search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே ஆரம்ப பள்ளி தொடங்க கோரி பெற்றோர்கள் போராட்டம்: மாணவர்களும் பள்ளிக்கு செல்லவில்லை
    X

    நெடிமொழியனூரில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திண்டிவனம் அருகே ஆரம்ப பள்ளி தொடங்க கோரி பெற்றோர்கள் போராட்டம்: மாணவர்களும் பள்ளிக்கு செல்லவில்லை

    • நெடிமோழியனூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • அரசு ஆரம்ப பள்ளி தொடங்கப்படும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கான அறிவிப்புகள் ஏதும் வரவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் நெடி மோழியனூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள் இங்கிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரம் உள்ள நீலதொட்டி அரசு பள்ளிக்குச் சென்று பயின்று வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதுடன், கல்வி கற்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே, நெடுமொழியனூர் கிராமத்தில் அரசு பள்ளி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

    இந்நிலையில் இந்த கல்வியாண்டில் நெடிமோழியனூரில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்கப்படும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கான அறிவிப்புகள் ஏதும் வரவில்லை. இக்கிராம மாணவர்கள் மீண்டும் நீலதொட்டி அரசு பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல், நெடிமோழியனூரில் உள்ள குழந்தைகள் மையத்தில் எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வித் துறை அதிகாரிகள் வந்து நெடி மோழியனூர் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்க உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும். அதுவரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என்று பொதுமக்கள் கூறினர்.

    தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு பள்ளிகள் மூடப்படும் நிலையில், தங்கள் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்க வேண்டுமென கிராம மக்கள் போராட்டம் நடத்துவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×