என் மலர்
உள்ளூர் செய்திகள்

வகுப்பறை, கழிவறை வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி
- அபிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை, கழிவறை வசதி இல்லாததால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
- மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிவறைகள், வகுப்பறை கட்டிடங்கள் கட்ட அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும் என்றனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தை சுற்றிலும் அதிக கிராமங்கள் உள்ள பகுதியாகும். இங்கு விவசாய கூலி வேலை செய்து பிழைத்து வரும் குழந்தைகளின் நலன்கருதி 1905-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. அபிராமம் பகுதியில் தனியார் பள்ளிகள் இருந்தாலும், அரசுப்பள்ளியை நம்பியே மாணவர்கள் உள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அபிராமம் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி என்பதால் ஏழை, எளிய விவசாயிகளின் பிள்ளைகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளில் படித்து வருகின்றனர். இங்கு போதிய வகுப்பறை கட்டிட வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர்.
அதேபோல் கழிவறை வசதியும் இல்லாததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இடைவேளை நேரத்தில் அனைத்து மாணவ- மாணவிகளும் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை உள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிவறைகள், வகுப்பறை கட்டிடங்கள் கட்ட அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும் என்றனர்.






