search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annual day"

    • முதல் நாளில் இந்து சமய வகுப்பு குழந்தைகளுக்கான வினாடி- வினா நிகழ்ச்சி நடந்தது.
    • இந்து சமய வகுப்பு ஆசிரியர் ஜெயராஜ், ஜோதிடர் வேலாயுதம் ஆகியோர் தெய்வீக பாடல்களை பாடி விளக்கம் அளித்தனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் ஸ்ரீ நடராஜ தேவார பக்த ஜனசபைக்கு பாத்தியப்பட்ட விநாயகர் கோவில் நந்தவனத்தில் தெய்வீக சத் சங்கம் மற்றும் இந்து சமய வகுப்பின் ஆண்டு விழா 2 நாட்கள் நடைபெற்றன.

    முதல் நாளில் இந்து சமய வகுப்பு குழந்தைகளுக்கான வினாடி- வினா நிகழ்ச்சி நடந்தது. இதனை பேராசிரியர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். மாலையில் சோமநாத சுவாமி கோவில் பக்தஜன சபை நிர்வாகி தெரிசை அய்யப்பன் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்து சமய வகுப்பு ஆசிரியர் ஜெயராஜ், ஜோதிடர் வேலாயுதம் ஆகியோர் தெய்வீக பாடல்களை பாடி விளக்கம் அளித்தனர்.

    இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நடராஜ தேவார பக்த ஜன சபையின் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றன. அப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் கோலாட்டம், ஒயிலாட்டம், மற்றும் சிலம்பாட்டம் நடைபெற்றன. போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகளான லிங்கதாஸ், கார்த்திகேயன், சுரேஷ், செல்வகுமார், திருமால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த சிவராமன், சோமு, பன்னீர்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 39-வது ஆண்டு விழா நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினருக்கு கல்லூரி துணைத்தலைவர் மற்றும் தாளாளர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி ேநஷனல் பொறியியல் கல்லூரியில் 39-வது ஆண்டு விழா நடைபெற்றது.

    கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி இயக்குநர் எஸ்.சண்முகவேல் முன்னிலை வகித்தார்.

    ஐதராபாத், எல்.டி.ஐ, மைண்ட்ரீ ஹெல்த்கேர் மற்றும் லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் குளோபல் டெலிவரி ஹெட்டும் கல்லூரியின் முன்னாள் மாணவருமான ஆர்.உமா சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அவர் தமது உரையில் கல்லூரியின் முதன்மையான நோக்கம் தரமான உயர்கல்வியை வழங்குவதாகும். கல்லூரியின் ஐ.இ.இ.இ. சேப்டர் வாயிலாக தொடங்கிய தனது வாழ்க்கை, தான் பயின்ற கல்லூரிக்கே சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதை பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.

    மேலும், அவர் தொழில்நுட்பம் தொடர்ந்து மாறி வருவதால், மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்த வேண்டும் என்றும், படைப்பாற்றல் மிக்கவர்களாக இருந்தால் பொருளாதார மந்த நிலையைக் கூட மிஞ்சலாம் என்றும் கூறினார். மேலும் மாணவர்கள் முதலில் தாம் மென்மேலும் வளர வேண்டும் என்ற நோக்கம் மேலோங்கி இருக்க வேண்டும் என்றும், இரண்டாவதாக, தொடர்ந்து அறிவை, திறமையை தேடுவதைத் தொடர வேண்டும், மூன்றாவதாக தரம் மற்றும் செயல்திறனுக்கான திறவுகோலான தொழில்நுட்பம் முறையைப் பேண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் "என்னால் முடிந்தால் உங்களாலும் முடியும்...." என்று கூறி தனது உரையை முடித்தார்.

    விழாவில், கல்லூரிப் பேராசிரியை எல்.கலைவாணி வரவேற்றார். சிறப்பு விருந்தினருக்கு கல்லூரி துணைத்தலைவர் மற்றும் தாளாளர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.

    கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல் 2022-23-ம் கல்வியாண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார்.

    சிறப்பு விருந்தினரை பேராசிரியர் எஸ். அய்யாராஜா அறிமுகம் செய்து வைத்தார். மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக அனைத்துத் துறை முதலாம், 2-ம், 3-ம் மற்றும் 4-ம் ஆண்டு பருவத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்குப் விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    2022-23-ம் கல்வியாண்டின் சிறந்த மாணவருக்கான விருதினை எந்திர பொறியியல் துறை மாணவர் டி.ஆனந்தவேல் மற்றும் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை மாணவர் எஸ்.பொன் சரவணக்குமார் ஆகியோருக்கு பகிர்ந்தும், சிறந்த மாணவிக்கான விருதினை தகவல் தொழில்நுட்பத் துறை மாணவி கே.சுக பிரியாவுக்கும் வழங்கப்பட்டது.

