search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "primary school"

    • பள்ளியில் வகுப்பறை மேற்கூரையில் உள்ள சிலாப்புகள் உடைந்து கம்பிகள் நீட்டிக்கொண்டு உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது.
    • பள்ளியின் மைதானத்திற்கு நடுவில் செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி ஒன்றியம் ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

    இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை சுமார் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். பெரும்பா லான குழந்தைகளின் பெற்றோர் காலையில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து பின்பு மாலையில் தாங்களே நேரடியாக வந்து அழைத்துச் செல்கின்றனர். பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் கூறியதாவது,

    பள்ளியில் வகுப்பறை மேற்கூரையில் உள்ள சிலாப்புகள் உடைந்து கம்பிகள் நீட்டிக்கொண்டு உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானா லும் இடிந்து விழுமோ என்ற அச்சம் உள்ளது. மேலும் பள்ளியில் உயர் மின் அழுத்த கம்பிகள் மைதானத்திற்கு நடுவே செல்கின்றன. இந்த கம்பிகள் அறுந்து கீேழ விழுந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்.

    குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே பள்ளி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும். இதுகுறித்து கடந்த 3 மாதத்திற்கு முன்பே மின்சார வாரியத்திற்கு மனு எழுதி பள்ளியின் மைதானத்திற்கு நடுவில் செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு க்கொண்டோம் ஆனால் இதுவரை மின்சார வாரியம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கல்வித்துறை அதிகாரிகள் தலையிட்டு உரிய தீர்வு காணவேண்டும் என்றனர்.

    • மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
    • தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணி நியமனத்தில் வயது தளர்வு அளிக்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் தொடக்கப்பள்ளி ஆசிரிய ருக்கான பணி நியமன அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் வயது வரம்பு, ஒதுக்கீட்டில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. 10 ஆண்டுக்கு பிறகு நிரப்பப்படும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணி நியமனத்தில் வயது தளர்வு அளிக்கவில்லை.

    இதனால் பலர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் 6-வது ஊதிய குழுவை பின்பற்றி பணிநியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.

    எனவே இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து வயது தளர்வு, சீனியாரிட்டி, 7-வது சம்பளக்குழு பரிந்து ரையின் படி புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வாடிப்பட்டி பேரூராட்சியில் 9 ஆரம்ப பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
    • தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 9 ஊராட்சி ஒன்றிய தொடக்க, ஆரம்ப பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்கவிழா வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி, துணைத்தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார். இதில் கவுன்சிலர் ஜெயகாந்தன், இளநிலை உதவியாளர்கள் முத்துப்பாண்டி, சுந்தர்ராஜன், வார்டு செயலா ளர்கள் ராம் மோகன், திரவியம், பன்னீர்செல்வம், மருதுபாண்டி, வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சுகாதார பணி மேற்பார்வையாளர் முத்தழகு நன்றி கூறினார். அதேபோல் தாதம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் பூமிநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் தலைமை ஆசிரியர் கிறிஸ்டி, ஆசிரியர்கள் மகேஸ்வரி, கலைச்பொன் கவிதா, சுய உதவிக்குழுவினர் விஜயலட்சுமி, லட்சுமி, கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெடிமோழியனூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • அரசு ஆரம்ப பள்ளி தொடங்கப்படும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கான அறிவிப்புகள் ஏதும் வரவில்லை.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் நெடி மோழியனூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள் இங்கிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரம் உள்ள நீலதொட்டி அரசு பள்ளிக்குச் சென்று பயின்று வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதுடன், கல்வி கற்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே, நெடுமொழியனூர் கிராமத்தில் அரசு பள்ளி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

    இந்நிலையில் இந்த கல்வியாண்டில் நெடிமோழியனூரில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்கப்படும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கான அறிவிப்புகள் ஏதும் வரவில்லை. இக்கிராம மாணவர்கள் மீண்டும் நீலதொட்டி அரசு பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல், நெடிமோழியனூரில் உள்ள குழந்தைகள் மையத்தில் எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வித் துறை அதிகாரிகள் வந்து நெடி மோழியனூர் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்க உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும். அதுவரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என்று பொதுமக்கள் கூறினர்.

    தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு பள்ளிகள் மூடப்படும் நிலையில், தங்கள் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்க வேண்டுமென கிராம மக்கள் போராட்டம் நடத்துவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வட்டாரகல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார்.
    • விடுப்பின்றி பள்ளிக்கு வந்தவர்கள், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள ஆனைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பட்ட மளிப்பு மற்றும் பரிச ளிப்பு விழா நடை பெற்றது. வட்டாரகல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கி னார். ஊராட்சி தலைவர் பஞ்ச வர்ணம், முன்னாள் ஊராட்சி தலைவர் கலீல் ரகுமான், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பேபி மாலதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்த னர். தலைமை ஆசிரி யர் மோதிலால் வரவேற்றார். ஆசிரியை ஜரினாபானு செயல் பாட்டு அறிக்கை வாசித்தார்.

    நிகழ்ச்சியின் போது 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. மேலும் விடுப்பின்றி பள்ளிக்கு வந்தவர்கள், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து யோகா, கலை, நாடகம் நடைபெற்றது. விழாவில் யோகா மாஸ்டர் விஷ்ணு யோகா பயிற்சி அளித்தி ருந்தார். ஆசிரிய பயிற்றுனர் சுந்தரேஸ்வரி, இல்லம் தேடிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சார்லஸ், தலைமை ஆசிரியைகள் இசபெல்லா, கலாராணி, முன்னாள் எஸ்.எம்.சி. தலைவர் முகம்மது உசேன் ராஜா, பள்ளி மேலா ண்மை குழு உறுப் பினர்கள், பெற்றோர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் துரைச்சி, அன்ன லட்சுமி, ஜெயக்குமார், இல்லம் தேடிக் கல்வி தன்னார் வலர்கள் சாந்தி, நபிசாள் பீவி, உமா மகேஸ்வரி ஆகியோர் செய்தி ருந்தனர்.

    • பரமன்குறிச்சி அருகே சீருடையார்புரம் யூனியன் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
    • விழாவில் கல்வியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஜலில் வழங்கினார்.

    உடன்குடி:

    பரமன்குறிச்சி அருகே சீருடையார்புரம் யூனியன் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. உடன்குடி யூனியன் துணைச் சேர்மன் மீராசிராசூதீன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ஜெயவதி ரத்னாவதி, பரமன்குறிச்சி ஊராட்சி தலைவர் இலங்காபதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சாந்தி, ஆசிரிய பயிற்றுனர் ஆதிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியை சுகந்தி ஜெஸிந்தா வரவேற்றார்.

    இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கல்வியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஜலில் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் வனஜா, குமாரசாமிபுரம் யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை டெல்வி ரெஜினாள், முந்திரி தோட்டம் அரசுப்பள்ளி உதவி ஆசிரியர் ஞானசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி ஆசிரியை சுந்தரி நன்றி கூறினார்.

    • விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சபரி கிரிநாத் வரவேற்று பேசினார்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா லட்சுமணன் பரிசுகளை வழங்கினார்.

    முக்கூடல்:

    முக்கூடலில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, பள்ளி மேலாண்மை குழு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சபரி கிரிநாத் வரவேற்று பேசினார். மேலாண்மை குழு தலைவர் புவனேஸ்வரி தலை மை தாங்கினார். முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம் முன்னி லை வகித்தார். தன்னார்வலர் ராஜேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார்.

    விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா லட்சுமணன் பரிசுகளை வழங் கினார். பேரூராட்சித்துணை தலைவர் லட்சுமணன், பாப்பாக்குடி வட்டார கல்வி அலுவலர் ஜோசப் கிரிகோரி, பொதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுடலைமணி, இடைகால் சாரதா பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி காந்தி, நடுக்கல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், முக்கூடல் சொக்கலால் சத்திரிய வித்யாசாலா பள்ளி ஆசிரியர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    • ராமநாதபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    • விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள திருப்பாலைக்குடி காந்திநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 87-வது ஆண்டு விழா கிராமத்தலைவர் தமிழ்கண்ணன் தலைமையில் நடந்தது.

    மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், வட்டார வள மைய அலுவலர் சுரேந்திரன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராஜூ வரவேற்றார். யூனியன் தலைவர் ராதிகாபிரபு, பேரூராட்சி தலைவர் மவுசூர்யா கேசர்ஹான், ரோட்டரி கிளப் மாவட்டத்தலைவர் பார்த்திபன், செயலாளர் கூரிதாஸ், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முத்துசாமி ஆகியோர் பேசினர்.

    விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.ஒன்றிய கவுன்சிலர் காளியம்மாள், கிராமச்செயலாளர் அதிரை மன்னன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தலைவர் சசி கனி,பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராணி, ஆலோசனைக்குழு தலைவர் சின்னராஜா, முன்னாள் மாணவர் சங்கம் பால்கனி, உதயவேல் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் அன்பின் அமலன் நன்றி கூறினார்.

    • இந்திரா நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் தமிழக அரசு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி செயல் திட்டத்தை வருகிற மே 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
    • அதனைமுன்னிட்டு இந்திரா நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள இடத்தை நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி மற்றும் கமிஷனர் (பொறுப்பு) அரிகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் ஆதிசங்கர விநாயகர் கோவில் தெருவில் அமைந்துள்ள இந்திரா நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் தமிழக அரசு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி செயல் திட்டத்தை வருகிற மே 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில் சங்கரன்கோவிலில் உள்ள 7 நகராட்சி பள்ளிகளுக்கு உணவு தயாரிக்க வேண்டிய சூழ்நிலையில் இந்திரா நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள இடத்தை சமையல் கூடமாக மாற்றுவதற்கு போதுமானதாக உள்ளதா என நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி மற்றும் கமிஷனர் (பொறுப்பு) அரிகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது இடங்களை போதுமானதாக இருக்குமா ,உணவு செய்து மற்ற நகராட்சி பள்ளிகளுக்கு கொண்டு செல்ல வாகனங்கள் செல்லும் பாதை சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது நகராட்சி கவுன்சிலர் ராஜேஸ்வரி கந்தன், இளைஞர் அணி சரவணன், அப்பகுதியைச் சேர்ந்த கந்தன், மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் ,

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க ப்பள்ளி ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , இடைநிலை ஆசிரியர்களு க்கான ஊதிய முரண்பாடு களை முற்றிலும் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் , மத்திய அரசு அறிவித்த அகவிலை ப்படியினை நிலுவையின்றி அறிவித்த தேதியிலிருந்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமை ப்பினர் உண்ணாவிரதப் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் திருப்பூர் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளிலி ருந்து ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷ ங்கள் எழுப்பி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    • ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக செயல்படும் 3 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அந்த பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும்.
    • சிறந்த பள்ளிகளுக்கான 2021 - 2022-ம் கல்வி ஆண்டிற்கான விருது மேலநீலிதநல்லூர் ஒன்றியம் பாண்டியாபுரம் ஆரம்ப பள்ளிக்கு வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தமிழக அரசின் தொடக்க கல்வித்துறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக செயல்படும் 3 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அந்த பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த பள்ளிகளுக்கான 2021 - 2022-ம் கல்வி ஆண்டிற்கான விருது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத்திற்கு உட்பட்ட மேலநீலிதநல்லூர் ஒன்றியம் பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிக்கு வழங்கப்பட்டது.

    விருதினை தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கல்வி ஆணையர் நந்தகுமார், சென்னை மேயர் பிரியா, இல்லம் தேடி கல்வி இயக்குனர் இளம்பகவத், ஆகியோரி டமிருந்து பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் மற்றும் மேல நீலிதநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் கவிதா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    தங்கள் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது குறித்து பாண்டியாபுரம் கிராம மக்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    • மதகடிப்பட்டு அருகே உள்ள கலிதீர்த்தாள் குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ-மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் பள்ளி மாணவிகள்-மாணவர்கள் தங்களின் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் முயற்சியோடு தங்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு அருகே உள்ள கலிதீர்த்தாள் குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ-மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஐந்தாம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் ராபர்ட் கென்னடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் நவமணி அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் ஆசிரியர் சசிரேகா தொகுப்புரை வழங்கினார். பி.எஸ். பாளையம் பாவேந்தர் பாரதிதாசன் மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் செல்வம் கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் பள்ளி மாணவிகள்-மாணவர்கள் தங்களின் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் முயற்சியோடு தங்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.

    இந்த கண்காட்சியை பள்ளி மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் பொதுமக்கள் மற்றும் மாற்றுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பாராட்டினர்.

    நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் சீனிவாசன், கலைவாணி, சுப்பிரமணியன், மாதவி, இந்திரா, பிரியதர்ஷினி, சுகந்தி, சவுமியா, சுகன்யா, அருணா, கலையரசி, கிருஷ்ணகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×