search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindu Religious Class"

    • முதல் நாளில் இந்து சமய வகுப்பு குழந்தைகளுக்கான வினாடி- வினா நிகழ்ச்சி நடந்தது.
    • இந்து சமய வகுப்பு ஆசிரியர் ஜெயராஜ், ஜோதிடர் வேலாயுதம் ஆகியோர் தெய்வீக பாடல்களை பாடி விளக்கம் அளித்தனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் ஸ்ரீ நடராஜ தேவார பக்த ஜனசபைக்கு பாத்தியப்பட்ட விநாயகர் கோவில் நந்தவனத்தில் தெய்வீக சத் சங்கம் மற்றும் இந்து சமய வகுப்பின் ஆண்டு விழா 2 நாட்கள் நடைபெற்றன.

    முதல் நாளில் இந்து சமய வகுப்பு குழந்தைகளுக்கான வினாடி- வினா நிகழ்ச்சி நடந்தது. இதனை பேராசிரியர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். மாலையில் சோமநாத சுவாமி கோவில் பக்தஜன சபை நிர்வாகி தெரிசை அய்யப்பன் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்து சமய வகுப்பு ஆசிரியர் ஜெயராஜ், ஜோதிடர் வேலாயுதம் ஆகியோர் தெய்வீக பாடல்களை பாடி விளக்கம் அளித்தனர்.

    இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நடராஜ தேவார பக்த ஜன சபையின் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றன. அப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் கோலாட்டம், ஒயிலாட்டம், மற்றும் சிலம்பாட்டம் நடைபெற்றன. போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகளான லிங்கதாஸ், கார்த்திகேயன், சுரேஷ், செல்வகுமார், திருமால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த சிவராமன், சோமு, பன்னீர்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்து சமய பண்பாட்டு வகுப்புகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா பரமன்குறிச்சி அருகே குருநாதபுரத்தில் நடைபெற்றது.
    • சமய வகுப்புகளில் பங்கேற்ற சிறுவர்-சிறுமிகள், ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி, இந்து அன்னையர் முன்னணி சார்பில் 25 கிராமங்களில் 10 நாட்கள் நடைபெற்ற இந்து சமய பண்பாட்டு வகுப்புகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா பரமன்குறிச்சி அருகே குருநாதபுரத்தில் நடைபெற்றது. உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலாளரும், மாவட்ட இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளருமான கேசவன் தலைமை தாங்கினார். இந்து அன்னையர் முன்னணியின் மாவட்ட தலைவி சந்தனக்கனி, மாவட்ட செயலர் சொர்ணசுந்தரி, பரமன்குறிச்சி நகர செயலர் லட்சுமணன், பா.ஜனதா விவசாய அணி பொதுச்செயலர் வரதன், வார்டு உறுப்பினர் வாசகி, உடன்குடி நகர இந்து முன்னணி செயலர் ஆத்திசெல்வம், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்து ஒற்றுமை, இந்துக்களின் சமய சடங்குகள் அன்றாட நடைமுறைகளில் அறிவியல், பாரத நாட்டின் பழம் பெருமைகள் குறித்து இந்து அன்னையர் முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மாயக்கூத்தன், இந்து முன்னணி மாநில பொதுச்செயலர் அரசு ராஜா ஆகியோர் பேசினார்கள். தொடர்ந்து இந்து சமய வகுப்புகளில் பங்கேற்ற சிறுவர்-சிறுமிகள், ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் கலைராணி, பத்திரசீதா, அனிதா, சந்திரா, ஷிபா, இசக்கியம்மாள், இசக்கி கனி, பாரதி, கோபிகா, தங்கசெல்வி, முத்துலட்சுமி, சுயம்புக்கனி, சரஸ்வதி, தமிழரசி, செல்வி, தமிழ்ச்செல்வி, யோகேஸ்வரி, ஆனந்தி, பட்டுரோஜா, முத்துகனி, வனசுந்தரி, முருகன், பால்துரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×