின் முக்கிய சாலையாக திகழ்ந்து வருகிறது. கம்பைநல்லூருக்கு செல்ல வேண்டும் என்றால் சீக்கரம் சென்று விடலாம். அதனால் சாலையை மக்கள் அதிகம்பேர் பயணித்து வருகின்றனர்.

    இந்த சாலை தற்போது மிகவும் பழுதடைந்துள்ளது. அதனால் ஆங்காங்கே சிறிய, முதல் பெரிய அளவிலான பள்ளங்கள் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

    குண்டும் குழியுமான சாலையால் அவசர காலங்களில் மருத்துவ மனைக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் மிகவும் பாதிக்கபட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த சாலையில் இரவு நேரங்களில் பயணிப்பது பெரும் சவாலாக உள்ளது. சாலையில் இருபுறங்களிலும் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி இந்த சாலையில் விபத்துக்கள் நடக்கிறது.

    இது சம்மந்தமாக அப்பகுதி மக்கள் பலமுறை சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மலை கிராம மக்கள் பிரதான சாலைக்கு செல்ல மலைப்பகுதி வழியாக மண் சாலையில் பல ஆண்டுகளாக சென்று வந்தனர்.
    • கிராம மக்கள் சென்று வந்த பாதைக்கு நடுவில் கால்வாய் ஆழப்படுத்தப்பட்டு கிராம மக்கள் சென்று வந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    திருத்தணி:

    பள்ளிப்பட்டு ஒன்றியம் கொல்லாலகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் காட்டுக்கொல்லி காலனியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    மலை கிராம மக்கள் பிரதான சாலைக்கு செல்ல மலைப்பகுதி வழியாக மண் சாலையில் பல ஆண்டுகளாக சென்று வந்தனர். இக்கிராமத்தில் பள்ளி, அங்கன்வாடி மையம் இல்லாததால், 3 கி.மீ. தூரத்தில் உள்ள கொல்லாலகுப்பம், கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில், தேசிய நெடுஞ்சாலை சார்பில் தச்சூர் முதல் சித்தூர் வரை எட்டுவழி சாலைப் பணிகளுக்காக காட்டுக்கொல்லி கிராமத்திற்கு செல்லும் மலைப்பகுதியில் எட்டு வழிச்சாலை திட்ட அலுவலகம், தளவாடம் மற்றும் தொழிலாளர்கள் தங்கும் அறைகள், கட்டப்பட்டதால் மலை கிராமத்திற்கு பொதுமக்கள் சென்று வரும் சாலை அடைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கிராம மக்கள் சென்று வந்த பாதைக்கு நடுவில் கால்வாய் ஆழப்படுத்தப்பட்டு கிராம மக்கள் சென்று வந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் வேலைக்கு சென்று வரவும், மாணவர்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சாலையில்லாத காட்டுப்பகுதி வழியாக சென்றுவரும் நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள். இதேபோல் விவசாயிகள் சாகுபடி செய்த பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லவும், கர்ப்பிணிகள், நோயாளிகள் மருத்துவமனைக்கு சென்று வரவும் முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர்.

    இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • அபிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை, கழிவறை வசதி இல்லாததால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    • மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிவறைகள், வகுப்பறை கட்டிடங்கள் கட்ட அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும் என்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தை சுற்றிலும் அதிக கிராமங்கள் உள்ள பகுதியாகும். இங்கு விவசாய கூலி வேலை செய்து பிழைத்து வரும் குழந்தைகளின் நலன்கருதி 1905-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. அபிராமம் பகுதியில் தனியார் பள்ளிகள் இருந்தாலும், அரசுப்பள்ளியை நம்பியே மாணவர்கள் உள்ளனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அபிராமம் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி என்பதால் ஏழை, எளிய விவசாயிகளின் பிள்ளைகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளில் படித்து வருகின்றனர். இங்கு போதிய வகுப்பறை கட்டிட வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர்.

    அதேபோல் கழிவறை வசதியும் இல்லாததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இடைவேளை நேரத்தில் அனைத்து மாணவ- மாணவிகளும் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை உள்ளது.

    மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிவறைகள், வகுப்பறை கட்டிடங்கள் கட்ட அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும் என்றனர்.

    • கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
    • இந்த கனமழையால் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம் முற்றிலும் ஒழுகுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்டது தாழங்காடு கிராமம். இந்த பகுதியை சுற்றிலும் 5-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்குள்ள பெரும்பாலா னோர் விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள். இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தற்பொழுது 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 43 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் இந்த பள்ளியின் ஓடுகள் மற்றும் சுவர்கள் சேதம் அடைந்து விட்டது.  இது குறித்து அப்பகுதி ெபாதுமக்கள் கூறியதாவது:-

    பழுதான இந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர், மற்றும் அமைச்சர்கள் வரை கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது தொடர்ந்து மரக்காணம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம் முற்றிலும் ஒழுகுகிறது.  இதுபோல் மழை நீர் ஒழுகுவதால் பள்ளியில் அமர்ந்து மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதி மாணவர்களின் நலன் கருதி சிதலமடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குப்பை கழிவோடு மழைநீர் தேங்கி நிற்பதில் மாணவர்கள் நடந்து செல்கிறார்கள் .
    • உரிய தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி கோரிக்கை வைக்கின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கடந்த சிலநாட்க ளாக பலத்து மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதேபோல திருநாவ லூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கன மழை நீடித்து வரு கிறது. செங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் குப்பை கழிவோடு மழைநீர் தேங்கி நிற்பதில் மாணவர்கள் நடந்து செல்கிறார்கள் .

    அதனால் மாணவர்களுக்கு நோய் தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பச்சிளம் குழந்தை களை நோய் தொற்றில் இருந்து காப்பாற்ற காலம் கடத்தா மல் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அதி காரிகள் உடனடியாக தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி கோரிக்கை வைக்கின்றனர்.

    ×