    மேலும், மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்க ளிடமிருந்து நிதி உதவி பெற்று ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வரும் கல்லூரி பேராசிரியர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

    விழாவில் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் எஸ்.மதிவண்ணன், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எ.ராஜேஸ்வரன் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் ஆர்.முத்துக்குமார் நன்றி கூறினார்.

    விழாவின் ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநர் மற்றும் முதல்வர் ஆகியோரின் ஆலோசனைப்படி பேராசிரியர் கே.மொஹைதீன் பிச்சையின் ஒருங்கிணைப்பில் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • பரமன்குறிச்சி அருகே சீருடையார்புரம் யூனியன் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
    • விழாவில் கல்வியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஜலில் வழங்கினார்.

    உடன்குடி:

    பரமன்குறிச்சி அருகே சீருடையார்புரம் யூனியன் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. உடன்குடி யூனியன் துணைச் சேர்மன் மீராசிராசூதீன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ஜெயவதி ரத்னாவதி, பரமன்குறிச்சி ஊராட்சி தலைவர் இலங்காபதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சாந்தி, ஆசிரிய பயிற்றுனர் ஆதிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியை சுகந்தி ஜெஸிந்தா வரவேற்றார்.

    இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கல்வியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஜலில் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் வனஜா, குமாரசாமிபுரம் யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை டெல்வி ரெஜினாள், முந்திரி தோட்டம் அரசுப்பள்ளி உதவி ஆசிரியர் ஞானசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி ஆசிரியை சுந்தரி நன்றி கூறினார்.

    • வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6-வது ஆண்டு விழா நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினர்களாக ராஜா எம்.எல்.ஏ., சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ராஜா எம்.எல்.ஏ., சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம், பள்ளி தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை கலெக்டர் துரை ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சதன் திருமலைக்குமார், ராஜா மற்றும் பாலத்தாய் தங்கப் பழம், ரம்யா முருகேசன் ஆகி யோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராஜகயல்விழி வரவேற்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், இக்காலத்தில் கல்வியின் முக்கியத்துவத்தையும் கிராமப்புறங்களில் பெண் கல்வியின் முக்கியத்து வத்தையும், தமிழக முதல்-அமைச்சரின் தன்னார்வலர்களை கொண்டு செயல்படும் இல்லம் தேடி கல்வியின் முக்கியத்துவத்தை பற்றியும் விளக்கி கூறினார்.

    இவ்விழாவில் பள்ளி யின் சார்பில் பல்வேறு சாதனைகளை புரிந்த மாணவ - மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் சான்றி தழ்கள் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினர். விழாவில் பள்ளி மாண வர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. விழாவில் பெற்றோர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சி களை கண்டு களித்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின், முதல்வர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய - ஆசிரியைகள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பொதுத்தேர்வில் நல்ல தேர்ச்சி பெற காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
    • பள்ளியின் மாணவர் மன்றத்துடன் இணைந்து பள்ளியின் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 12-ம் ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    பள்ளியின் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஷியாமளா ரமேஷ்பாபு மற்றும் கவிஞர் பா.விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மாணவர்களின் பல்சுவைக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், பொதுத்தேர்வில் நல்ல தேர்ச்சி பெற காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ஏ.வி.பி.கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன்அருள்ஜோதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏ.வி.பி.கல்வி குழுமங்களின் பொருளாளர் லதா கார்த்திகேயன் வரவேற்றார். பள்ளி முதல்வர் பிரமோதினி ஆண்டறிக்கை வாசித்தார். காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் சியாமளா ரமேஷ்பாபு குழந்தை வளர்ப்பு ஒரு கலை என்னும்தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

    மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் பா. விஜய் வருங்கால சமூகத்தின் சிற்பியாக இருக்கும் குழந்தை களைக்கொண்டாடுவோம் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். முடிவில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் மாணவர் மன்றத்துடன் இணைந்து பள்ளியின் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். 

    • ஏ.வி.பி. டிரஸ்ட் செயலாளர் பொன்னுத்தாய் அருள்ஜோதி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • விழாவில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் 33-ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ஏ.வி.பி. டிரஸ்ட் செயலாளர் பொன்னுத்தாய் அருள்ஜோதி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பொருளாளர் லதாகார்த்திகேயன் வரவேற்று பேசினார். தாளாளர் கார்த்திகேயன் தலைமை உரை ஆற்றினார்.

    பள்ளியின் முதல்வர் பிரியாராஜா 2022-23-ம் கல்வி ஆண்டிற்கானஆண்டுஅறிக்கையை வாசித்தார். 33-ம் ஆண்டு விழா சிறப்பு விருந்தினராக சுகிசிவம் கலந்து கொண்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களை உருவாக்குவது எப்படி? என்பதை தன் வாழ்வியல் அனுபவங்கள் வழி நின்று விளக்கி கூறினார்.

    மேலும் 2020 -21 ம்கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளாக மாணவ, மாணவிகளின் கண்கவர் நடனங்கள் பார்ப்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. முடிவில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார். விழாவில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  

    ×