பரமன்குறிச்சி அருகே தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

பரமன்குறிச்சி அருகே சீருடையார்புரம் யூனியன் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் கல்வியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஜலில் வழங்கினார்.
தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தபோது எடுத்த படம்.
தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தபோது எடுத்த படம்.
Published on

உடன்குடி:

பரமன்குறிச்சி அருகே சீருடையார்புரம் யூனியன் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. உடன்குடி யூனியன் துணைச் சேர்மன் மீராசிராசூதீன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ஜெயவதி ரத்னாவதி, பரமன்குறிச்சி ஊராட்சி தலைவர் இலங்காபதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சாந்தி, ஆசிரிய பயிற்றுனர் ஆதிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியை சுகந்தி ஜெஸிந்தா வரவேற்றார்.

இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கல்வியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஜலில் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் வனஜா, குமாரசாமிபுரம் யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை டெல்வி ரெஜினாள், முந்திரி தோட்டம் அரசுப்பள்ளி உதவி ஆசிரியர் ஞானசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி ஆசிரியை சுந்தரி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com